உலக நாடுகள் மத்தியில் அதிகரிக்கும் பலஸ்தீனுக்கான ஆதரவு

தாக்குதல்களை நிறுத்துமாறும் வலியுறுத்து

0 264

ஏ.ஆர்.எ.பரீல்

இஸ்­ரேல் -­ப­லஸ்தீன் யுத்தம் பெரும் எண்­ணிக்­கை­யி­லான அப்­பாவி மக்­களைப் பலி­யெ­டுத்து வரு­கி­றது. அத்­தோடு யுத்த நிலைமை மிக மோச­மான கட்­டத்தை அடைந்து வரு­கி­றது. இதனால் இஸ்ரேல் காஸா பிராந்­தி­யத்தின் மீது மேற்­கொண்டு வரும் தாக்­குதல் பற்­றிய சர்­வ­தேச நிலைப்­பாடு பாரிய பிள­வு­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது.

கடந்த அக்­டோபர் மாதம் 07 ஆம் திகதி இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஹமாஸ் மேற்­கொண்ட தாக்­கு­தலின் பின்பு ஆரம்­பத்தில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான நாடுகள் இஸ்­ரே­லுக்கே ஆத­ர­வ­ளித்­தன. என்­றாலும் தற்­போது இஸ்ரேல் காஸா மீது மேற்­கொண்டு வரும் வான்­வ­ழித்­தாக்­கு­தல்கள் மற்றும் ஹமாஸ் இயக்­கத்­தையும் காஸா பிராந்­தி­யத்­தையும் முழு­மை­யாக அழிக்கும் வகையில் செயற்­படும் விதத்தை அநேக நாடுகள் விமர்­சித்து வரு­கின்­றன. அத்­தோடு யுத்த நிலை­மையை கருத்திற் கொண்டு தமது முன்­னைய நிலைப்­பாட்­டி­னை மாற்றிக் கொண்­டுள்­ள­மையை அறிய முடி­கி­றது.

பெரும்­பா­லான நாடுகள் யுத்­த­ நிறுத்தம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தி­லேயே கரி­சனை கொண்­டுள்­ளன.

இஸ்ரேல் இரா­ணுவம் மற்றும் ஹமாஸ் போரா­ளி­க­ளுக்­கி­டையில் உட­ன­டி­யாக நீண்ட கால மனி­தா­பி­மான யுத்­த நி­றுத்தம் ஒன்­றினை கோரி கடந்த ஒக்­டோபர் மாதம் 27 ஆம் திகதி ஐக்­கிய நாடுகள் சபையில் பிரே­ர­ணை­யொன்று கொண்டு வரப்­பட்­டது.

ஜோர்­தா­னினால் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 121 நாடுகள் வாக்­க­ளித்­தன. 14 நாடுகள் எதிர்த்து வாக்­க­ளித்­தன. இதே­வேளை 44 நாடுகள் வாக்­க­ளிப்­பதில் இருந்தும் தவிர்ந்­தி­ருந்­தன.

இந்த ஐ.நா.சபையின் யுத்த நிறுத்த பிரே­ர­ணையை இஸ்ரேல் பிர­த­மர் மறுத்தார். தற்­போது யுத்­த­நி­றுத்­தத்தை ஏற்றுக் கொண்டால் அது ஹமாஸ் அமைப்­புக்கு பயந்­த­தாக அமைந்­து­விடும் என வாதிட்டார்.

