35 ஆயிரம் வீடுகள் அழிப்பு 10,500 மக்கள் படுகொலை

போரை நிறுத்த இஸ்ரேல் மறுப்பு முஸ்லிம் நாடுகள் சவூதியில் கூடுகின்றன

0 203

பலஸ்­தீனின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் ஒரு மாதத்­திற்கும் மேலாக நடாத்தி வரும் தாக்­கு­தல்­களில் நேற்று மாலை வரை 10500க்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் சுமார் 35 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான வீடுகள் முற்­றாக அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக பலஸ்­தீன தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
காஸாவின் மனி­தா­பி­மான நெருக்­கடி தீர்க்­க­மான கட்­டத்தை அடைந்­துள்ள நிலையில் உட­ன­டி­யாக போரை நிறுத்­து­மாறு ஐக்­கிய நாடுகள் சபை உட்­பட மேலும் பல நாடுகள் இஸ்­ரே­லுக்கு அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்­றன. எனினும் ஹமா­ஸினால் பணயக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்­டுள்ள 240 பேரும் விடு­விக்­கப்­ப­டாத வரை போரை நிறுத்த முடி­யாது என இஸ்ரேல் பிர­தமர் நெதன்­யாஹ{ தெரி­வித்­துள்ளார்.

இத­னி­டையே, பலஸ்­தீன விவ­காரம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக விசேட அரபு லீக் மாநாடு எதிர்­வரும் சனிக்­கி­ழமை ரியாத்தில் நடை­பெ­று­கின்ற நிலையில், மறுநாள் ஞாயிற்­றுக்­கி­ழமை முஸ்லிம் நாடு­களை உள்­ள­டக்­கிய மற்­றொரு மாநாட்டை சவூதி அரே­பியா ஏற்­பாடு செய்­துள்­ளது. பலஸ்­தீன விவ­கா­ரத்தில் முஸ்லிம் நாடு­களை ஒரே நிலைப்­பாட்டுக் கொண்­டு­வ­ரு­வதை இந்த மாநாடு நோக்­காகக் கொண்­டுள்­ள­தாக அரபு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.
காஸா மீதான தாக்­கு­தல்­களை தடுத்து நிறுத்­தாது வேடிக்கை பார்ப்பதாக உல­கெங்­கி­லு­மி­ருந்து அரபு நாடுகள் மீது பலத்த விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­யி­லேயே இம்­மா­நா­டுகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

இத­னி­டையே பலஸ்­தீனின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் ஒரு மாதத்­திற்கும் மேலாக நடாத்தி வரும் தாக்­கு­தல்­களில் நேற்று மாலை வரை 10569 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பலஸ்தீன் சுகா­தார அமைச்சின் பேச்­சாளர் டாக்டர் அஸ்ரப் அல் குத்ரா தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு கொல்­லப்­பட்­ட­வர்­களில் 4324 சிறு­வர்­களும் 2823 பெண்­களும் 649 வயோ­தி­பர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இதற்கு மேல­தி­க­மாக 26475 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்­திரம் 214 பேர் காஸாவில் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
மேலும் இது­வ­ரை­யான தாக்­கு­தல்கள் மூலம் சுமார் 2550 பேர் காணாமல் போயுள்­ளனர். இவர்­களில் 1350 பேர் சிறு­வர்­க­ளாவர். இவர்கள் அனை­வரும் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்கி உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.
193 மருத்­துவ ஊழி­யர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 45 அம்­பி­யூ­லன்ஸ்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

மருந்துப் பொருட்கள், எரி­பொ­ரு­ளுடன் மருத்­துவ சேவை­யா­ளர்கள் காஸா­வுக்குள் நுழை­வ­தற்கும் காய­ம­டைந்த ஆயிரக் கணக்­கானோர் காஸாவை விட்டு வெளி­யே­று­வ­தற்கும் அனு­ம­திக்­கு­மாறும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இதே­வேளை, தரை வழி­யாக இஸ்­ரே­லியப் படைகள் காஸா­வினுள் நுழைந்­ததைத் தொடர்ந்தும் ஹமாஸ் அமைப்­பி­னரின் தாக்­கு­தல்­களில் இது­வரை 33 இஸ்­ரே­லிய படை­யினர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 260 பேர் காய­ம­டைந்­துள்­ளதை இஸ்ரேல் உறுதி செய்­துள்­ளது.

காஸாவின் மொத்த சனத்­தொ­கை­யான 2.3 மில்­லியன் பேரில் 1.5 மில்­லியன் பேர் இது­வரை இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். காஸா மக்கள் தமது இருப்­பி­டங்­களை விட்டு வெளி­யே­று­வ­தற்­காக இஸ்­ரே­லிய இரா­ணுவம் தினமும் 4 மணி நேர அவ­காசம் வழங்­கு­கி­றது. இதனால் நேற்று முன்­தினம் மாத்­திரம் ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். இவ்­வாறு திங்கட் கிழமை 5000 பேரும் ஞாயிற்றுக் கிழமை 2000 பேரும் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

ஐ.நா. தக­வல்­க­ளின்­படி வடக்கு காஸாவில் எரி­பொருள், நீர் மற்றும் கோதுமை மா தட்­டுப்­பாடு கார­ண­மாக சகல பேக்­க­ரி­களும் மூடப்­பட்­டுள்­ளன. பல பேக்­க­ரிகள் குண்டு வீச்­சினால் முற்­றாக அழி­வ­டைந்­துள்­ளன.

கடந்த ஒக்­டோபர் 7 முதல் நவம்பர் 7 வரை­யான ஒரு மாத காலத்தில் 212000 வீடுகள் குண்டு வீச்­சினால் சேத­மா­கி­யுள்­ளன. இவற்றில் 35 ஆயிரம் வீடுகள் முற்­றாக அழிக்­கப்­பட்­டுள்­ளன. 258 கல்வி நிலை­யங்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 51 வீத­மான வைத்­தி­ய­சா­லைகள் தமது செயற்­பாட்டை நிறுத்­தி­யுள்­ளன. 57 அம்­பி­யூ­லன்ஸ்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 167 பள்­ளி­வா­சல்­களும் தாக்­கு­த­லுக்கு இலக்காகியுள்ளன.

இது­வரை 41 ஊட­க­வி­ய­லா­ளர்கள் மோதல் பகு­தி­களில் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக எல்­லை­யற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இவர்­களில் 36 பேர் பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாவர். லெப­னானல் மீது இஸ்ரேல் நடாத்­திய தாக்­கு­தலில் ஒரு லெபனான் ஊட­க­வி­ய­லா­ளரும் ஒக்­டோபர் 7 அன்று ஹமாஸ் நடாத்­திய தாக்­கு­தலில் 4 இஸ்­ரே­லிய ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.