நாட்டின் ஜனயாகத்தை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம்

0 1,179

யு.எல்.எம்.என்.முபீன்
தேசிய கொள்கை பரப்புச் செய­லாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இலங்கை முஸ்­லிம்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு கட்­சி­யாகும். நமது நாட்­டி­லுள்ள ஏனைய இனங்கள் தங்­க­ளது உரி­மை­களை உறு­திப்­ப­டுத்திப் பெற்­றுக்­கொள்ள தமக்­கென பல்­வேறு அர­சியல் கட்­சி­களை வைத்­தி­ருந்த வேளையில்  நாட்டின் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த அர­சியல் மற்றும் ஏனைய விவ­கா­ரங்­களில் முஸ்லிம் சமூகம் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­பட்ட புறச்­சூ­ழலில் அச்­ச­மூ­கத்தின் உரி­மைகள், தனித்­து­வத்தை பாது­காக்கும் அடிப்­படை நோக்கில் முஸ்லிம் காங்­கிரஸ் தோற்றம் பெற்­றது.

முஸ்­லிம்­களின் அடிப்­படை மூலா­தா­ரங்­க­ளான அல்­குர்ஆன், ஹதீஸின் அடிப்­ப­டையில் தனது அர­சியல் கொள்­கையை முஸ்லிம் காங்­கிரஸ் வடி­வ­மைத்­துக்­கொண்ட போதிலும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான சக்­தி­களால் ஓர் இன­வாதக் கட்­சி­யாக அது விமர்­சிக்­கப்­பட்­டது. ஆனால் தோற்றம் பெற்ற காலம் முதல் முஸ்லிம் சமூகம் சார்ந்த செயற்­பா­டு­க­ளுக்கு அப்பால் நாட்டின் தேச நலன் சார்ந்தும் ஜன­நா­யக விழு­மி­யங்­களை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும் அது செயற்­பட்டு வந்­துள்­ளதை நடு­நிலை நோக்­கா­ளர்­களால் புரிந்­து­கொள்ள முடியும்.

1988, 1989 ஆம் ஆண்­டு­களில் முஸ்லிம் சமூகம் சார்ந்து தேர்­தல்­களில் அச்­ச­மூ­கத்­திற்­கான அர­சியல்  பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொள்ள தனி­வழி நின்று முயற்­சித்து வெற்றி பெற்ற போதும் அதன்­பின்னர் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் தேச முக்­கி­யத்­துவம் வாய்ந்த முக்­கிய கோரிக்­கை­யொன்றை முன்­வைத்து தனது பேரம் பேசும் ஆற்­றலால் வெற்­றியும் பெற்­றது. அப்­போது காணப்­பட்ட தேர்தல் கணிப்­பீட்டு முறையில் கட்­சிகள் பெற­வேண்­டிய அடிப்­படைத் தகை­மை­யான 12.5% என்ற வெட்­டுப்­புள்­ளியை தனது பேரம் பேசும் ஆற்­றலால் 5% ஆக குறைத்­துக்­கொள்ள முடிந்­தது சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் பெரும்­பான்மை சார்­பாக செயற்­ப­டு­கின்ற சிறிய கட்­சி­க­ளுக்கும் மிகப்­பெரும் வரப்­பி­ர­சா­த­மாக அமைந்­தது.

இலங்­கையின் இரண்­டா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட்ட ஆர்.பிரே­ம­தா­ஸாவே அப்­போ­தைய ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி சார்­பாக கள­மி­றங்­கி­யி­ருந்தார். இவர் மேல் தட்டு வர்க்கம் சாரா­த­வ­ராக இருந்­த­மையால் இவ­ரு­டைய தேர்தல் வெற்றி மிகச் சவா­லா­ன­தாக காணப்­பட்ட சூழ்­நி­லையில் தனக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு  கட்­சியின் ஸ்தாப­கத்­த­லைவர் எம்.எச்.எம்.அஷ்­ர­பிடம் ஆத­ரவைக் கோரி­யி­ருந்தார். அப்­போ­தைய தேர்தல் கணிப்­பீட்டு முறையில் காணப்­பட்ட அடிப்­படை தேர்தல் கணிப்­பீடு தகைமை வெட்­டுப்­புள்­ளி­யாக 12.5%மே இருந்­தது. இதனால் சிறு­பான்மை கட்­சிகள்,மற்றும் பெரும்­பான்மை சமூ­கத்தில் செயற்­படும் சிறிய கட்­சி­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வமும் மிகவும் கேள்­விக்­கு­றி­யாக மாறி­யது.