அன்­றி­லி­ருந்து சில நாடுகள் இஸ்ரேல் தொடர்பில் தங்­க­ளது விமர்­ச­னங்­களை அதி­க­ரித்­துள்­ளன. மேலும் சில நாடுகள் இஸ்­ரேலில் இருந்து தமது தூது­வர்­களை மீண்டும் அழைத்துக் கொண்­டுள்­ளன. அல்­லது இஸ்­ரே­லு­ட­னான தமது இரா­ஜ­தந்­திர உற­வு­களை நிறுத்திக் கொண்­டுள்­ளன. யுத்­த ­நி­றுத்த பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்த அமெ­ரிக்கா கூட தமது நிலைப்­பாட்டைத் தளர்த்திக் கொண்­டது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி பைடன் தாக்­கு­தலை தற்­கா­லி­க­மாக நிறுத்திக் கொள்­ளுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்­கு­லக நாடுகள்
யுத்­தத்தின் ஆரம்­பத்தில் இருந்து பெரும்­பா­லான மேற்­கு­லக நாடுகள் பகி­ரங்­க­மாக இஸ்­ரே­லுக்கு ஆத­ரவு வழங்­கின. ஹமாஸ் தாக்­கு­தலின் பின்பு அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் தமது முத­லா­வது அறிக்­கையில் அமெ­ரிக்கா இஸ்­ரேலின் பக்கம் இருக்கும் என உறுதி செய்­தி­ருந்தார். இஸ்ரேல் தங்­க­ளது நாட்டு மக்­களைப் பாது­காத்துக் கொள்­வ­தற்கு தேவை­யா­ன­வைகள் இருக்க வேண்டும் என்­பதை தாம் கவ­னித்துக் கொள்­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

என்­றாலும் கடந்த 2ஆம் திகதி நடை­பெற்ற பிர­சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமெ­ரிக்க ஜனா­தி­பதி கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்த ஒருவர் கேட்ட கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கையில், யுத்தம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­படல் வேண்டும் என பதி­ல­ளித்­துள்ளார்.

மறு­தினம், மனி­தா­பி­மான யுத்­த ­நி­றுத்தம் தொடர்பில் இஸ்ரேல் மீது அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்­கா­கவும், காஸாவில் பொது­மக்கள் மீது பாதிப்­புகள் ஏற்­ப­டு­வதைக் குறைப்­ப­தற்­கா­கவும் பேச்சுவார்த்தை நடத்­து­வ­தற்­காக அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் அந்­தனி பிலின்கன் இரண்­டா­வது தட­வை­யா­கவும் டெல்­அ­வி­வுக்குச் சென்றார். எந்­த­வொரு யுத்த நிறுத்­தமும் தற்­கா­லி­க­மாக ஏதோ­வொரு பிர­தே­சத்­துக்கு கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அவர் தெரி­வித்­தார். எனினும் முழு­மை­யான யுத்­த ­நி­றுத்தம் தொடர்பில் அரபு நாடுகள் உட்­பட ஏனைய நாடுகள் முன்­வைத்த கோரிக்­கையை அமெ­ரிக்கா நிரா­க­ரித்­தது.

எனினும் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் பல இலட்சக் கணக்கானோர் பங்குபற்றிய பாரிய பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது. அதுமாத்திரமன்றி தினமும் அங்கு மக்கள் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. யுஎஸ்எயிட் அமைப்பில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூட யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்தும் கடிதம் எழுதியுள்ளனர்.

கனடா மற்றும் ஐக்­கிய இராச்­சி­யத்தின் பிர­த­மர்கள் தங்­க­ளது ஆரம்ப நிலைப்­பாட்­டி­லி­ருந்தும் சிறிது வில­கி­யி­ருக்­கி­றார்கள். ஆரம்­பத்தில் இவர்கள் தன்னைப் பாது­காத்துக் கொள்­வ­தற்கு இஸ்­ரே­லுக்கு உரிமை இருக்­கி­றது என்று கூறி இஸ்­ரே­லுக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தார்கள். என்­றாலும் ஐ.நாடுகள் சபையில் வாக்­க­ளிக்கும் போது இவ்­வி­ரு ­நா­டு­களும் வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்தும் வில­கி­யி­ருந்­தன.

யுத்­தத்­தை நிறுத்தக் கோரி கடந்த வாரங்­களில் லண்டன் எங்கும் பலஸ்­தீன ஆத­ர­வா­ளர்கள் நடை­ப­வ­னியில் ஈடு­பட்­டார்கள்.
ஐரோப்­பிய ஒன்­றியம் இஸ்­ரே­லுக்கு ஆத­ரவு தெரி­வித்தும் ஹமாஸ் மேற்­கொண்ட தாக்­கு­தலை கடு­மை­யாக எதிர்த்­தாலும் யுத்­த­நி­றுத்தம் தொடர்­பில் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் தனது பாது­காப்­பினை திட்­ட­மி­டு­வ­தற்கு உரிமை இருக்­கி­றது என்றும் இஸ்­ரே­லுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்த ஜேர்­மனி மற்றும் இத்­தாலி ஆகிய நாடுகள் ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னத்­துக்கு வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் தீர்­மா­னத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்­தன.

