கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த காதி நீதிவான் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கறுவா தோட்ட பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸார் சந்தேக நபரான காதி நீதிபதியை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் நேற்றுக்காலை ஆஜர்படுத்தியதையடுத்து நீதிவான் அவரை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஒருவருக்கு ஆவணமொன்றினைக் கையளிக்கும் போது ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஸ்தலத்திலேயே இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது சேய்யப்பட்டார்.
இது தொடர்பில் விடிவெள்ளி காதி நீதிவான்கள் போரத்தைத் தொடர்பு கொண்டு வினவியபோது சட்டரீதியான பணப் பரிமாற்றங்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறல்லாது பணம் பெற்றுக்கொள்ள முடியாதெனவும் ஏற்கனவே காதி நீதிபதிகள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. -Vidivelli