அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அஹ்னாப் விடுதலை

‍குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என அறிவித்து புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0 228

( எம்.எப். அய்னா)
அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டிருந்­த வழக்­கி­லி­ருந்த்து, அவர் விடு­வித்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.
வழக்குத் தொடுநர் தரப்பு, அஹ்னாப் ஜஸீ­முக்கு எதி­ராக கொண்­டு­வந்த, குற்­றச்­சாட்­டினை நிரூ­பிக்க முடி­யாமல் போனதால், அவரை விடு­வித்து விடு­தலை செய்­வ­தாக புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்த்­து­ரு­கொட நேற்று முன் தினம் (12) அறி­வித்தார்.

தன்­னிடம் கற்ற மாண­வர்­க­ளி­டையே அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி, பிற மதத்­த­வர்கள் மீது பகைமை உணர்வை தூண்­டி­ய­தாக முன் வைத்த குற்­றச்­சாட்­டுக்கள், சாட்­சி­யங்கள் ஊடாக நிரூ­பிக்க மு­டி­யாமல் போயுள்­ளதை அடுத்து அவர் இவ்­வாறு விடு­தலை செய்­யப்பட்­டுள்ளார்.

அவர் கற்­பித்த பாட­சா­லையின் அதிபர், மாண­வர்கள் என 5 பிர­தான சாட்­சி­யங்கள் ஊடா­கவும் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டினை நிரூ­பிக்க முடி­யாமல் போனதால், குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 200 ஆவது அத்­தி­யாயம் பிர­காரம், பிர­தி­வாதி தரப்பு நியா­யங்­களை கோரா­ம­லேயே அவரை விடு­வித்து விடு­தலை செய்­வ­தாக நீதி­பதி அறி­வித்தார்.

முன்­ன­தாக வழக்கை தொடுத்த சட்ட மா அதிபர், இவ்­வ­ழக்கின் சாட்­சி­யங்கள் எதுவும் வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் இந்த வழக்கை முன் கொண்டு செல்­வதா இல்­லையா என தீர்­மானம் ஒன்­றுக்கு வர கால அவ­காசம் பெற்­றுக்­கொண்டு கடந்த நவம்பர் 27 இல் நடந்த வழக்கு விசா­ர­ணையின் இடையே, வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சி விசா­ர­ணை­களை நிறைவு செய்­வ­தாக அறி­வித்­தி­ருந்தார். அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக இதனை அறி­வித்­தி­ருந்த்தார்.

இத­னை­ய­டுத்து சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், அஹ்னாப் ஜஸீம் சார்பில் வாதங்­களை முன் வைத்து, வழக்­குத்­தொ­டுநர் தரப்பு குற்றச் சாட்­டுக்­களை நிரூ­பிக்க தவ­றி­யுள்ள நிலையில், குற்­ற­வியல் சட்­டத்தின் 200 ஆவது அத்­தி­யாயம் பிர­காரம் பிர­தி­வாதி தரப்பு நியா­யங்­களை கோரா­ம­லேயே அவரை அனைத்து குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்தும் விடு­வித்து விடு­தலை செய்ய வேண்டும் என கோரினார்.

இத­னை­ய­டுத்தே இந்த வழக்கு நேற்று முன் தினம் 12 தீர்ப்­புக்­காக விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது அஹ்னாப் ஜஸீம் சார்பில் சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான சாஜித் மற்றும் ஹுஸ்னி ராஜிஹ் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

