அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் சந்தேகம் நீடிக்கிறது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

0 153

(எம்.வை.எம்.சியாம்)
எம்.எச்.எம்.அஷ்ரப் பய­ணித்த ஹெலி­கொப்டர் விபத்­துக்­குள்­ளான விடயத்தில் எனக்கு இன்­னும் சந்­தேகம் இருக்­கி­றது என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் ஸ்தாப­கரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.எச்.எம்.அஷ்­ரபின் 75 ஆவது ஜனன தினத்தை நினைவு கூறும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு பண்­ட­ார­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் அஷ்­ரபின் பாரியார் பேரியல் அஸ்ரப் மற்றும் அவ­ரது மகன் அமான் அஷ்ரப், சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன, முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தேர்தல் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­கழ்வில் விசேட உரை­யொன்­றை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க,

தேசிய ஒற்­று­மையின் மீதான அஷ்­ரபின் அர்ப்­ப­ணிப்பு மற்றும் நாட்டின் அனைத்து பிர­ஜை­க­ளுக்கும் இடை­யி­லான நல்­லி­ணக்கம் உண்­மை­யி­லேயே சிறந்த விட­ய­மாகும். அவர் அவ­ரது மக்­களின் முன்­னேற்­றத்­திற்­காக முற்­றிலும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டார்.

மேலும் அஷ்ரப் அனை­வ­ரி­டமும் அனைத்து விட­யங்­க­ளையும் பகிர்ந்து கொள்­ப­வ­ராக காணப்­பட்­ட­துடன் சிறந்த மனி­த­ராக இருக்க வேண்டும் எனவும் நம்­பினார்.எமது நாடு பல்­ப­கு­தி­க­ளாக பிரிந்து கிடப்­பதை அவர் பார்க்க விரும்­ப­வில்லை. அவர் சில சமூ­கங்­களை அவர்­க­ளா­கவே பார்ப்­ப­தற்கும் அவ­ரது சமூ­கத்தை எம்­மு­டைய சமூ­க­மா­கவும் பார்ப்­ப­தற்கு விரும்­பினார். அவரை பொறுத்­த­மட்டில் நாம் அனை­வரும் ஒன்று தான்.

முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் பய­ணித்த ஹெலி­காப்டர் விபத்­துக்­குள்­ளான விடயத்தில் எனக்கு இன்­னும் சந்­தேகம் இருக்­கி­றது. இது ஒரு விபத்தா அல்­லது எதி­ரி­களால் திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட சதியா என்ற கேள்­விக்­கான பதில் இன்னும் புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது என்றார்.
இதன்­போது உரை­யாற்­றிய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ. சுமந்­திரன்
தமிழ் பேசு­கின்ற மக்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே எங்­க­ளு­டைய கட்­சி­யுடன் மிக நெருக்­க­மாக பய­ணித்­தவர். அது­மாத்­தி­ர­மின்றி தமிழ் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக அதி­கார பகிர்வு கொண்டு வரப்­பட்ட போது புதிய அர­சியல் அமைப்­புக்­காக அரும்­பா­டு­பட்­டவர். பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கென்று மிக நீண்ட உரை­யாற்­றி­யவர். இந்த புதிய சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்கு 2/3 பெரும்­பான்மை கிடைக்கும் வரையில் பேசு­வதை நிறுத்த வேண்டாம் என கூறி­யவர். இதனை தமிழ் சமூகம் என்­றைக்கும் மறக்­காது. நாம் அதனை எப்­போதும் நினைவு கூறுவோம் என்றார்.

முன்னாள் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய உரை­யாற்­றுகை­யில்­­,
1948 ஆம் ஆண்­டுக்கு முன்னர் உரு­வான இலங்கை சம­ச­மாஜக் கட்சி ஸ்ரீலங்கா கம்­யூனிஸ்ட் கட்சி ஐக்­கிய தேசிய கட்சி தேசிய அர­சியல் கட்­சியே அஷ்­ர­புக்கு தேவைப்­பட்­டது. அதுவே தேசிய ஐக்­கிய முன்­ன­ணி­யாகும். இன்று போன்று அன்று மாகா­ண ­சபை தேர்தல் காண­ாமலாக்­கப்­ப­ட­வில்லை. உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்தல் இடம்­பெ­றாத நேரத்தில் அஸ்­ரபின் நினைவு வரு­கி­ற­து.. அவர் இருந்­தி­ருந்தால் இதனை செய்­தி­ருப்பார் அவர் இந்த தேர்­த­ல்­களை வென்­றெ­டுக்க கடு­மை­யாக போரா­டி­யி­ருப்பார். ஆனால் இப்­போது போராட்டம் எது­வு­மில்லை. எம்மை போன்று சிலர் கதைப்­பதை தவிர வேறு எவரும் கதைப்­ப­தில்லை. அனை­வரும் சத்­த­மின்றி இருக்­கின்­றனர். என்றும் அஷ்ரப் தொடர்­பான நினை­வுகள் இன்றும் மனதில் நிறைந்­துள்­ளன என்றார்.

இதே­வேளை தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி உரை­யாற்­று­கையில் முன்னாள் தலைவர் அஸ்ரப் ஒரு தொலை­நோக்கு பார்வை உடை­யவர். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் அர­சாங்­கத்தில் அமைச்சராக செயற்பட்டார். அது குறுகிய காலமாக இருந்தாலும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் எது சரியோ அது அதற்காக மாத்திரம் போராடினார். எப்போதும் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த சமூகத்தில் உள்ள ஏனைய தலைவர்களுடன் ஒப்பிட்டால் அவரது சேவைகள் அனைவருக்கும் முன்மாதிரி என நினைக்கிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.