எரிபொருள் விலை குறைப்பு; பிரதமர் ரணில்

0 1,020

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தை  விலைக்கு ஏற்ப அனைத்து ரக பெற்றோல் மற்றும் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப் போவதாக பாராளுமன்றத்தில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதன்படி அனைத்து ரக பெற்றோல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும்,  ஆட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்திற்கமைய, 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 125 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 149 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 101 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 121 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது..

குறித்த விலைக்குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.