அலி சப்ரி ரஹீமை நீக்குவதில் மு.கா.–ம.கா. கட்சிகள் ஒன்றுபடுமா?

0 308

றிப்தி அலி

“முஸ்லிம் அர­சி­யலில் எதிர்க்­கட்சி என்ற ஒன்று இருக்­கக்­கூ­டாது. இதனால் அனைத்து முஸ்லிம் கட்­சி­களும் ஒன்­றி­ணைய வேண்டும்” என்ற அறை­கூ­வ­லொன்­றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்­மையில் விடுத்­தி­ருந்தார்.

முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைந்­து­கொண்ட சம­யத்­தி­லேயே இவ்­வாறு ஹக்கீம் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தேர்­தல்கள் வரும் போது முஸ்லிம் கட்­சிகள் தமக்­கான ஆச­னங்­களைத் தக்க வைப்­ப­தற்­காக கூட்­டி­ணைந்து செயற்­பட்ட வர­லா­று­களும் உள்­ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் ஒன்­றி­ணைந்து பொதுச் சின்­ன­மொன்றின் கீழ் ஊவா மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்­டன.

அதே­போன்று கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் புத்­தளம் மாவட்­டத்­திலும் இணைந்து போட்­டி­யிட்­டன. இதற்­க­மைய, முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் (தற்­போது ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பு எனப் பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தராசு சின்­னத்தில் மு.கா.வும் அ.இ.ம.கா.வும் இணைந்து போட்­டி­யிட்ட போது அலி சப்ரி றஹீம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வு­செய்­யப்­பட்டார்.
குறித்த தேர்­த­லுக்கு வேட்­பு­மனு தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர், அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸிற்கும் முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்­பிற்கும் இடையில் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
வேட்­பு­மனுப் பட்­டி­ய­லி­லுள்ள ஒரு­வரை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் நீக்­கினால், முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பும் நீக்க வேண்டும் என அதில் பிர­தா­ன­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கூறி வரு­கின்­றது.

இதற்­க­மைய, தங்கம் கடத்­தினார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி றஹீமை கட்­சியின் உறுப்­பு­ரி­மையில் இருந்து நீக்க அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தீர்­மா­னித்­தது.

இது தொடர்­பி­லான அறி­விப்பு கடந்த நவம்பர் 4ஆம் திகதி முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் எம். நயீ­முல்­லாஹ்­விற்கு அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்த நீக்­கத்­தினை அடுத்து முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து அலி சப்ரி றஹீம் நீக்­கப்­பட்ட விட­யத்­தினை பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கு உட­ன­டி­யாக அறி­வித்து அவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யினை வறி­தாக்­கு­மாறும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

எனினும், இன்று வரை குறித்த நட­வ­டிக்­கை­யினை முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரான எம். நயீ­முல்லாஹ் மேற்­கொள்­ள­வில்லை. இவ்­வா­றான நிலையில் மேற்­படி இரண்டு கட்­சி­க­ளி­னதும் உறுப்­பினர் பத­வியில் இருந்து நீக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக இடைக்­கால தடை உத்­த­ர­வினை தங்கம் கடத்­திய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி றஹீம் கடந்த 13ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதி­மன்­றத்தில் பெற்­றுக்­கொண்டார்.

இத­னை­ய­டுத்து அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாத் பதி­யுதீன் கொழும்பில் ஊடக மாநா­டொன்­றினை கடந்த 16ஆம் திகதி நடத்தி இந்த விட­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்­தினார். அத்­துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமின் கோரிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே இக்­கட்­சியில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கள­மி­றங்­கி­ய­மை­யினால் இந்த விட­யத்தில் ஹக்கீம் தலை­யிட்டு நியா­ய­மொன்­றினை பெற்றுத் தர வேண்டும் எனவும் றிசாத் பதி­யுதீன் வேண்­டுகோள் விடுத்தார்.

முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பு என்­பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் சகோ­தர கட்­சி­யாகும். முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரான நயீ­முல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அதி­யுயர் பீட உறுப்­பி­னரும், அக்­கட்சித் தலை­வரின் பிரத்­தி­யேக செய­லா­ளரும் மைத்­து­ன­ரு­மாவார். இறு­தி­யாக நடை­பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்­தலில் சில பிர­தே­சங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இக்­கட்­சியின் தராசு சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட்­டது.