இஸ்ரேல் தன்னைப் பாது­காத்துக் கொள்­வ­தற்கு உரி­மை­யி­ருக்­கி­றது. இஸ்­ரேலின் உரி­மையை ஆத­ரிக்­கிறோம் என ஆரம்­பத்தில் தெரி­வித்­தி­ருந்த பிரான்ஸ் ஜனா­தி­பதி எமா­னுவேல் மெக்ரோன் சிவில் மர­ணங்கள் அதி­க­ரித்து வரு­கின்­ற­மையை அடுத்து தனது ஆரம்ப நிலைப்­பாட்­டி­லி­ருந்தும் சிறிது மாறிக்­கொண்­டுள்ளார்.

காஸா தொடர்பில் ஹமாஸ் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள வேறு­பா­டு­களை இனங்­கண்டு கொள்ள வேண்டும் என பிரான்ஸ் ஜனா­தி­பதி தனது டுவிட்டர் பதிவில் குறிப்­பிட்­டுள்ளார்.

மத்­திய கிழக்கு நாடுகள்
மத்­திய கிழக்கின் பெரும்­பா­லான நாடுகள் ஐ. நாடுகள் சபையின் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­தன. அத்­தோடு பல நாடுகள் இஸ்ரேல் மேற்­கொண்டு வரும் தாக்­கு­தல்­க­ளுக்கு கடும் எதிர்ப்புத் தெரி­வித்­தன.

உடன்­ப­டிக்­கை­யொன்றின் ஊடாக இஸ்­ரே­லுடன் உறவை பேணி­வந்த ஐக்­கிய அரபு இராச்­சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஆரம்­பத்தில் ஹமாஸின் தாக்­கு­த­லுக்கு கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தன. என்­றாலும் இரு வாரங்­க­ளுக்கு முன்பு பஹ்ரைன் தனது தூது­வரை இஸ்­ரே­லி­லி­ருந்து மீள அழைத்துக் கொண்­ட­துடன் பஹ்ரைன் தலை­நகர் மனா­மாவில் நிலை கொண்­டி­ருந்த இஸ்ரேல் தூது­வரை நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேற்­றி­யது. ஜோர்­தானும் இஸ்­ரேலில் இருந்த தனது தூது­வரை மீள அழைத்துக் கொண்­டது.

சவூதி அரே­பி­யாவும் தாக்­கு­தலை உட­ன­டி­யாக நிறுத்திக் கொள்ளும் படி இஸ்­ரேலைக் கோரி­யுள்­ளது.

மேலும் ஐக்­கிய அரபு இராச்­சியம், ஜோர்தான், பஹ்ரைன், சவூதி அரே­பியா, ஓமான், கட்டார், குவைத், எகிப்து மற்றும் மொரோக்கோ ஆகிய நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்கள் காஸாவில் இஸ்ரேல் பொது மக்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­து­கின்­ற­மை­யையும், சர்­வ­தேச சட்டம் மீறப்­ப­டு­கின்­ற­மை­யையும் எதிர்த்து கடந்த ஒக்­டோபர் 26 ஆம் திகதி ஒன்­றி­ணைந்த அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளன.