இதன்­போது தீர்ப்பை வாசித்த நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட, முறைப்­பாட்­டாளர் தரப்பு குற்­றச்­சாட்டை நிரூ­பிக்க தவ­றி­யுள்­ள­தாக அஹ்னாப் ஜஸீமை அவர் தரப்பு நியா­யங்­களை கோரா­ம­லேயே விடு­வித்து விடு­தலை செய்­வ­தாக அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து அஹ்னாப் சார்பில் சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர, குற்­ற‌­வியல் ச‌ட்­டத்தின் 17 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் நட்ட ஈடு கோரி விண்­ண‌ப்பம் செய்தார். அதனை நிரா­க­ரித்த நீதி­மன்றம் நட்ட ஈட்­டினை பெற்­றுக்­கொள்ள உரிய நீதி­மன்­றங்கள் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அறி­வித்­தது.
இத­னை­விட, அஹ்னாப் கைது செய்­ய­ப்படும் போது பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்ட அவ­ரது மடிக்­க­ணினி, கைய­டக்கத் தொலை­பேசி, நவ­ரசம் புத்­த­கத்தின் 150 பிர­திகள் உள்­ளிட்ட பொருட்­களை விடு­விக்க உத்­தரவிட வேண்டும் என நீதி­மன்றில் கோரப்­பட்­டது. எனினும் அந்த ஒரு பொருளும் புத்­தளம் மேல் நீதி­மன்ற வழக்­கா­வ­ணத்தில் கோவை இட­ப்ப­ட­வில்லை என்­பதை சுட்­டிக்­க­ாட்­டிய நீதி­பதி, வழக்கு கோவையை பரி­சீ­லுக்கும் போது கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றி­லேயே அவை பட்­டி­ய­லி­டப்பட்­டுள்­ளமை தெரி­வ­தாக குறிப்­பிட்டார்.

அதனால், அஹ்னாப் ஜஸீம் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளமை குறித்த மேல் நீதி­மன்ற தீர்ப்பை கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் நகர்த்தல் பத்­திரம் ஊடாக அறி­வித்து, அப்­பொ­ருட்­களை விடு­வித்­துக்­கொள்­ளு­மாறு நீதி­பதி ஆலோ­சனை வழங்­கினார்.

பின்னர் நீதி­மன்­றுக்கு வெளியே ஊட­க­வி­ய­ல­­ாளர்­களை அஹ்னாப் ஜஸீம் தனது சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் சந்­தித்த நிலையில், தனது விடு­த­லைக்­காக உத­விய அனைத்து தரப்­பி­ன­ருக்கும் நன்றி தெரி­வித்தார். குறிப்­பாக புத்­தளம் மேல் நீதி­மன்ற‌ வழக்கை கையாண்ட தனது சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், தனது அடிப்­படை உரிமை மீறல் மனுவில் ஆஜ­ராகும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான கனக ஈஸ்­வரன், இல்­லியாஸ், ஆரம்பம் முதல் சட்ட உத­வி­களை செய்த சட்­டத்­த­ரணி சஞ்­ஜய வில்சன் ஜய­சே­கர ஆகி­யோ­ருடன் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஹுஸ்னி ராஜிஹ், சுவஸ்­திகா அரு­லிங்கம், ரத்­நா­யக்க உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் ஊட­கங்கள் மற்றும் ஊட­க­வி­ய­ல­ா­ளர்கள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் என அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விப்­ப­தாக குறிப்­பிட்டார்.

அஹ்னாப் ஜஸீம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு சுமார் 579 நாட்­களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அவ­ருக்கு எதி­ராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் பீ. 44230/20 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை தக­வல்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அதனை மையப்­ப­டுத்தி சட்ட மா அதிபர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­துள்­ளது.

இந்த வழக்கு இறு­தி­யாக கடந்த செப்­டம்பர் 9 ஆம் திகதி வெள்­ளி­யன்று விசா­ர­ணைக்கு வந்த போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக்க மன்றில் ஆஜ­ரானார். குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீ­முக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான சஞ்சய் வில்சன் ஜயசேகர, ஹுஸ்னி ராஜிஹ் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜராகியிருந்த்தார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புத்தளம் – மதுரங்குளி பகுதியில் உள்ள எக்ஸலென்ஸி எனும் பெயரை உடைய பாடசாலை மாணவர்களுக்கு தீவிரவாத கொள்கைகளை ஊட்டி இன , மத, முரண்பாடுகள் மற்றும் பகை உணர்வினை தூண்டியதாக அதில் கூறப்பட்டிருந்தமை குறிப்­பி­டத்­தக்­க­து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.