உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி பேராயர் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது : அலஸ்

0 199

ஏ.ஆர்.ஏ.பரீல்

‘‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் ஒழுங்­காக நடக்­க­வில்லை என பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தொட­ராக கூறி வரு­கிறார். பேராயர் மற்றும் ஏனையோர் ஒன்­றி­ணைந்து நாம் இவ்­வி­வ­கா­ரத்­துக்கு தீர்வு பெற்றுக் கொள்வோம். கர்­தினால் அவர்கள் இந்தப் பிரச்­சி­னையை மைய­மாக வைத்து இன, மத பேதங்­களை ஏற்­ப­டுத்த வேண்டாம்’’ என சிவில் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸ் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் வரவு செலவுத் திட்ட விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலேயே அமைச்சர் டிரான் அலஸ் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்­துள்ளார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் முறை­யாக நடப்­ப­தில்லை என பேராயர் தொட­ராகக் குறை கூறிக்­கொண்டே இருக்­கிறார். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் சுமார் 90 வீதம் முடி­வ­டைந்து விட்­ட­தாக ஓரி­டத்தில் நான் தெரி­வித்­தி­ருந்தேன். இவ்­வே­ளையில் கர்­தினால் அவர்கள் என்னை விமர்­சித்து அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்­டி­ருந்தார். இது தொடர்­பான நட­வ­டிக்­கைகள் 90 வீத­மா­னவை முற்றுப் பெற்று விட்­டன.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் மேல் நீதி­மன்றில் 42 வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. இவ்­வ­ழக்­கு­களில் பிர­தி­வா­தி­களின் எண்­ணிக்கை 80 ஆகும். இவர்­களில் 23 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். எங்­க­ளது விசா­ர­ணைகள் பெரு­ம­ளவில் முற்றுப் பெற்று விட்­டன. என்­றாலும் கர்­தினால் அவர்கள் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தமக்­கு வழங்­கப்­ப­ட­வில்லை. நாங்கள் மறைத்து விட்டோம் என்று கூறி­வந்தார்.

நான் ஜனா­தி­ப­தி­யிடம் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கலந்து பேசினேன். ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை கர்­தி­னா­லுக்கு முழு­மை­யாக வழங்கும் படி நான் ஜனா­தி­ப­தியைக் கேட்டுக் கொண்டேன். பின்பு ஆணைக்­கு­ழுவின் அறிக்கை அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. அறிக்­கை­யைப் பெற்றுக் கொண்­டமை தொடர்பில் கடிதம் ஒன்று வழங்கும் படி நான் அவர்­க­ளைக் கேட்டுக் கொண்டேன். அத்­தோடு இது தொடர்பில் அதா­வது நாங்கள் மேற்­கொண்ட புலன் விசா­ர­ணைகள் தொடர்பில் முன்­வைப்­பு ஒன்­றினைச் செய்­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தரும்­படி வேண்டிக் கொண்டேன். ஆனால் இது­வரை அவர்கள் எமக்கு நேரம் ஒதுக்கித் தர­வில்லை.

இது தொடர்பில் அவர்­களைத் தொடர்பு கொண்டு வின­வினால் அது நீண்­ட அறிக்கை. நாங்கள் அறிக்­கையை வாசித்துக் கொண்­டி­ருக்­கிறோம் என்று தான் கூறி­வ­ரு­கி­றார்கள். ஆனால் அடிக்­கடி ஒவ்­வொரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் கடிதம் அனுப்பிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஒவ்­வொரு நபர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்தி வரு­கி­றார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அறிக்­கையை வாசித்து முடிக்­க­வில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­பதி ஏதா­வது கூறினால் அல்­லது ஊடக மாநா­டு­களில் கருத்து வெளி­யிட்டால் அவற்­றுக்கும் பதில் அறிக்­கைகள் வெளி­யி­டு­கி­றார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் கர்­தினால் தீர்­வொன்­றுக்கு வர­வேண்­டிய தேவை­யி­ருந்தால் அவர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து எம்­முடன் சேர்ந்து தீர்வு பெற்றுக் கொள்வோம். நான் வரு­டாந்தம் கூறி வரு­கிறேன். நாம­னை­வரும் ஒன்­றி­ணைந்து இவ்­ வி­வ­கா­ரத்­திற்கு தீர்வு காணுவோம் என்று. ஆனால் அவர்கள் இணங்­கு­கி­றார்கள் இல்லை. தொடர்ந்து இவ்­வி­வ­கா­ரத்தில் அரச தலை­வ­ருக்கு அல்­லது அர­சாங்­கத்­துக்கு சவால் விடுக்­கி­றார்கள்.

இவ்­வி­வ­கா­ரத்தில் கர்­தினால் அவர்­க­ளுக்கு நான் ஒன்று கூறிக் கொள்ள விரும்­பு­கிறேன். இந்த விவ­கா­ரத்தை மைய­மாக வைத்து சாதி, மத பேதங்­களை நாட்டில் உரு­வாக்க வேண்டாம். 2020 ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலின் பின்பு முத­லா­வது அமைச்­ச­ரவை கண்­டி­யிலே சத்­தியப் பிர­மாணம் செய்து கொண்­டது. அன்­றைய தினத்­திற்கு முதல் நாள் ஹோட்­ட­லிலே தங்­கினோம். நானும் அங்கு சென்­றி­ருந்தேன். இந்த வைப­வத்தில் நானும் கலந்து கொண்டேன். விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, டலஸ் அல­கப்­பெ­ரும ஆகியோர் கலந்து கொண்­டனர்.

அப்­போது முன்னாள் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து உதய கம்­மன்­பி­ல­வுக்கு தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தது. ஏதா­வது செய்­யுங்கள். பெரிய பிரச்­சினை. அலி ­சப்­ரிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்­டா­மென கர்­தினால் கூறு­கிறார். அலி சப்ரி முஸ்லிம் ஒருவர் என்­பதால் அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என்­கிறார் என தெரி­விக்­கப்­பட்­டது.

இரவு முழு­வதும் இவ்­வி­வ­காரம் பேசப்­பட்­டது. இறு­தியில் அலி­ சப்­ரிக்கு நீதி அமைச்சு வழங்­கப்­பட்­டது. இவ்வாறான அழுத்தங்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது.

நாமனைவரும் ஒன்றிணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டும். இல்லையேல் இன்னும் 10 வருடங்கள் சென்றாலும் இதையே பேசிப் பேசி இருப்பார்கள். கத்தோலிக்க வாக்குகள் மற்றும் எதையாவது எதிர்பார்த்து செயற்பட வேண்டாமென நான் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.