எனவே தலைவர் அஷ்ரப்,  ஜனா­தி­பதி பிரே­ம­தா­ஸா­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக இருந்தால் இவ்­வெட்­டுப்­புள்­ளியை 12.5% இலி­ருந்து 5% ஆக குறைக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையை தனது பிர­தான  கோரிக்­கை­யாக  முன்­வைத்­தி­ருந்தார். அப்­போது பாரா­ளு­மன்றம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இதற்­கென பாரா­ளு­மன்­றத்தை விஷே­ட­மாக கூட்டி இக்­கோ­ரிக்­கையை நிறை­வேற்­றிக்­கொ­டுத்தார். இது சிறு­பான்மை கட்­சி­க­ளி­னதும் மற்றும் ஏனைய சிறிய கட்­சி­க­ளி­னதும் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொள்­வதில் மிகப்­பெரும் வாய்ப்­பாக அமைந்­தது. அத்­துடன் தலைவர் அஷ்ரப் அவர்கள் மேற்­படி கோரிக்­கையை வென்­றெ­டுத்­ததன் மூலம் தமிழ், முஸ்லிம், மலை­யக மக்­களின் அர­சியல் உரி­மையை உறு­திப்­ப­டுத்­தி­ய­தோடு மட்­டு­மல்­லாமல் பெரும்­பான்மை சிங்­கள சமூ­கத்தில் சிறிய கட்­சி­க­ளாக செயற்­படும் ஜே.வி.பி  போன்ற கட்­சி­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் உறு­திப்­ப­டுத்­தினார். ஜன­நா­ய­கத்தின் பண்­பு­களில் பெரும்­பான்மை மக்­க­ளி­னது உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற அதே வேளையில் சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களும் பாது­காக்­கக்­கப்­பட வேண்டும் என்ற ஜன­நா­ய­கத்தின்  அடிப்­படை பண்பை  தனது சாணக்­கி­யத்தின் மூலம் முஸ்லிம் காங்­கிரஸ் பாது­காத்­தது.

தொடர்ந்து நாட்டில் புரை­யோ­டிப்­போ­யி­ருந்த இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வழங்கும் சமா­தா­னத்தின் தேவ­தை­யாக தன்னை உரு­வ­கப்­ப­டுத்தி நான்­கா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக சிம்­மா­சனம் ஏறிய சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க அம்­மை­யா­ருக்கு சிறு­பான்மை மக்கள் தமது உச்­ச­பட்ச ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர்.முஸ்லிம் காங்­கி­ரஸின் பங்­க­ளிப்பு சந்­தி­ரிக்­காவின் வெற்­றியில் அப­ரி­மி­த­மாக இருந்­தது. சந்­தி­ரிக்­காவின் அமைச்­ச­ர­வையில் பல­த­ரப்­பட்­ட­வர்கள் இருந்த சூழலில் சந்­தி­ரிக்கா அம்­மை­யாரின் தலை­மைத்­து­வத்தின் கீழ் வடி­வ­மைக்­கப்­பட்ட இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் தலைவர் அஷ்­ரபே சமர்ப்­பித்தார். பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் என்ற பிர­தான கருத்­திட்­டத்தை கொண்­ட­தா­கவும் தமிழ் மக்­க­ளுக்கு உச்­ச­பட்ச அதி­கா­ரத்தை வழங்கும் தீர்­வுத்­திட்­ட­மா­கவும் இது காணப்­பட்­டது.இப்­பி­ரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து தலைவர் அஷ்ரப் உரை­யாற்­றும்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரிய எதிர்ப்பை எதிர்­கொண்டார். தீர்­வுத்­திட்­டத்தை ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்­தி­லேயே தீயிட்டுக் கொளுத்­தினர். இத்­தீர்­வுத்­திட்டம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தால் இன்று நாடு பாரிய வளர்ச்­சியை கண்­டி­ருக்கும். ஆக நாட்டின் சிறு­பான்மை,பெரும்­பான்மை மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தி ஜன­நா­யகப் பண்­பு­களை பேணும்  வகையில் சந்­தி­ரிக்கா அம்­மை­யாரின் ஆட்­சிக்­கா­லத்தில் தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்­கி­ரஸை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பாரிய பங்­காற்­றினார்.