தற்­பா­து­காப்­புக்­கான உரிமை ஊடாக சட்­டத்தை மீறு­வதும், பலஸ்­தீன மக்­களின் உரி­மை­களை மதி­யா­மை­யையும் நியா­யப்­ப­டுத்த முடி­யா­தென குறிப்­பிட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் ஈரானின் ஆன்­மிக தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனி இஸ்­ரே­லு­ட­னான பொரு­ளா­தார தொடர்­பு­களை நிறுத்திக் கொள்ளும் படியும் இஸ்­ரே­லுக்கு எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்று­மதி செய்­வதை நிறுத்தும் படியும் முஸ்லிம் நாடு­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஹமாஸ் அமைப்­பினர் இஸ்ரேல் மீது தாக்­குதல் நடத்­தி­யதன் பின்பு கொமைனி மற்றும் ஈரான் ஜனா­தி­பதி இப்ரா­ஹிம் ரைசி ஆகிய இரு­வரும் ஹமாஸ் அமைப்­பி­ன­ருக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­தனர். அத்­தோடு இத்­தாக்­கு­த­லுக்கும் ஈரா­னுக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை எனவும் அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்த யுத்தம் தொடர்பில் ஆரம்­பத்தில் நடு­நிலை வகிப்­ப­தற்கு முயற்­சித்த துருக்கி ஜனா­தி­பதி அர்­துகான் ஒக்­டோபர் 28 ஆம் திகதி இஸ்­தான்­பூலில் நடை­பெற்ற பலஸ்தீன் ஆத­ரவுப் பேர­ணி­யொன்றில் உரை­யாற்றிய போது இஸ்­ரேலை யுத்த குற்­ற­வா­ளி­யென பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டத்தை தாம் வகுத்­துள்­ள­தாகத் தெரி­வித்தார்.

பலஸ்­தீ­னர்­களின் பூமியைப் பாது­காப்­ப­தற்­காக போராடும் விடு­தலை இயக்கம் எனவும் ஹமாஸ் அமைப்பை அர்­துகான் வர்­ணித்­தார். துருக்கி ஐ.நா.வின் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
ஐ.நா.வின் யுத்­த­நி­றுத்த பிரே­ர­ணைக்கு வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருந்த ஒரே­யொரு மத்­தி­ய­ கி­ழக்கு நாடு ஈராக் ஆகும். என்­றாலும் தொழில்­நுட்ப கோளாறே இதற்குக் காரணம் எனத்­தெ­ரி­வித்து பின்பு பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக தனது நிலைப்­பாட்­டினை மாற்றிக் கொண்­டது.

மத்­தி­ய­கி­ழக்கில் இஸ்­ரேலைத் தவிர எந்­தவோர் நாடும் பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளிக்­க­வில்லை.

ரஷ்யா
ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொண்­ட­தை­ய­டுத்து சில தினங்கள் ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்டின் எது­வித கருத்தும் வெளி­யி­ட­வில்லை. அவ­ரது முதல் கருத்து, மத்­திய கிழக்கு தொடர்பில் அமெ­ரிக்­காவின் கொள்கை தோல்­வி­ய­டைந்­துள்­ளது என்­ப­தாக அமைந்­தி­ருந்­தது.
ஐ.நாவின் மனி­தா­பி­மா­ன­மான யுத்­த­ நிறுத்த பிரே­ர­ணைக்கு ரஷ்யா ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது.

ஆசியா
ஐ.நா.சபையில் முன்­வைக்­கப்­பட்ட யுத்­த­ நி­றுத்த பிரே­ர­ணைக்கு ஆசிய வல­யத்தில் அனைத்து நாடு­களும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தன. காஸாவில் பொது­மக்­களைத் தண்­டிப்­பதை உடன் நிறுத்­து­மாறு சீன அரசு இஸ்­ரேலை கோரி­யுள்­ளது.

