காஸாவில் குண்டுத் தாக்­கு­தல்­களை விடவும் நோய்­களால் அதி­க­மானோர் உயி­ரி­ழக்கும் ஆபத்­து

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

0 377

காஸாவின் சுகா­தார நெருக்­கடி மேலும் தொடர்ந்தால், முற்­று­கை­யி­டப்­பட்ட காஸா பகு­தியில் வாழும் பலஸ்­தீ­னி­யர்கள் நோய்­களால் உயி­ரி­ழக்கும் ஆபத்து அதிகம் என உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

15,000 க்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னி­யர்கள், காஸாவில் இஸ்­ரேலின் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களால் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் பாதிக்கும் மேற்­பட்­ட­வர்கள் பெண்கள் மற்றும் குழந்­தை­க­ளாவர்.

“காஸாவில் சீர்­கு­லைந்து போயுள்ள சுகா­தார கட்­ட­மைப்பை மீள உயிர்ப்­பிக்க முடி­யா­விட்டால் குண்டுத் தாக்­கு­தல்­களில் இறந்­த­வர்­களை விட அதி­க­மான மக்கள் நோயால் இறக்க வேண்டி வரும்” என்று உலக சுகா­தார நிறு­வ­னத்தின் மார்­கரெட் ஹாரிஸ் ஜெனீ­வாவில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் மாநாட்டில் குறிப்­பிட்டார்.

வயிற்­றுப்­போக்கு நோய்கள் உட்­பட தொற்று நோய் பர­வலின் அதி­க­ரிப்பு குறித்து அவர் கவலை தெரி­வித்தார்.

“காஸாவில் மருந்­துகள் இல்லை, தடுப்­பூசி நட­வ­டிக்­கைகள் இல்லை, பாது­காப்­பான நீர், சுகா­தாரம் மற்றும் உணவு இல்லை. குழந்­தை­க­ளி­டையே வயிற்­றுப்­போக்கு அதி­க­ரித்­துள்ள மிக அதிக எண்­ணிக்­கை­யி­லான சம்­ப­வங்­களை நாங்கள் கண்டோம்” என இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் வாழ்க்கை நிலை­மைகள் குறித்த ஐ.நா அறிக்­கையை மேற்கோள் காட்டி ஹாரிஸ் கூறினார்.
“நான் நிறையப் பெற்­றோரைச் சந்­தித்தேன்… தங்கள் குழந்­தை­க­ளுக்கு என்ன தேவை என்று அவர்­க­ளுக்குத் தெரியும். அவர்­க­ளுக்கு பாது­காப்­பான தண்ணீர் கிடைக்­க­வில்லை, அது அவர்­களை கடு­மை­யாக பாதித்­துள்­ளது.” என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த மாத தொடக்­கத்தில், முற்­று­கை­யி­டப்­பட்ட பகு­தியில் 70,000 க்கும் மேற்­பட்ட கடு­மை­யான சுவாச நோய்த்­தொற்­றுகள் மற்றும் 44,000 க்கும் மேற்­பட்ட வயிற்­றுப்­போக்கு நோயா­ளர்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வனம் கூறி­யது.

பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐ.நா. முக­வ­ர­க­மான UNRWA, காஸாவில் குடிநீர் பற்­றாக்­கு­றையால் மக்கள் உவர் நீரை குடிக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ள­தாக முன்­னரே எச்­ச­ரித்­துள்­ளது.

கடந்த வாரம், ஐநா மனி­தா­பி­மான விவ­கா­ரங்­களின் ஒருங்­கி­ணைப்பு அலு­வ­லகம் (OCHA) 700 பேருக்கு ஒரு ஷவர் யூனிட் மற்றும் 150 பேருக்கு ஒரு கழிப்­ப­றையே உள்­ள­தாக கூறி­யது.

காசாவின் மிகப்­பெ­ரிய மருத்­து­வ­ம­னை­யான அல்-­ஷிஃபா மருத்­து­வ­மனை செய­லி­ழந்­துள்­ளமை ஒரு “சோகம்” என்று ஹாரிஸ் வர்­ணித்தார்.
காசாவில் உள்ள ஐ.நா குழந்­தைகள் அமைப்பின் செய்தித் தொடர்­பாளர் ஜேம்ஸ் எல்டர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறு­கையில், இஸ்­ரேலின் குண்டுத் தாக்­கு­தல்­களால் காய­ம­டைந்த குழந்­தைகள் அழுக்கு நீரைக் குடிப்­பதால் இரைப்பை குடல் அழற்­சியால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான குழந்­தை­களால் மருத்­து­வ­ம­னைகள் நிரம்­பி­யுள்­ளன என்றார்.

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே எட்­டப்­பட்ட நான்கு நாள் போர் நிறுத்­தத்தை மேலும் இரண்டு நாட்­க­ளுக்கு நீடிக்க மத்­தி­யஸ்­தர்கள் உடன்­பாட்டை எட்­டி­யுள்­ள­தாக கத்தார் அறி­வித்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச்­செ­ய­லாளர் அன்­டோ­னியோ குட்­டெரெஸ், போர் நிறுத்­தத்தை “நம்­பிக்கை மற்றும் மனி­த­நே­யத்தின் வெளிப்­பாடு” என்று விப­ரித்தார். ஆனால் காஸாவில் உள்ள மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்ய இந்த யுத்த நிறுத்தம் போதி­ய­தாக இல்லை என்றும் அவர் எச்­ச­ரித்தார்.
“இது மிகவும் துன்­பப்­படும் காஸா மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான உத­வி­களை மேலும் அதி­க­ரிக்க உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனினும் இந்த குறு­­கிய காலத்­திற்குள் மக்­களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது சாத்தியமற்றது” என்றும் குட்டெரெஸ் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.