தலைவர் அஷ்­ரபின் அகால மர­ணத்தை தொடர்ந்து முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ராக பத­வி­யேற்ற தற்­போ­தைய தலைவர் றவூப் ஹக்கீம் தான் தலை­வ­ராக தெரி­வு­செய்­யப்­பட்­டது முதல் இன்று வரை நாட்டின் ஜன­நா­யக கட்­ட­மைப்பை பாது­காத்து உறு­திப்­ப­டுத்த பல்­வேறு பணி­களை தொடர்ச்­சி­யாக ஆற்றி வரு­கின்றார்.

சந்­தி­ரிக்கா அம்­மை­யாரின் காலத்தில் சமா­தான முன்­னெ­டுப்­புகள் சீர்­கு­லைந்த நிலையில் புலி­களும் இலங்கை இரா­ணு­வத்­துக்கு நிக­ரான சம­பலம் கொண்­ட­வர்­க­ளா­கவும்  தமது ஆயுத வல்­ல­மையின் ஊடா­கவும் தாக்­குதல் திற­னிலும் மிகப்­பலம் பொருந்­திய நிலையில் காணப்­பட்­டனர். அத்­துடன் இலங்கை இரா­ணுவம் புலி­களின் பல்­வேறு மூர்க்­க­மான தாக்­கு­தல்­களை எதிர்­கொண்­ட­துடன் இலங்­கையின் பொரு­ளா­தா­ரமும் மிகப்­ப­ல­வீ­ன­மான நிலையை அடைந்­தது. 2002 ஆம் ஆண்டு பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­வி­யேற்­றது. இவ் அர­சாங்­கத்தில் 12 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளோடு மிகப்­பெரும் சக்­தி­யாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பங்­கா­ளி­யாக மாறி­யது.

இவ்­வே­ளையில் புலி­களின் வல்­ல­மையும்,புலம்­பெயர் தமிழ் சமூ­கத்தின் காத்­தி­ர­மான செயற்­பாடும் தமி­ழர்­க­ளுக்கு தீர்வை வழங்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தை இலங்கை அர­சுக்கு ஏற்­ப­டுத்­தி­யது. சர்­வ­தேச மத்­தி­யஸ்­தத்­துடன் இலங்கை அர­சுக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கு­மி­டையில் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­துடன் மிக நீண்­ட­கா­லத்தின் பின் யுத்த நிறுத்­தமும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வே­ளையில் முஸ்­லிம்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளினால்  பல்­வேறு அச்­சு­றுத்­தல்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். முஸ்­லிம்­களின் பாது­காப்பு கேள்­விக்­குள்­ளா­கி­யி­ருந்­தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ரணில் விக்கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்­காக ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் புரிந்­து­ணர்­வுக்கு வந்­தி­ருந்­தது. புலி­க­ளுக்கும் அர­சாங்­கத்­துக்­கு­மி­டை­யி­லான சமா­தான ஒப்­பந்தம் தொடர்­பி­லான முன்­னா­யத்த பேச்­சு­வார்த்­தை­களின் போது முஸ்­லிம்­களும் ஒரு தரப்­பாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என்று முஸ்லிம் காங்­கிரஸ் அர­சாங்­கத்­துக்கு வைத்த கோரிக்­கையை புலிகள் முற்­றாக மறுத்­தி­ருந்­தனர். நீண்ட இழு­ப­றியின் பின்னர் பிர­தமரால் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  வழங்­கப்­பட்ட உத்­த­ர­வா­தங்­களின் அடிப்­ப­டையில் அரச தரப்பில் ஒரு பிர­தி­நி­தி­யாக முஸ்­லிம்கள் சார்­பாக றவூப் ஹக்கீம் கலந்து கொள்வார் என்ற நிபந்­த­னையின் பின்னர் புலி­க­ளுக்கும் அர­சுக்­கு­மி­டை­யி­லான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

