காஸாவில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கொழும்பில் அஞ்சலி

0 204

(நா.தனுஜா)
இஸ்­ரே­லினால் காஸாவில் நடத்­தப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்­களின் பலி­யான சிறு­வர்­களை நினை­வு­கூரும் வகையில் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­ட நிகழ்வில், சிவில் செயற்­பாட்­டா­ளர்­களும் ­ம­தத்­த­லை­வர்­களும், பொது­மக்­களும் அச்­சி­று­வர்­களின் புகைப்­ப­டங்­க­ளுக்கு மலர்­தூவி, மெழு­கு­வர்த்தியேற்றி அஞ்­சலி செலுத்­தி­னர்.

இந்­நி­கழ்வில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா செயிட்டும் கலந்­து­கொண்­டி­ருந்தார்.

ஹமாஸ் அமைப்­பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்­ரேலில் நடத்­தப்­பட்ட தபக்­கு­தலை அடுத்து தீவி­ர­ம­டைந்­துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் நீட்­சி­யாக கடந்த ஒரு மாத­கா­ல­மாக காஸாவில் இஸ்­ரே­லிய படை­யினர் நடத்­தி­வரும் தொடர் தாக்­கு­தல்­களில் பெரு­ம­ள­வான சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லாக 10 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

இருப்­பினும் அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்­மனி போன்ற மேற்­கு­லக நாடு­களின் அர­சாங்­கங்கள் இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வ­ளித்­து­வ­ரு­வ­துடன் அதன் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களைக் கண்­டிக்கத் தவ­றி­யுள்­ளன. இருப்­பினும் மேற்­கு­றிப்­பிட்ட நாடுகள் உட்­பட உலகில் பல்­வேறு நாடு­க­ளிலும் எவ்­வித இன, மத, மொழி பேதங்­க­ளு­மன்றி சகல மக்­களும் ஒன்­றி­ணைந்து இஸ்­ரேலின் தொடர் தாக்­கு­த­லுக்­கான வன்­மை­யான கண்­ட­னத்­தையும், பலஸ்­தீன மக்­க­ளு­ட­னான தமது உடன்­நிற்பு மற்றும் ஒரு­மைப்­பாட்­டையும் வெளிப்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றனர்.

அந்­த­வ­கையில் கடந்த சில வாரங்­க­ளாக இலங்­கை­யிலும், குறிப்­பாக தலை­நகர் கொழும்பில் பலஸ்­தீன மக்­க­ளுக்­கான ஆத­ர­வையும், உடன்­நிற்­பையும் வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லான கவ­ன­யீர்ப்­புப்­போ­ராட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

அதன் ஓரங்­க­மாக இஸ்­ரே­லிய படை­யி­னரால் காஸாவில் நடத்­தப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்­களில் பலி­யான சிறு­வர்­களை நினை­வு­கூரும் அதே­வேளை, இஸ்ரேல் – பலஸ்­தீன போர்­நி­றுத்­தத்தை வலி­யு­றுத்தும் வகை­யி­லான நிகழ்­வொன்று நேற்று புதன்­கி­ழமை கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன தூத­ர­கத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் ஒன்­றி­ணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்­நி­கழ்வில் மதத்­த­லை­வர்­களும், பொது­மக்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
அவர்கள் காஸாவில் கொல்லப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், அப்புகைப்படங்களின் முன்னால் மெழுகுவர்த்திகளை ஏற்றியும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையிலான அட்டைகளை வைத்தும் அச்சிறுவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.