அ.இ.ம.கா.விலிருந்து அலி சப்ரி ரஹீம் நீக்கம்

0 201

அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக கட்­சி தவி­சாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரி­வித்­துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
“பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் மீது கட்­சியின் ஒழுக்­காற்றுக் குழு நடத்­திய தொடர்ச்­சி­யான விசா­ர­ணையின் பின்­னரே, கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து அவரை நீக்கும் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது. பொறுப்­புள்ள மக்கள் பிர­தி­நி­தி­யான அலி சப்ரி ரஹீம் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கத்தைக் கடத்­திய சம்­பவம், கட்­சிக்கும் சமூ­கத்­துக்கும் அவரை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்­க­ளுக்கும் மற்றும் நாட்­டுக்கும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யி­லேயே, இவரின் உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு முடி­வெ­டுக்­கப்­பட்­டது.
இது தொடர்பில், விசா­ரணை நடத்­திய ஒழுக்­காற்றுக் குழுவின் தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொண்ட அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உயர்­பீடம் இந்த முடிவை எடுத்­துள்­ளது.

கடந்த பொதுத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கும் முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் (MNA) இடையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட தேர்தல் உடன்­ப­டிக்­கையின் பிர­காரம், தராசுச் சின்­னத்தில் அலி சப்ரி ரஹீம் போட்­டி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­கி­ணங்க, இவ­ரது பதவி விலக்கல் குறித்த கடிதம் முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் நயீ­முல்­லா­வுக்கும், அலி சப்ரி ரஹீ­முக்கும் தனித்­த­னி­யாக அனுப்­பப்­பட்­டுள்­ளது.”

கடி­தத்தைப் பொறுப்­பேற்­றுள்ள முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் நயீ­முல்லா, இது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மேலும் தெரிவித்துள்ளார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.