 

வட கிழக்கில் முஸ்லிம் சமூ­கத்தின் இருப்பு கேள்­விக்­குள்­ளான நிலையில் இது முஸ்லிம் சமூ­கத்­துக்குள் பாரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. அப்­போது 12 உறுப்­பி­னர்­க­ளுடன் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்த முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கு மாகா­ணத்தின் அர­சாங்­க­மா­கவே காணப்­பட்­டது. சமா­தான ஒப்­பந்­தத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் புறக்­க­ணிக்­கப்­பட்ட போது அது அர­சி­லி­ருந்து வெளி­யேற வேண்­டு­மென்ற கோரிக்கை சமூ­கத்தில் எழுந்­தது. இவ்­வே­ளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மிகப்­பொ­றுப்­பு­டனும், பக்­கு­வத்­து­டனும் நடந்­து­கொண்­டது. நாட்டின் பொரு­ளா­தாரம் அதல பாதா­ளத்­துக்கு சென்­றி­ருந்த நிலையில் புரை­யோ­டிப்­போ­யி­ருந்த உள்­நாட்டு யுத்­தத்தின் கார­ண­மாக சிங்­கள, தமிழ், முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயி­ரக்­க­ணக்கில் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர். நாட்டின் சொத்­துக்­க­ளுக்கு பாரிய சேதம் ஏற்­பட்­டி­ருந்­தது. மக்கள் நிம்­ம­தி­யி­ழந்த சூழ்­நி­லையில் சமா­தா­னமே முக்­கிய தேவை­யாக இருந்­தது. முஸ்லிம் காங்­கிரஸ் அர­சாங்­கத்­தி­லி­ருந்து  வெளி­யே­றி­யி­ருந்தால் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருக்­காது. எனவே நாட்டு மக்­களின் நிம்­ம­தி­யையும் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்தி அர­சியல் யாப்பு மாற்­றத்தின் ஊடாக சகல மக்­களின் அடிப்­படை உரி­மை­களை யாப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்தும் ஜன­நா­யக வெற்­றிக்­காக முஸ்லிம் காங்­கிரஸ் தியாகம் செய்­தது.

நீண்ட கால­மாக நாட்டின் ஜன­நா­யக பாரம்­ப­ரி­யங்கள் வலுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற வகையில் சுயா­தீன நீதித்­துறை, சுயா­தீன பொதுச்­சேவை, சுயா­தீன பொலிஸ், பத்­தி­ரிகைச் சுதந்­திரம், சுயா­தீன தேர்தல் ஆணை­யகம் உள்­ளிட்ட பல்­வேறு அரச துறைகள் தலை­யீ­டின்றி சுயா­தீ­ன­மாக செயற்­படும் ஆணைக்­கு­ழுக்­க­ளாக ஸ்தாபிக்­கப்­பட்ட வேண்­டு­மென்ற கோரிக்கை ஜன­நா­ய­கத்­தையும்,மனித உரி­மை­க­ளையும் நேசிக்கும் சக்­தி­களால்  முன்­வைக்­கப்­பட்டு வந்­தது. இவ்­வி­டயம் தொடர்பில் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்­திலும் வெளி­யிலும் பல்­வேறு தட­வைகள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­துடன் பிர­தம மந்­திரி ரணில் விக்­ர­ம­சிங்­க­வி­டமும்  இவ்­வி­டயம் சட்ட ரீதி­யாக அர­சியல் யாப்பின் விஷேட ஏற்­பா­டாக 17 ஆவது திருத்­த­மாக நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை வைத்­தி­ருந்தார். இவ்­வி­டயம் இழுத்­த­டிக்­கப்­பட்ட சூழ்­நி­லையில் அர­சாங்­கத்தின் மீது அதி­ருப்தி கொண்ட றவூப் ஹக்கீம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் மூதூர் பிர­தே­சத்­துக்கு சென்று அங்­கேயே தங்கி கொழும்பின் அர­சியல் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருந்­த­துடன் பிர­தம மந்­திரி மூதூ­ருக்கு வந்து 100 நாட்­க­ளுக்குள் இவ் ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிப்பேன் என்று உத்­த­ர­வாதம் தரும் வரையில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை விட்டு வெளியே வர­மாட்டேன் என்று கூறி மூதூரில் அஞ்­சா­வா­ச­மி­ருந்தார். பின்னர் ரணில் விக்கி­ர­ம­சிங்க திரு­கோ­ண­ம­லைக்கு வந்து உத்­த­ர­வாதம் வழங்­கி­யதன் பேரி­லேயே றவூப் ஹக்கீம் கொழும்­புக்கு திரும்­பினார்.

முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரின் இந்த கோரிக்­கையே நாட்டின் ஜன­நா­யக கட்­ட­மைப்­புக்­களை பலப்­ப­டுத்தும் சுதந்­திர ஆணைக்­கு­ழுக்­களை உள்­ள­டக்­கிய அர­சியல் யாப்பின் 17 ஆவது திருத்­த­மாக பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. பின்னர் ஜனா­தி­ப­தி­யாக முடி­சூ­டிக்­கொண்ட மஹிந்த ராஜ­பக் ஷ பல்­வேறு அர­சியல் கட்­சி­க­ளையும் அச்­சு­றுத்தி மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பாரா­ளு­மன்­றத்தில் பெற்­றுக்­கொண்டு ஜன­நா­யக கட்­ட­மைப்பை முற்­றாக சிதைத்து தனது கட்­டுப்­பாட்­டுக்குள் ஆணைக்­கு­ழுக்­களை கொண்­டு­வரும் வகை­யிலும் தனது ஏதேச்­ச­தி­கா­ரத்தை நிலைப்­ப­டுத்தும் வகை­யி­லான 18ஆவது திருத்­தத்தை அர­சியல் யாப்பில் கொண்­டு­வந்து ஜன­நா­ய­கத்தை படு­கு­ழியில் தள்­ளினார்.

துர­திஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் காங்­கி­ரஸும் இச்­சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ரவு கொடுக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு உள்­ளா­னது. இதற்கு கட்­சிக்­குள்­ளி­ருந்த சதி­கா­ரர்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு கட்­சியை காட்­டிக்­கொ­டுத்­ததால் வேறு வழி­யின்றி முஸ்லிம் காங்­கிரஸ் மஹிந்த அர­சுடன் இணைய வேண்­டி­யேற்­பட்­டது. இத­னையே றவூப் ஹக்கீம் ”தாம் கண்­ணைத்­தி­றந்து கொண்டே படு­கு­ழியில் வீழ்ந்­த­தாக” கூறி­யி­ருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டில் உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பங்­கு­தா­ர­ரா­கிய முஸ்லிம் காங்­கிரஸ் ஏனைய பங்­கா­ளி­க­ளோடு இணைந்த வகையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூலம் அர­சியல் யாப்பில் 19 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­றி­யதன் ஊடாக 18 ஆவது திருத்­தத்தை வலு­வி­ழக்­கச்­செய்து   மீண்டும் நாட்டின் ஜன­நா­யக கட்­ட­மைப்பை பாது­காக்கும் முக்­கிய பணியை ஏனைய முற்­போக்கு சக்­தி­க­ளோடு இணைந்து செய்து முடித்­தது. அத­னூ­டா­கவே இன்று நாட்டின் அர­சியல் யாப்பு பாது­காக்­கப்­பட்­டி­ருப்­ப­தோடு நீதித்­து­றையின் சுதந்­தி­ரமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பின்னர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் புலி­க­ளுக்கு எதி­ரான தீவி­ர­மான யுத்தம் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது நவம்பர் 2, 2007 இல் புலி­களின் அர­சியல் துறை பணி­மனை மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் புலி­களின் அர­சியல் துறை பொறுப்­பாளர் சு.ப.தமிழ்ச்­செல்வன் கொல்­லப்­பட்டார். அப்­போ­தைய காலத்தில் இலங்கை அர­சாங்­கத்­தோடும் சர்­வ­தேச சமூ­கத்­தோடும் சமா­தானப் பேச்­சு­வார்த்­தையில் புலிகள் சார்­பாக செயற்­படும் பிர­தா­ன­வ­ராக காணப்­பட்ட தமிழ்ச்­செல்­வனின் கொலை, சமா­தா­னத்தை நேசிக்கும் சக்­தி­க­ளுக்கு அதிர்ச்­சியை கொடுத்­தது. இக்­கொ­லை­யினை கண்­டித்து பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம்,சமா­தான வாசற்­க­த­வு­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் என்று கூறி­ய­துடன் தமிழ் மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்­க­ளது பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தினார்.

புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக செய்து முடித்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மாமன்­ன­ராக தன்னை நிலை­நி­றுத்­திக்­கொண்­ட­துடன் சிங்­கள மக்கள் மத்­தியில் செல்­வாக்கு மிக்­க­வ­ரா­கவும் ஜன­நா­ய­கத்தை குழி­தோண்டிப் புதைக்கும் சர்­வா­தி­கா­ரி­யா­கவும் மாற்றம் பெற்றார். தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் அவரை எதிர்த்து நிற்­ப­தற்கு பல­மான வேட்­பா­ளரின் அவ­சியம் தேவைப்­பட்­ட­போது முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் எடுத்­துக்­கொண்ட தீவிர நட­வ­டிக்­கையின் கார­ண­மாக இலங்­கையின் யுத்த வெற்­றிக்கு பிர­தான கார­ண­மாக அமைந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேக்கா ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்டார். இப் பொது வேட்­பா­ள­ருக்­கான தேர்தல் பிர­சா­ரத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் முக்­கிய பங்­காற்­றி­யது. நாட்டில் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் தோற்­று­விக்­கப்­பட்ட அரா­ஜக செயற்­பா­டு­களை வன்­மை­யாக கண்­டித்­தது.பொன்­சேக்கா வெற்றி பெறுவார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட சூழ்­நி­லையில் மஹிந்­தவே வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்டார். தொடர்ந்து மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் பல்­வேறு கெடு­பி­டி­க­ளுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேக்கா உள்­ளான போது அதனை தீவி­ர­மாக றவூப் ஹக்கீம் எதிர்த்தார். மஹிந்­தவின் ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களை கண்­டித்தார்.மேலும் 2005, 2010 ஆகிய ஜனா­தி­பதித் தேர்­தல்­களின் போது மஹிந்த ராஜ­பக் ஷ, றவூப் ஹக்­கீமின் இல்­லத்­துக்கு நேரா­கச்­சென்று தனக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு கோரிய போதிலும் மஹிந்­தவின் ஜன­நா­யக விரோத செயற்­பா­டுகள் கார­ண­மாக தன்னால் அவரை ஆத­ரிக்க முடி­யா­தென்று  தெரி­வித்­தி­ருந்­த­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

