காஸாவில் தற்காலிக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் தாக்குதல்களும் மனிதாபிமான நெருக்கடிகளும் மோசமடைந்துள்ளன.
ஒக்டோபர் 7 முதல் நேற்று மாலை வரை காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16248 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 7112 சிறுவர்களும் 4885 பெண்களும் 286 மருத்துவ உத்தியோகத்தர்களும் 32 மருந்தாளர்களும் 81 ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.இதேவேளை மேலும் 7600 பேர் காணாமல் போயுள்ளதுடன் 43616 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு மேலதிகமாக மேற்கு கரையில் 254 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிபரங்களை பலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.