அரபு மத்­ர­ஸாக்­கள் ஒழுங்­­கு­ப­டுத்­தப்­ப­டு­மா?

0 294

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் அமைந்­துள்ள அர­பு மத்­ரஸா ஒன்­றில் கல்வி பயின்று வந்த 13 வய­தான மாண­வன் ஒருவன் சட­ல­மாக மீட்­கப்­பட்ட சம்­பவம் பெரும் அதிர்­­வ­லை­களைத் தோற்­று­வித்­துள்­ளது. காத்­தான்­குடி பிர­­தே­சத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் தற்­கொலை செய்து கொண்­டி­ருக்க வாய்ப்­பில்லை என்றும் அவர் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என தாம் சந்­தே­கிப்­ப­தா­கவும் மாண­வனின் பெற்­றோரும் மத்­ர­சாவின் அய­ல­வர்­களும் கூறு­கின்­றனர்.

குறித்த மத்­ரசா நிர்­வாகியான மெள­லவி மீது ஏலவே பல குற்­றச்­சா­ட்­டுக்கள் உள்ள­தா­கவும் இதற்கு முன்­ன­ரும் மாண­வர்­களைத் தாக்­கியதாக அவர் மீது பொலிஸ் முறைப்­பா­டுகள் உள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­­யா­கி­யுள்­ளன. இவ்­­வா­றான ஒரு சம்ப­வத்­திற்­காக அவர் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­தா­கவும் சட்­டத்­த­ரணி ஒருவர் உறு­திப்­ப­­டுத்­தி­யுள்­ளளார்.

இச் சம்­பவம் நாட்டில் பல்­கி­ப் பெரு­கி­யுள்ள அரபு மத்­ர­­ஸாக்கள் குறித்த கவ­னத்தை மீண்டும் ஈர்த்­துள்­ளது. அர­புக் கல்­லூ­ரிகள் தொடர்பில் பெளத்த பிக்­கு­களும் அர­சி­யல்­வா­தி­களும் சிங்­கள ஊட­கங்­களும் முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் ஒரு­பு­ற­மி­ருக்க முஸ்லிம் சமூகம் சுய மீளாய்வு ஒன்றைச் செய்ய வேண்­டிய கட்­டா­யத்­தை இந்த சம்­பவம் வலி­யு­றுத்­­து­வ­தாக அமைந்­துள்­ள­து.
இந்த நாட்டில் மிகச் சிறந்த உலமாக்களை உரு­வாக்கி இலங்கை முஸ்லிம் சமூ­கத்­­திற்கு தலை­மைத்­து­வம் வழங்­­கு­கின்ற மார்க்க வழி­காட்­டல்­களை வழங்­கு­கின்ற ஆளு­மை­களை உரு­வாக்­கிய நன்கு கட்­ட­மைக்­கப்ப­ட்ட புகழ் பெற்ற அர­புக் கல்­லூ­ரி­களை நாம் மறந்­து­விட முடி­யாது. குறித்த அரபுக் கல்­லூ­ரிகள் உரிய முறையில் பதிவு செய்­யப்­பட்டு நிர்­வாக ரீதி­யாக ஒழுங்­க­மை­க்­கப்­பட்டு இன்று வரை இயங்கி வரு­கின்­றன. இவற்றின் பாடத்­திட்­டங்கள் சம­காலத்திற்கு எந்­த­ளவு தூரம் ஒத்துப் போகின்­றன என்ற கேள்விகள் எழுந்­தாலும் மாண­வர்­களை சிற­ந்த ஆளு­மை­க­ளாக உரு­வாக்­கு­வதில் இக் கல்­லூ­ரிகள் குறிப்­பி­டத்­தக்க பங்­க­­ளிப்பை வழங்­குகின்றன என­லாம்.

எனினும் கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளுக்குள் நாட்டில் புற்றீ­சல்கள் போல் உரு­வெ­டுத்த பல நூற்றுக் கணக்­கா­ன அரபு மத்­ர­சாக்கள் சில தனி நபர்­களால் தமது பிழைப்­புக்­காக நடத்­தப்­பட்டு வரு­வதை காண்­கிறோம். ஊருக்கு ஊர் தெரு­வுக்குத் தெரு மத்­ர­சாக்கள் முளைத்­துள்­ளன. எந்­த­­வித பாடத்­திட்­டங்­களோ அல்­லது பயிற்­று­விக்­கப்­பட்ட விரி­வு­ரை­யா­ளர்­களோ இன்றி நினைத்­த­வாறு இவை இயங்கி வரு­கின்­றன. இவற்றில் சில முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள போதி­லும் அவை ஒரு கல்வி நிலையம் கொண்­டி­ருக்க வேண்­டிய அடிப்­படை வச­தி­களைக் கூட கொண்­டி­ருப்­ப­­­தில்­லை.

பெற்றோர் தமது பிள்­­­ளைகள் புனித குர்­ஆனை மன­ன­­மிட்டு மார்க்கத்தைக் கற்­ற­வ­னாக வெளி­யாக வேண்டும் என்ற நன்­னோக்­கி­லேயே மத்­ர­சாக்­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்­றனர். இதற்காக மாதாந்தம் ஒரு தொகைப் பணத்­தையும் செலவு செய்­­கின்­றனர். எனினும் இவ்­வா­றான முறை­யான நிர்­வா­கமும் மேற்­பார்­வையும் இல்லாத மத்­ர­சாக்களில் மாண­வர்கள் மீதான துஷ்­பி­ர­யோ­கங்­கள் அடிக்­கடி பதி­வாகின்­றன. மாண­வர்கள் உடல் ரீதி­யா­கவும் உள ரீதி­யா­கவும் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு இலக்­கா­கின்­றனர். சிறுவர் உள­வியல் தொடர்பில் எந்­த­வி­த­மான முன் அறிவோ அனு­ப­வமோ இல்­லா­த­வர்­க­ளா­லேயே இவ்­வா­றான துர­திஷ்­ட­மான சம்­ப­வங்கள் அரங்கேற்­றப்­ப­­டு­கின்­றன.

என­வேதான் இவ்­வா­றான முறை­யான நிர்­வா­க­மற்ற அர­பு மத்­ர­சாக்கள் மற்றும் கல்­லூ­ரி­கள் தொடர்பான மீள்­வா­சிப்பு ஒன்றை முஸ்லிம் சமூகம் விரைந்து முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­­­வல்கள் திணைக்­களம் கடந்த காலங்­களில் அரபுக் கல்­லூ­ரி­களை ஒழுங்­கு­ப­டுத்த சில முயற்­சி­களை எடுத்த போதிலும் அது பின்னர் கைவிடப்­பட்­டு­விட்­டது. குறித்த நட­வ­டிக்­கைகள் மீளவும் தொட­ரப்­பட வேண்டும். இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மீதும் பாரிய பொறுப்­பு­ள்­ளது. முஸ்லிம் சிவில் சமூ­கமும் புத்திஜீவி­க­ளும் கூட இதனை முக்­கிய பிரச்­சி­னை­யாகக் கருதி செயற்­பட வேண்­டி­யுள்­ளது. இல்­லா­த­பட்­சத்தில் தொடர்ந்தும் நாம் முஸ்அப் போன்­ற மாண­வச் செல்­வங்­களை இழக்க வேண்டி வரும் என்­பதை எச்­ச­ரிக்க விரும்­பு­கி­றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.