தொடர்ந்து மஹிந்த அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் அதி­க­ரித்­த­போது அர­சாங்­கத்தின் அமைச்­ச­ராக இருந்­து­கொண்டே மஹிந்த ராஜ­பக் ஷ அர­சுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்­திலும், அமைச்­ச­ர­வை­யிலும்  கண்­ட­னங்­களை தெரி­வித்து வந்­த­துடன் ஆளுங்­கட்­சிக்­குள்­ளி­ருந்து கொண்டே எதிர்க்­கட்சி அர­சியல் செய்யும் ஒரு பணியை றவூப் ஹக்கீம் மேற்­கொண்டார். இவ்­வே­ளையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை முற்­றாக புறந்­தள்ளி மத்­திய அரசின் மேலா­திக்­கத்தை நிறுவும் மத்­திய அதி­கார குவிவு மையத்­தையே மஹிந்த முன்­னெ­டுத்தார். புரை­யோ­டிப்­போ­யி­ருந்த இனப்­பி­ரச்­சி­னையின் தீர்­வாக மிகப்­பி­ர­யத்­த­னத்­துக்கு மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் செயற்­பாட்டின் முதல்­கட்­ட­மாக அமைச்­ச­ர­வையில் ஒரு முக்­கிய தீர்­மானம் நிறை­வேற்ற மஹிந்த நட­வ­டிக்கை எடுத்­த­போது றவூப் ஹக்கீம் வெளி­நாட்­டி­லி­ருந்தார்.இதனை கேள்­வி­யுற்ற அவர் உட­ன­டி­யாக நாடு திரும்பி ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு சென்று அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்தில் கலந்து கொண்டு தனது கடு­மை­யான கண்­ட­னத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­தனால் இந்த நட­வ­டிக்­கையை மஹிந்த கைவி­ட­வேண்­டி­யேற்­பட்­டது . இவ்­வே­ளையில் றவூப் ஹக்கீம் சுக­வீ­ன­முற்­றி­ருந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.

தொடர்ந்து தேர்தல் முறை மாற்றம் உள்­ளூ­ராட்சி மன்ற சட்­டத்­தி­ருத்தம் என்று சிறு­பான்­மைக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை மஹிந்த ராஜ­பக் ஷ முன்­னெ­டுத்­த­போது சிறு­பான்­மைக்­கட்­சிகள் மற்றும் சிறிய கட்­சிகள் தனித்து இயங்­கு­வ­த­னூ­டாக இச்­ச­வாலை எதிர்­கொள்ள முடி­யாது என்று வலி­யு­றுத்­திய றவூப் ஹக்கீம் சிறு­பான்மை, சிறிய கட்­சிகள் இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கெ­தி­ராக ஒன்­றி­ணைந்து செயல்­படும் களச்­சூ­ழலை உரு­வாக்­கினார். இது தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு,ஜே.வி.பி,ஈ.பி.டீ.பி,தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகளோடு பேசியதோடு இது தொடர்பிலான அதிக சந்திப்புகள் அமைச்சர் றவூப் ஹக்கீம் இல்லத்திலேயே நடைபெற்றன. இச்சவாலை சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் இணைந்தே எதிர்நோக்குவது என்ற முடிவுக்கு வந்ததுடன் உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டத்திலும் மாகாண சபை தேர்தல் முறைமையிலும் கூடிய தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் இச்செயற்பாடுகள் அமைந்தன.

பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பிலான விடயம் பாராளுமன்றத்துக்கு வந்தபோது அதன் இறுதி வடிவம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே நிறைவேற்றப்படவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே தமது கட்சி ஆதரவு வழங்கும் என்ற நிபந்தனையை  பிரதமர் ரணிலிடம் முன்வைத்த  றவூப் ஹக்கீம் அதனை சட்ட ரீதியாகவும் நிறைவேறிக்கொண்டார்.

தற்போது இறுதியாக கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 16 வரை நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை கையாண்ட விதத்தில் சிறுபான்மை கட்சிகளின் பங்கு அளப்பரியது. அத்துடன் இவ்விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் செயற்பட்டவிதம் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் ஏனைய சமூகங்கள் மத்தியிலும் முஸ்லிம்களை பற்றிய நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமின் நிதானமான செயற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழிகாட்டியாக அமைந்ததுடன் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் மேல் மீண்டும் நம்பிக்கை துளிர்விடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களுக்கு இணையாக முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசும் ஆற்றல் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் சிறுபான்மை கட்சிகளுக்கிடையே ஓர் ஒருமித்த செயற்பாட்டை தோற்றுவித்திருப்பதுடன் இதற்கான அறைகூவலை அண்மையில் றவூப் ஹக்கீம் வெளியிட்ட போது அதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் வரவேற்றுள்ளன. ஆக மொத்தத்தில் சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு நாட்டின் அரசியல் யாப்பை பாதுகாத்துள்ளதுடன் நீத்தித்துறையின் சுயாதீனத்தையும் சட்டத்துறையில் மக்களின் இறைமையையும் உறுதிப்படுத்தியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.