ஒன்றரை தசாப்தம் தாண்டிய சமூகத்திற்கான வெற்றிப் பயணம்

0 595

முஸ்லிம் சமூ­கத்தின் முதன்மைக் குர­லாக ஒலிக்கும் உங்கள் அபி­மான விடி­வெள்ளி பத்­தி­ரிகை தனது பய­ணத்தில் இன்­றுடன் 15 வரு­டங்­களைப் பூர்த்தி செய்து 16 ஆவது ஆண்டில் கால் பதிக்­கி­றது. அல்­ஹம்­து­லில்லாஹ்.

விடி­வெள்ளி வார பத்­தி­ரி­கையின் முத­லா­வது இதழ் 2008 நவம்பர் 06 ஆம் திகதி பிர­சு­ர­மா­னது. அன்று முதல் இன்று வரை வார இதழ் தனது பய­ணத்தை சுமார் 750 வாரங்­க­ளுக்கும் மேலாக இடை­ய­றாது தொடர்ந்து வரு­கின்­றது. விடி­வெள்­ளி­யினால் கவ­ரப்­பட்ட அதன் வாச­கர்கள் அதனை தின­சரி பத்­தி­ரி­கை­யா­கவும் வெளிக் கொண­ரு­மாறு விடுத்த வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க 2015 பெப்­ர­வரி 16 ஆம் திகதி முதல் விடி­வெள்ளி தின­சரி பத்­தி­ரி­கையும் தனது பய­ணத்தை ஆரம்­பித்­தது. சுமார் 5 வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக தின­சரி பத்­தி­ரிகை வெளி­வந்த நிலையில், உல­கையே முடக்­கிய கொவிட் 19 பேர­னர்த்தம் கார­ண­மாக 2020 பெப்­ர­வரி மாதத்­துடன் விடி­வெள்­ளியின் தின­சரி பத்­தி­ரி­கையை இடை­நி­றுத்த வேண்­டிய இக்­கட்­டான சூழ்­நிலை ஏற்­பட்­டது. இருப்­பினும் இந்த நெருக்­க­டி­யான கால கட்­டத்­தில்­கூட விடி­வெள்ளி மின்­னி­த­ழாக தனது பய­ணத்தை தொடர்ந்­த­தையும் அக் காலப்­ப­கு­தியில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய பல்­வேறு சவால்­களை உல­குக்கு வெளிச்­ச­மிட்டுக் காட்­டி­ய­தையும் வாச­கர்கள் மறந்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

நாட்டில் கொவிட் அனர்த்தம், பொரு­ளா­தார நெருக்­கடி போன்ற பல்­வேறு சவால்கள் தோற்றம் பெற்ற போதிலும் விடி­வெள்ளி வார இதழ் தனது பய­ணத்தை தொடர்ந்து இன்று 16 ஆவது ஆண்டில் கால் பதிக்­கின்­றமை அதன் வர­லாற்றில் ஒரு மைல் கல் எனலாம்.

மூன்று தசாப்­தங்­க­ளாக நீடித்த இன வன்­மு­றைகள் மற்றும் போர் கார­ண­மாக இலங்கை முஸ்லிம் சமூ­கமும் பாரிய இன்­னல்­களை அனு­ப­விக்க நேர்ந்­தது. வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை, கடத்­தப்­பட்டு காண­ம­லாக்­கப்­பட்­டமை, பள்­ளி­வாசல் படு­கொ­லைகள், இடப்­பெ­யர்­வு­களால் ஏற்­பட்ட மீள்­கு­டி­யேற்ற சவால்கள் என அக் காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் முகங்­கொ­டுத்த பிரச்­சி­னை­களின் பட்­டி­யல்கள் நீள­மா­னவை. இனப் பிரச்­சினைத் தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்கும் நியா­ய­மான பங்கு வழங்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையும் இக் காலப்­ப­கு­தி­யி­லேயே வீரியம் பெற்­றி­ருந்­தன.

