கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை குறிவைத்தே தீர்மானங்களை எடுத்­த­னர்

பாரிய வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

0 232

(எம்.வை.எம்.சியாம்)
கொவிட் தொற்று ஏற்­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் அப்­போ­தி­ருந்த ஆட்­சி­யா­ளர்கள் முஸ்லிம் மக்­களை குறி­வைத்தே தீர்­மா­னங்கள் எ­டுத்­தனர். அத்­தோடு கடந்த ஆட்­சி­யின்­போது அவர்கள் எடுத்த பல்­வேறு தீர்­மா­னங்­களும் முஸ்லிம் மக்­களை குறி­வைத்­த­தாகவே இருந்­தது என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

அத்­துடன், இச்­செ­யற்­பா­டு­களால் முஸ்லிம் சமூகம் மீது பாரிய வன்­மு­றை­களும் கட்­ட­விழ்க்­கப்­பட்டதாக அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.
மனித உரி­மைகள் உல­களாவிய அமைப்பின் இலங்­கைக்­கான அறி­முக நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது கலந்து கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது, அர­சி­ய­ல­மைப்பில் மத மற்றும் கலா­சார உரி­மைகள் அடிப்­படை உரி­மை­யாக அமைந்­தி­ருந்தால் கொவிட் காலத்தில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு நடந்த அநீதி இடம்­பெற்­றி­ருக்­காது. கொவிட் காலப் பிரிவில் அடக்­கமா? தக­னமா? என்ற பிரச்­சி­னையில் எமது நாட்டு முஸ்லிம் சமூகம் பெரிதும் உத­வி­யற்­றி­ருந்­தது.உலக சுகா­தார ஸ்தாபனம் கூட கூறாத பல்­வேறு முடி­வு­களின் அடிப்­ப­டையில் இஸ்­லா­மிய சமூகம் குறி­வைக்­கப்­பட்டு பாரிய வன்­முறை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அந்­நே­ரத்தில் ஒரு தேசிய கட்­சி­யாக முஸ்லிம் மக்­க­ளுக்­காக வீதியில் இறங்கி அந்த உரி­மைக்­காக நட­வ­டிக்கை எடுக்க முடிந்­த­மை­யை­யிட்டு ஐக்­கிய மக்கள் சக்தி பெரு­மிதம் கொள்­கி­றது.

நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தாக கூறிய ஆட்­சி­யா­ளர்கள் முஸ்லிம் சமூ­கத்தை குறி­வைத்தே தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தினர். இறை­யாண்மை, தேசிய ஒரு­மைப்­பாடு என கதைத்­தாலும் நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாடு இல்­லா­விட்டால் குறித்த இலக்­கு­களை அடைய முடி­யாது.
அனைத்து மக்­க­ளி­டையே சகோ­த­ரத்­துவம் பேணப்­பட வேண்டும். நாட்டின் பாது­காப்பு மற்றும் அபி­வி­ருத்­திக்கு இது மிக முக்­கி­ய­மான கார­ணி­களில் ஒன்­றாகும்.

நாட்டில் உரி­மை­களைப் பாது­காப்­பது முக்­கி­ய­மான ஜன­நா­யக அம்­ச­மாகும். ஐக்­கிய மக்கள் சக்தி ஆட்­சியில் இன­வா­தி­க­ளுக்கும் மத­வா­தி­க­ளுக்கும் இட­மில்லை. எதிர்­கா­லத்தில் எமது அர­சாங்­கத்தில் சாதி, மத பேதங்­களை முன்­னி­றுத்தி செயற்­படும் எந்­த­வொரு நபரும் தகுதி தரா­தரம் பாராது சட்ட ரீதி­யாக தண்­டிக்­கப்­ப­டுவர்.

நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப தேசிய ஒரு­மைப்­பாடு அவ­சியம். இன­வாதம் மற்றும் மத­வா­தத்தை ஒழித்து ஒரு­வ­ருக்­கொ­ருவர் அந்நி­­யோன்யமான கலாச்சார பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் மற்றும் நடத்தைகளுக்கு நியாயமான இடத்தை வழங்கி அனைவரினதும் தனித்துவ அடையாளத்தையும் பாதுகாத்து முற்போக்குத் தேசியவாதத்துடன் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.