இதற்கு பத­ல­ளிக்கும் வகையில் முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரான நயீ­முல்லாஹ் விசேட ஊடக அறிக்­கை­யொன்­றினை கடந்த 17ஆம் திகதி வெளி­யிட்­டி­ருந்தார். அதில் அவர் குறிப்­பி­டு­கையில், 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு வாக்­க­ளித்து ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு அங்­கீ­காரம் வழங்­கிய போது அலி சப்ரி றஹீமை நீக்­கு­வ­தற்­கான தீர்­மா­னத்­தினை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எடுக்கத் தவ­றி­யி­ருந்­தது.

அவ்­வாறு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இழந்து விட்டால் இரண்­டா­வது அதி­கூ­டிய விருப்பு வாக்­கு­களை பெற்­றி­ருந்த முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பாளர் புத்­தளம் நகர பிதா மர்ஹ_ம் கே.ஏ. பாயிஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வந்து விடலாம் என்ற கார­ணத்­தினால் அவர் மீது நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டாது தட்டிக் கழிக்­கப்­பட்­டி­ருக்­கலாம். இப்­பட்­டி­யலில் அடுத்­துள்ள நபர் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் இணைந்­து­கொண்டார்.

இவரை எம்.பி.யாக்­கு­வ­தற்­கா­கவே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அலி சப்ரி றஹீமை நீக்க முயற்­சித்து வரு­கின்­றது. ஒரு கட்­சியின் செய­லாளர் என்ற வகையில் எனது கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளது அங்­கீ­கா­ரத்தை பெற வேண்­டி­யுள்­ளதன் அவ­சி­யத்தை அவர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­திய போதும் அதற்கு அவர்கள் உடன்­ப­ட­வில்லை.

ஏற்­க­னவே கட்­சியின் உயர்­பீடம் மூலம் தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­களும் இருக்­கின்ற போது நான் தனி­யா­ளாக எந்தத் தீர்­மா­னத்­தையும் மேற்­கொள்ள முடி­யாத நிலை­யி­லி­ருந்தேன்.

எனவே அதற்­கான கால அவ­காசம் எனக்கு வழங்­கப்­பட வேண்டும் என அறி­வித்தேன். என்­றாலும் அவர்­களோ தமது கட்­சிக்கு புதி­தாக சேர்த்துக் கொள்­ளப்­பட்ட வேட்­பா­ளரை தம்­முடன் தக்­க­வைத்துக் கொள்­வ­தி­லேயே குறி­யாக இருந்­ததை ஊகிக்க முடிந்­தது” என நயீ­முல்லாஹ் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தக­வல்­களின் பிர­காரம் நயீ­முல்­லாஹ்வின் கட்­சியின் உயர் பீட உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 15 ஆகும். இந்தக் கட்­சியின் மூன்று இணைத் தவி­சா­ளர்­களில் ஒரு­வ­ராக ரவூப் ஹக்­கீமின் மூத்த சகோ­த­ர­ரான முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் செயற்­ப­டு­கின்றார்.

15 உயர் பீட உறுப்­பி­னர்­களை கூட்டி இந்த விட­யத்தில் தீர்­மா­ன­மொன்­றினை எடுப்­ப­தற்கு அக்­கட்­சியின் செய­லாளர் நயீ­முல்லாஹ் இன்னும் கால அவ­காசம் தேவை எனக் கூறு­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அது மாத்­தி­ர­மல்­லாமல், முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் நயீ­முல்­லாஹ்வின் இந்த செயற்­பாடு எதிர்­கா­லத்தில் முஸ்லிம் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதைப் பாதிக்­கவும் கூடும்.

இதே­வேளை, அலி சப்ரி றஹீ­மினால் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட நீதி­மன்ற தடை உத்­த­ர­வினை எதிர்­வரும் 27ஆம் திகதி நீதி­மன்றில் எதிர்­கொள்­வ­தற்கு தேவை­யான விட­யங்­களை உட­ன­டி­யாக மேற்­கொள்­வ­தற்கு பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கி நேர்­மை­யினை நிரூ­பித்­துக்­காட்­டு­மாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை நயீமுல்லாஹ்விடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால், குறித்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக தலையிட்டு ஒப்பந்தத்திற்கமைய அடுத்த கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள நயீமுல்லாஹ்விற்கு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் தங்கம் கடத்தியதன் மூலம் சமூகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வறிதாக்க இரு கட்சிகளும் ஒருமித்து செயற்பட வேண்டும். அதுமாத்திரமன்றி, இந்த விவகாரத்தினால் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் மென் மேலும் பிளவுகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.