மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான முறையற்ற நடவடிக்கைகளை நிறுத்துங்கள்

சபையில் மு.கா.தலைவர் ஹக்கீம்

0 243

நாட்டில் மர­ணங்கள் சம்­ப­விக்­கும்­போது சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி வரும் மரண விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சில பிர­தே­சங்­களில் தேவை­யற்ற விதத்தில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள முயற்­சிக்­கப்­ப­டு­வதை நிறுத்தி, அவர்­க­ளுக்கு நியாயம் வழங்­கு­மாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,நீதி அமைச்சர் விஜே­தாச ராஜ­ப­க்ஷ­விடம் பாரா­ளு­மன்­றத்தில் வேண்­டுகோள் விடுத்தார் .

நீதி அமைச்சு தொடர்­பான வரவு செலவுத் திட்ட குழு­நிலை விவாதம் கடந்த சனிக்­கி­ழமை(2) பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற போதே முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் இதனை நீதி அமைச்­சரின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்தார் .

அங்கு உரை­யாற்­று­கையில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
மரண விசா­ரணை அதி­கா­ரிகள் கடந்த பல்­லாண்டு கால­மாக மிக பொறுப்பு வாய்ந்­த­தொரு காரி­யத்தை நிறை­வேற்றி வரு­கி­றார்கள் . அவர்­களை கண்­கா­ணிப்­பது என்ற போர்­வையில் நீதி அமைச்சின் அதி­கா­ரிகள் சிலர் அவர்­க­ளுக்கு எதி­ராக முறை­யற்ற விதத்தில் நட­வ­டிக்கை எடுக்க முயற்­சிப்­ப­தாக அறியக் கிடைக்­கின்­றது.

இலங்கை மரண விசா­ரணை அதி­கா­ரிகள் சங்கம் (Coroners Association of Sri Lanka) அதன் உறுப்­பி­னர்கள் நடத்­தப்­படும் மீதம் குறித்தும், அவர்­க­ளது நிலை­மையைச் சுட்­டிக்­காட்­டியும் நீண்ட மகஜர் ஒன்றைத் தயா­ரித்­தி­ருந்­தது.அதை முன்­வைத்தே அவர்­க­ளுக்கு நியாயம் வழங்­கு­மாறு முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் நீதி அமைச்­ச­ரிடம் பாரா­ளு­மன்­றத்தில் இந்த வேண்­டு­கோளை விடுத்தார்.

இறந்­த­வரின் நோய் நிர்­ணய அட்டை , மருத்­துவ குறிப்­புகள் மற்றும் நம்­பத்­த­குந்த போதிய சாட்­சி­யங்கள் என்­பன இருந்தால், கட்­டா­ய­மாக உடற்­கூற்று பரி­சோ­தனை நடத்­தப்­பட வேண்­டிய நிர்ப்­பந்­த­மற்ற சட­லங்­களை விடு­விக்கும் அதி­காரம் மரண விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு இருக்­கின்­றது . ஆயினும், அவர்கள் சரி­யான முறையில் நடந்து கொள்ளும் போதிலும், தேவை­யற்­ற­வி­தத்தில் குறை கண்டு அவர்கள் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க நீதி அமைச்சின் அதி­கா­ரிகள் சிலர் முயற்­சிப்­ப­தா­கவும், அதனை பற்றி கண்­ட­றிந்து முக்­கி­ய­மான ஒரு பொறுப்பை நிறை­வேற்­று­கின்ற மரண விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு அநீதி இழைக்­கா­த­வாறு இதில் நியா­ய­மான ஒரு முடிவை மேற்­கொள்­ளு­மாறும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹக்கீம் நீதி­ய­மைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்தார் .

பொது­வாக மரண விசா­ரணை அதி­கா­ரியின் தீர்­மா­னத்தைப் பொறுத்து சந்­தேகம் இல்­லாத மர­ணங்கள் விரை­வாக விடு­விக்­கப்­ப­டு­வ­தா­கவும், குறிப்­பாக முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை ஒரு குறிப்­பிட்ட நேரத்­துக்குள் நல்­ல­டக்கம் செய்யப்பட வேண்டியிருப்பதால், அவற்றை விடுவிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்,பிரஸ்தாப மகஜரில் உள்ள விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுமென்றும் நீதி அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.