இந்­தியா ஐ.நா.சபையின் பிரே­ர­ணையில் வாக்­க­ளிப்பதை தவிர்ந்து கொண்டது. எனினும் இஸ்ரேலின் சட்விரோதக் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும் என கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்தது.
இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் அரசு பத­வி­யேற்­றதும் இந்­தி­ய-­ இஸ்ரேல் உறவு விரை­வாக பல­ம­டைந்­தது. அக்­டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் மேற்­கொண்ட தாக்­கு­த­லை­ய­டுத்து நரேந்­திர மோடி, இந்த இக்­கட்­டான நேரத்தில் இந்­திய மக்கள் நிரந்­த­ர­மாக இஸ்­ரே­லு­டனே இருப்­பார்கள். இந்­தியா பயங்­க­ர­வா­தத்தை முழு­மை­யாகக் கண்­டிக்­கி­றது. என்று கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இஸ்­ரே­லுடன் எவ்­வித இரா­ஜ­தந்­திர உற­வு­களையும் பேணாத பாகிஸ்தான், இரத்தம் சிந்­து­வது மற்­றும் மனித உயி­ரி­ழப்­புகள் தவிர்க்­கப்­பட வேண்டும் என ஆரம்­பத்தில் தெரி­வித்­தி­ருந்­தது. பாகிஸ்தான் ஜனா­தி­பதி ஆரிப் அல்வி தற்­போ­தைய சூழலில் உட­னடி யுத்­த­ நி­றுத்­தத்தைக் கோரு­கிறோம் என கோரிக்கை விடுத்­தி­ருந்தார். கடந்த 1ஆம் திகதி காஸாவில் ஜபா­லியா அக­தி­முகாம் மீது குண்­டுத்­தாக்­குதல் நடாத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து பாகிஸ்தான் இஸ்ரேல் மீதான தனது நிலைப்­பாட்­டினை மேலும் பலப்­ப­டுத்திக் கொண்­டது. பாகிஸ்தான் வெளி­வி­வ­கார அமைச்சர் மிலேச்­சத்­த­ன­மான தாக்­குதல் இது என கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

ஆபி­ரிக்கா
55 நாடு­களின் உறுப்­பு­ரி­மையைக் கொண்ட ஆபி­ரிக்கா சங்கம் பலஸ்­தீ­னுக்கு ஆத­ரவு தெரி­வித்து கடந்த ஒக்­டோபர் 07 ஆம் திகதி அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

பலஸ்­தீன மக்­களின் அடிப்­படை உரி­மைகள் குறிப்­பாக பலஸ்­தீ­னத்தை சுயா­தீ­ன­மான, சுதந்­தி­ர­மான நாடு என்­பதை மறுக்­கின்­ற­மையே இஸ்­ரேல்-­ ப­லஸ்­தீன தொட­ரான முரண்­பா­டு­க­ளுக்கும் காரணம் என ஆபி­ரிக்க சங்கம் தெரி­வித்­துள்­ளது.

சோமா­லியா பிர­தமர் ஹம்ஸா ஆப்­தி ­பாரே ஹமாஸ் இயக்­கத்தை பயங்­க­ர­வாத இயக்­க­மாக கரு­த­வில்லை எனவும் அவ்­வ­மைப்­புக்கு பூரண ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

டியு­னீ­சியா ஆரம்­பத்­தி­லி­ருந்து பலஸ்­தீன மக்­க­ளுக்கு நிபந்­த­னை­க­ளற்ற பூரண ஆத­ரவைத் தெரி­வித்து வந்­தாலும் ஐ.நா.சபையின் பிரே­ர­ணைக்கு வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்தும் விலகியிருந்தது. வாக்களிப்பிலிருந்தும் விலகியிருந்த ஏனைய ஆபிரிக்க நாடுகள் கமரூன், எதியோப்பியா, தென் சூடான் மற்றும் சம்பியா என்பனவாகும்.

ஒக்டோபர் 27 ஆம் திகதி ஐ.நா வில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை எந்தவொரு ஆபிரிக்க நாடும் நிராகரிக்கவில்லை.

லத்தீன் அமெரிக்கா
பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள் ஐ.நாவின் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. காஸாவுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இஸ்ரேல் மீதான உறவினைத் துண்டித்துக் கொண்ட முதலாவது லத்தீன் அமெரிக்கா நாடு பொலிவியாவாகும்.

காஸா மீதான கொடூரத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொலம்பியா மற்றும் சிலி ஆகிய நாடுகள் தங்களது நாட்டின் தூதுவர்களை இஸ்ரேலிலிருந்தும் மீள அழைத்துக் கொண்டன.

பிரேஸில் ஜனாதிபதி இஸ்ரேல் பொதுமக்கள் மீது ஹமாஸ் இயக்கம் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்ததுடன் அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறியிருந்தார். ஆனால் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ளார்.

ஐ.நாவின் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த தெற்கு அல்லது மத்திய அமெரிக்க நாடுகள் பரகுவே மற்றும் கெளத்தமாலா ஆகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.