முஸ்லிம் பள்ளிவாசல்களை புதிதாக பதிவு செய்வதில் பிரச்சினை இல்லை

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சபையில் பதில்

0 228

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
பள்­ளி­வா­சல்கள் மற்றும் மத்ர­சாக்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்கை மேற்­கொள்­வதில் பிரச்­சினை இல்லை. அர­புக்­கல்­லூரி தொடர்­பான ஆவ­ணங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­சினால் அனு­மதி கிடைக்­கப்­பெற்றால் பதிவு செய்ய முடியும் என புத்­த­சா­சன,சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அடுத்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தில் சுற்­று­லாத்­துறை மற்றும் காணி அமைச்சு மற்றும் புத்­த­சா­சன,சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீட்டு சட்­ட­மூலம் மீதான குழு­நிலை விவா­தத்தில் எதிர்க்­கட்சி உறுப்­பினர் எம்.எஸ் தெளபீக், இம்ரான் மஹ்ரூப், ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் உரை­யாற்­றும்­போது கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
எம்.எஸ். தெளபீக் எம்.பி தெரி­விக்­கையில், ஈஸ்டர் தாக்­கு­த­லுக்கு பின்னர் முஸ்லிம் பள்­ள­வா­சல்கள் அரபுக் கல்­லூ­ரிகள் முஸ்லிம் கலா­சார திணைக்­க­ளத்தில் பதிவு செய்­வ­தில்லை. அதே­போன்று முஸ்லிம் கலா­சார திணைக்­க­ளத்தில் தற்­பாேது ஆளணி பற்­றாக்­குறை இருந்து வரு­கி­றது. அதனால் அங்கு பணிகள் முறை­யாக இடம்­பெ­றாமல் இருக்­கின்­றன என்றார்.

இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தெரி­விக்­கையில், 3 மதங்­க­ளுக்கு தனி­யான அமைச்சு இருந்து வந்­தது. தற்­போது பெளத்த சாசன அமைச்சின் கீழ் திணைக்­க­ளங்கள் ஊடா­கவே ஏனைய மத நட­வ­டிக்­கைகள் வழி­நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. தொல் பொருள் திணைக்­களம் அனைத்து இன மக்­க­ளையும் சம­மாக மதிக்­கின்ற வகையில் நெறிப்­ப­டுத்தப்ப­ட வேண்டும் என்றார்.

மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­விக்­கையில், நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் நோர்வூட் பிர­தே­சத்தில் நூறு வரு­டங்­ளாக செயற்­பட்டு வந்த பள்­ளி­வாசல் அங்­குள்ள ஏழை மக்­களால் நிர்­வ­கிக்­கப்­பட்­டது. பள்­ளி­வாசல் அமைந்­தி­ருந்த காணியில் வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்று அங்கு 3 குடும்­பங்­க­ளுக்கு வீடு­களை கட்­டிக்­கொ­டுத்து அதன் மூலம் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­மானம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­தி­ருந்த நிலையில், பிர­தேச செய­லாளர் பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்கும் காணி அரச காணி என தெரி­வித்து வழக்கு தொடுத்தார். அதில் அவர் வெற்­றி­பெற்­றதால் தற்­போது அந்த மக்­க­ளுக்கு பள்­ளி­வாசல் இல்­லாத நிலை எற்­பட்­டுள்­ளது. அத­னால் இது­தொ­டர்­பாக தலை­யிட்டு பிரச்­சி­னையை தீர்த்­து­வைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

அதே­நேரம் 90 வரு­டங்­க­ளுக்கும் அதிக கால­மாக மஹர சிறைச்­சா­லையில் இருந்­து­வந்த பள்­ளி­வாசல் ஈஸ்டர் தாக்­கு­த­லு­க்கு பின்னர் மூடப்­பட்­டுள்­ளது. அத­னையும் மீண்டும் திறப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில், முஸ்லிம் கலா­சார திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­களை முறை­யாக மேற்­கொண்டு செல்ல தேவை­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. திணைக்­க­ளத்தில் அதி­கா­ரி­களின் பற்­றாக்­குறை இருக்­கி­றது. அங்கு மோச­டி­களில் ஈடு­பட்­டு­வந்த அதி­கா­ரி­களை நீக்­கு­வ­தற்கு எடுத்த நட­வ­டிக்­கை­யாலே அந்த குறை­பாடு ஏற்­பட்­டுள்­ளது. என்­றாலும் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­களில் குறை­பாடு ஏற்­ப­டாமல் மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கிறோம். ஏதா­வது பிரச்­சினை இருக்­கு­மானால் அது தொடர்பில் எனக்கு அறி­வித்தால் நான் அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்பேன்.

அத்­துடன் பள்­ளி­வா­சல்கள் மற்றும் மத்­ர­சாக்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்கையை மேற்­கொள்­வதில் பிரச்­சினை இல்லை. மத்­­ர­சாக்கள் தொடர்­பான ஆவ­ணங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­சினால் அனு­மதி கிடைக்­கப்­பெற்றால் பதிவு செய்ய முடியும்.

அத்­துடன் வரு­மானம் குறைந்த பள்­ளி­வா­சல்கள் தொடர்­பாக புதிய வேலைத்­திட்டம் மேற்­கொள்ள இருக்­கிறோம். புத்­த­சா­ச­னத்­துக்கு மாத்­தி­ரமே நிதியம் இருக்­கி­றது. ஏனைய மதங்­க­ளுக்கு நிதியம் இல்லை. அது தொடர்­பா­கவும் நட­வ­டிக்கை எடுக்க இருக்­கிறோம். அதே­போன்று திரு­கோண­ம­லையில் தொல்­பொருள் ஆய்வு நட­வ­டிக்­கை­களை எதிர்­கா­லத்தில் மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுப்போம்.

மேலும் நோர்வூட் பள்­ளி­வாசல் தொடர்­பாக முஸ்லிம் விவகார திணைக்களத்தினால் அறிக்கை கோரி இருக்கிறோம். அறிக்கை கிடைத்த பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியுமாகும். அத்துடன் தற்போது இந்த விடயம் சட்ட பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. அதனால் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடியுமான நிவாரணங்களை வழங்க முயற்சிக்கிறேன். அதேநேரம் மஹர பள்ளிவாசல் தொடர்பாக சிறைச்சாலை திணைக்களத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்போம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.