‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்’ ஹக்கீமின் கருத்தை நிராகரிக்கிறது பேராயர் இல்லம்

0 215

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இஸ்ரேல் உள்­ள­தாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தன்­னிடம் கூறினார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்தை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தாக கொழும்பு பேராயர் இல்லம் தெரி­வித்­துள்­ளது.

பாரா­ளு­மன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்­கையில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இஸ்ரேல் இருப்­ப­தாக தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்தை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தாக கொழும்பு பேராயர் இல்­லத்தின் பொது மக்கள் மற்றும் தொடர்­பாடல் பணிப்­பாளர் அருட் தந்தை ஜுட் கிரி­ஷாந்த தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
“பேரா­யரை தான் சந்­தித்­த­போது, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் நடத்­த­வில்லை எனவும், மத்­திய கிழக்கு நாடொன்று குறிப்­பாக இஸ்­ரேல்தான் இதன் பின்­ன­ணியில் உள்­ளது என கூறினார் என்று ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

பாப்­ப­ர­சரை சந்­திப்­ப­தற்­காக பேராயர் தற்­போது வத்­திக்­கா­னுக்கு சென்­றுள்ளார். மேற்­படி அறி­விப்பை தான் கண்­டிப்­ப­தாக அறி­விக்­கு­மாறு அவர் எனக்கு தெரி­யப்­ப­டுத்­தினார். பேராயர் ஒரு­போதும் இப்­ப­டி­யா­ன­தொரு அறி­விப்பை விடுக்­க­வில்லை. அண்­மித்த காலப்­ப­கு­தியில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை அவர் சந்­திக்­கவும் இல்லை.

இஸ்­ரேலின் தலை­யீட்­டு­டன்தான் இத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது என பேராயர் கூற­வில்லை. சர்­வ­தேச அழுத்­த­மொன்று இதன் பின்­ன­ணியில் இருந்­தி­ருக்­க­கூடும் என்றே கூறி­யி­ருந்தார். அதே­போல இத்­தாக்­கு­த­லுடன் இலங்­கையில் உள்ள அர­சி­யல்­வா­திகள், அரச அதி­கா­ரிகள் தொடர்­பு­ப­ட­வில்லை எனவும் பேராயர் ஒரு­போதும் கூற­வில்லை. அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றவே இத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்கும் என்ற எமது சந்­தேகம் மாற­வில்லை.

ஹக்கீம் கூறும் கருத்தை கத்­தோ­லிக்க சபை நிரா­க­ரிக்­கின்­றது. அது அப்­பட்­ட­மான பொய்­யாகும். அர­சியல் இலா­பத்­துக்­காக ஹக்கீம் அவ்வாறு தெரிவித்தாரா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே, பொய்யுரைக்காமல் தன்னால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்தை ஹக்கீம் மீளப்பெற வேண்டும்” எனவும் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.