முஸ்லிம் மத போதகரின் பரத நாட்டியம் தொடர்பான கருத்து இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது

மதங்கள் நிந்திக்கப்படுவதை உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது

0 239

(எம்.வை.எம்.சியாம்)
மெள­லவி ஒரு­வ­ரினால் பர­த­நாட்­டியம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட கருத்து இந்து மக்­களின் மனதை புண்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த விடயம் மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. மதங்கள் மற்றும் கலா­சார விட­யங்கள் நிந்­திக்­க­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எனவே இதனை வன்­மை­யா­கக்­கண்­டிப்­ப­தாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, இது­போன்ற தவ­றுகள் மீண்டும் இடம்­பெ­றாமல் இருக்க உரிய வழி­காட்­டு­தல்­களை முன்­னெ­டுக்க வேண்டும் என உலமா சபை­யிடம் இந்து அமைப்­புகள் கூட்­டாக வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

இஸ்­லா­மிய மதப்­போ­தகர் ஒருவர் பர­த­நாட்­டியம் தொடர்பில் தவ­றாக பேசிய விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மி­யத்துல் உலமா சபை மற்றும் அகில இலங்கை இந்­துமார் அமைப்பு, இலங்கை பிரா­மண அமைப்பு மற்றும் இலங்கை மக்கள் பேரவை அமைப்­பு­க­ளுக்­கி­டையே விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று நேற்று அகில இலங்கை ஜமி­யத்துல் உல­மாவின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்­றது. இதன்­போதே இவ்­வாறு கருத்து வெளி­யி­டப்­பட்­டது.

இங்கு கருத்து வெளி­யிட்ட அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித்,
மதங்கள் மற்றும் கலா­சார விட­யங்கள் நிந்­திக்­கப்ப­டு­வ­தனை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். முஸ்லிம் மத போ­தகர் ஒரு­வரால் பர­த­நாட்­டியம் தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட காணொளி சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது. அவரால் வெளி­யி­டப்­பட்ட கருத்து இந்­து­மக்­களை பெரிதும் அதி­ருப்­திக்கு உள்­ளா­கி­யுள்­ளது. இவ்­வாறு மதங்கள், கலா­சா­ரங்கள் நிந்­திக்க படு­வது இஸ்­லா­மிய கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணா­னதும் கண்­ட­னத்­துக்­கு­ரி­ய­தாகும். பிற மதங்கள் தொடர்பில் தவ­றாக விமர்­சிப்­பதை இஸ்லாம் முற்­றாக தடுத்­துள்­ளது என்றார்.

அகில இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலா­நிதி ஸ்ரீ கு.வை.கா .வைத்­தீஸ்­வரன் கருத்து வெளி­யி­டு­கையில்,
அனைத்து சம­யங்­களும் அன்­பி­னையும் சகிப்­புத்­தன்­மை­யையும் வாழ்­வி­ய­லுக்கு தேவை­யான அனைத்து நல்ல விட­யங்­க­ளையே குறிப்­பி­டு­கி­றது. இதனை நாம் அடிப்­ப­டை­யாகக் எடுத்­துக்­கொள்ள வேண்டும்.மௌல­வியின் சர்ச்­சைக்­கு­ரிய கருத்து இந்து மக்­களின் மத்­தியில் பாரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது.மேலும் இந்த விடயம் தொடர்பில் உலமா சபை எமக்கு தெளி­வு­ப­டுத்­தி­யது.

சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­க­ளுக்கு உலமா சபை தமது கண்­ட­னத்­தையும் கவ­லை­யையும் வெளிப்­ப­டுத்தி இருந்­தார்கள்.

மௌலவி குறிப்­பிட்ட கருத்து தவறு என ஏற்றுக் கொண்­டி­ருந்­தார்கள். இது போன்ற தவறு மீண்டும் ஏற்­ப­டாத வகையில் செயற்­ப­டு­வ­தா­கவும் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்ட காணொ­ளி­யையும் நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டார்கள். எனவே அந்த வகையில் எமது சமய தனித்­து­வத்தை பாது­காப்­பது போன்று ஏனைய சம­யத்­த­வர்­க­ளு­டைய தனித்­து­வத்­தையும் பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை பிரா­மணர் சங்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் பிரம்ம ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயர் கூறு­கையில்,
இந்த ஒன்று கூடல் மிக முக்­கி­ய­மா­னது. மெள­ல­வியின் கருத்து இந்து மக்­களின் மத்­தியில் கவ­லையும் பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது தெரிந்தோ அல்­லது தெரி­யா­மலோ இடம் பெற்­று­விட்­டது. தவறை திருத்த வேண்­டிய பொறுப்பு எமக்­குள்­ளது. இனிமேல் நடக்­காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உலமா சபைக்கு உள்­ளது என்றார்.

இலங்கை மேலவை அமைப்பின் உப தலைவர் தர்­ஷக்க சர்மா குருக்கள் கூறு­கையில்,
மெள­ல­வியின் கருத்து மதங்­க­ளுக்கு பிரச்­சி­னையை தோற்­று­விக்கும் வகையில் அமைந்திருந்தது. தவறை உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ள உலமா சபைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை இதுபோன்ற தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மௌலவி பகிரங்கமாக மன்னிப்பு கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதனை நாம் மன்னிக்க வேண்டும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.