இந் நிலையில் இவற்றை வெளிக் கொணர்ந்து முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல், சமூக, கல்வி, பொரு­ளா­தார வாழ்வை மேம்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்டே இலங்­கையின் தமிழ் பத்­தி­ரிகை வர­லாற்றில் நீண்ட அனு­ப­வம்­வாய்ந்த எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் நிறு­வ­னத்­தினால் 2008 இல் விடி­வெள்ளி பத்­தி­ரிகை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

2009 இல் யுத்தம் முடி­வுக்கு வந்­த­போ­திலும் 2012 முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தோன்­றிய இன­வாத பிர­சா­ரங்கள் மற்றும் வன்­மு­றை­களின் போதும் சமூ­கத்தின் குர­லாக ஒலிப்­பதில் விடி­வெள்ளி தனது காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை வழங்­கி­யது. அதே­போன்று கொவிட் 19 அனர்த்­தத்தின் போது இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுத்த பல­வந்த ஜனாஸா எரிப்பு கொள்­கையை கைவி­டு­மாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் வழங்­கு­வ­திலும் விடி­வெள்ளி தனது பங்­க­ளிப்பை வழங்­கி­யது.

துர­திஷ்­வ­ட­ச­மாக , 2019 ஏப்­ரலில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து முஸ்­லிம்கள் மிகப் பாரிய சவால்­களை எதிர்­நோக்­கினர். இக் காலப் பகு­தியில் முஸ்லிம் சமூ­கத்தில் தோற்றம் பெற்ற வன்­முறைத் தீவி­ர­வா­தத்தை விடி­வெள்ளி வெகு­வாகக் கண்­டித்­த­துடன் மார்க்­கத்தின் பெயரால் முன்­னெ­டுக்­கப்­படும் தீவிரப் போக்­குக்கு எதி­ரா­கவும் தனது பேனா முனையைக் கூர்­மை­யாகப் பயன்­ப­டுத்­தி­யது. அது­மாத்­தி­ர­மன்றி இத் தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தி­ய­துடன் இத­னுடன் எந்­த­வித சம்­பந்­த­மு­மின்றி அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்டு வருடக் கணக்கில் சிறையில் வாடும் அப்­பாவி முஸ்­லிம்­களை விடு­தலை செய்­யு­மாறும் வலி­யு­றுத்தி வரு­கி­றது.

உள்­நாட்டு முஸ்லிம் விவ­கா­ரங்கள் மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச முஸ்லிம் உம்­மா­வுடன் தொடர்­பு­பட்ட விவ­கா­ரங்கள் பற்றி மக்­களை அறி­வூட்­டு­வ­திலும் விடி­வெள்ளி கணி­ச­மான பங்­க­ளிப்பைச் செய்து வரு­கி­றது. குறிப்­பாக பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல் நடாத்தும் இன­வ­ழிப்பை ஆரம்பம் முதலே விடி­வெள்ளி கண்­டித்­து­வ­ரு­கி­றது. தற்­போது காஸாவில் நடக்கும் அவ­லங்­களை விடி­வெள்ளி தொடர்ச்­சி­யாக முக்­கி­யத்­து­வ­ம­ளித்து பிர­சு­ரித்து வரு­கி­றது.
முஸ்லிம் சமூகம் பல்வேறு வழிகளிலும் பிளவுபட்டும் பலவீனப்பட்டுமுள்ள இக் காலப்பகுதியில் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக விடிவெள்ளி தொடர்ச்சியாக ஆக்கங்களைப் பிரசுரித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதுமாத்திரமன்றி, தேர்தல் காலங்களிலும் முஸ்லிம் சமூகம் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் வகையிலான வழிகாட்டல்களை விடிவெள்ளி வழங்கியுள்ளது என்பதை வாசகர்கள் நன்கறிவார்கள்.

இவ்­வாறு பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் முஸ்லிம் சமூ­கத்தின் முதன்மைக் குர­லாக ஒலிக்கும் விடி­வெள்­ளிக்கு தொடர்ச்­சி­யாக பேரா­த­ர­வ­ளித்­து­வரும் அதன் வாச­கர்கள் என்­றென்றும் நன்­றிக்­கு­ரி­ய­வர்கள். அதே­போன்று எமது பத்­தி­ரிகை முக­வர்கள், விநி­யோ­கஸ்­தர்கள்,விளம்­ப­ர­தா­ரர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், எழுத்­தா­ளர்கள், இலக்­கி­ய­வா­திகள் என சகல தரப்­பு­க­ளுக்கும் எமது நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறோம். அத்­துடன் எவ்­வா­றான சவால்கள் தோற்றம் பெறு­கின்ற போதிலும் அவற்­றையும் தாண்டி இப் பயணம் தொடர்­வ­தற்கு வாச­கர்­க­ளா­கிய உங்கள் ஆத­ரவை என்­றென்றும் எதிர்­பார்க்­கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரதும் தூய பணிகளை அங்கீகரிப்பானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.