எம்.பி. பதவியிலிருந்து மஹிந்தவை நீக்கவே ஹக்கீம், சுமந்திரன் முயற்சி

நல்லிணக்கத்திற்கு பாதிப்பு என்கிறார் பந்துல

0 1,025

மஹிந்த ராஜபக் ஷவை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து நீக்க சுமந்­திரன், ஹக்கீம் முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இன­வாத நட­வ­டிக்கை நாட்டின் நல்­லி­ணக்கம் மற்றும் அமை­திக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விடும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.

கொழும்பில் அமைந்­துள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சுதந்­திர ஊடக கேந்­திர நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

2015ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிட்ட அனை­வரும் தொடர்ந்தும் அந்தக் கூட்­டணில் இருக்­கின்­றனர். எவரும் அதி­லி­ருந்து விலக்­கப்­ப­டவோ நீக்­கப்­ப­டவோ இல்லை. அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக் ஷ உட்­பட அனை­வரும் இன்னும் கட்சி அங்­கத்­துவ கட்­ட­ண­மான 3ஆயிரம் ரூபாவை செலுத்தி வரு­கின்­றனர்.

அத்­துடன் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியில் அங்­கத்­துவம் பெற்­ற­தாக தெரி­வித்து மஹிந்த ராஜபக் ஷவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி இல்­லாமல் போக­வி­ருப்­பதால் அவ­ருக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்க முடி­யா­தென தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்து வரு­கின்­றது. அவர்­க­ளுடன் ரவூப் ஹக்­கீமும் இது தொடர்பில் வாதிட்டு வரு­கின்றார். மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சுமந்­திரன் எம்.பியும். அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் இன­வாதக் கோணத்­திலே பார்க்­கின்­றனர்.

அத்­துடன் இவர்கள் மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்­துக்கு தகு­தி­யற்­ற­வர்போல் சித்­தி­ரித்து அவரை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றவே முயற்­சித்து வரு­கின்­றனர். மஹிந்த ராஜபக் ஷ 2009ஆம் ஆண்டு பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க நட­வ­டிக்கை எடுத்­ததே அவ­ருடன் இந்­த­ளவு இவர்கள் வைராக்­கி­யத்­துடன் இருக்­கின்­றனர்.

இவர்­களின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது நாட்டின் இன நல்­லி­ணக்கம் மற்றும் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பாரி­ய­தொரு தடை­யாக அமையும். ஏனெனில் நாட்­டி­லி­ருந்த பயங்­க­ர­வாத யுத்­தத்தை ஒழித்து மூவின மக்­களும் அச்­ச­மின்றி வாழ்­வ­தற்­கான சூழலை மஹிந்த ராஜபக் ஷவே ஏற்­ப­டுத்­தினார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யைச்­சேர்ந்த எவரும் பொது­ஜன பெரமுனவில் அங்கத்துவம் பெறவில்லை. மாறாக அங்கத்துவம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தையே பெற்றுக் கொண்டுள்ளனர். அதனையே ஊடகங்களில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக் கப்பட்டிருக்கின்றன என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.