பலஸ்தீனை கைவிட்டுவிட்ட உலக நாடுகள் மனிதப் பேரவலம் தொடர்கிறது

0 267

எம்.ஐ.அப்துல் நஸார்

காஸாவில் கடந்த 25 நாட்­க­ளுக்கும் மேலாக இஸ்ரேல் நடாத்தி வரும் வான் மற்றும் தரை வழித்­தாக்­கு­தல்­களில் இது­வரை 8700 க்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்கள் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 2000 பேர் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் பல நாட்­க­ளாக சிக்­கி­யுள்­ள­தாக பலஸ்­தீன சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­துள்­ளது. இவ்­வாறு சிக்­கி­யுள்­ள­வர்­களின் 1100க்கும் அதி­க­மானோர் குழந்­தைகள் மற்றும் சிறு­வர்கள் என்றும் மீட்புப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான வச­திகள் எதுவும் இன்­மையால் அவர்­களை மீட்­பது சாத்­தி­ய­மற்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத­னி­டையே காஸாவில் மக்கள் செறிந்து வாழும் ஜபா­லியா அக­திகள் முகாம் மீது இஸ்ரேல் நடாத்­திய கொடூ­ர­மான வான் தாக்­கு­தலில் 400க்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் மேலும் நூற்றுக் கணக்­கானோர் காய­ம­டைந்­துள்­ளனர். கடந்த 17 ஆம் திகதி காஸாவின் அல் அஹ்லி மருத்­து­வ­மனை மீது நடாத்­தப்­பட்ட தாக்­கு­தலின் பின்னர் அதி­க­மானோர் கொல்­லப்­பட்ட தாக்­கு­த­லாக இது கரு­தப்­ப­டு­கி­றது.

பலஸ்­தீ­னிய சுகா­தார அமைச்சின் நேற்று மாலை வரை­யான தக­வல்­க­ளின்­படி, ஒக்­டோபர் 7 முதல் காஸா பகு­தியில் 8,796 க்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர், இதில் 3,524 சிறு­வர்கள் மற்றும் 2,187 பெண்கள் அடங்­குவர். அதா­வது காஸாவில் தினமும் 420க்கும் மேற்­பட்ட சிறு­வர்கள், குழந்­தைகள் கொல்­லப்­ப­டு­கின்­றனர் அல்­லது காய­ம­டை­கின்­றனர். கொல்­லப்­பட்ட பலஸ்­தீ­னி­யர்­களில் 70 வீத­மா­ன­வர்கள் குழந்­தைகள் மற்றும் பெண்கள் என்று அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. இதற்கு மேல­தி­க­மாக 21,543 பலஸ்­தீ­னி­யர்கள் காய­ம­டைந்­துள்­ள­தாக பலஸ்­தீ­னிய சுகா­தார அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. ஒக்­டோபர் 7 முதல் நேற்று வரை 6,300 சிறு­வர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.

இதே­வேளை, இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள பொது­மக்­களின் எண்­ணிக்கை 2030 ஆக இருக்கும் என்றும் இவர்­களில் 1,120 பேர் சிறு­வர்கள் என்றும் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இஸ்­ரேலின் தொடர்ச்­சி­யான மற்றும் இடை­வி­டாத வான்­வழித் தாக்­கு­தல்கள், உப­க­ர­ணங்கள் மற்றும் வாக­னங்­களை இயக்­கு­வ­தற்கு எரி­பொருள் பற்­றாக்­குறை போன்ற கார­ணங்­களால் இடி­பா­டு­க­ளுக்கு அடியில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் சாத்­தி­ய­மற்­ற­வை­யாக மாறி­யுள்­ளன.

மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளதால் காஸா­வி­லுள்ள அல் சிபா வைத்­தி­ய­சா­லையின் பணிகள் முற்­றாக செய­லி­ழந்­துள்­ளன. அங்கு பயன்­பாட்டில் உள்ள மின்­பி­றப்­பாக்­கி­களில் இன்னும் சில மணி­நே­ரங்­களில் எரி­பொருள் முடி­வ­டைந்­து­விடும் என நேற்றுக் காலை நடாத்­திய ஊடக சந்­திப்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரி­வித்தார்.

“எமது வைத்­தி­ய­சா­லையில் குறை­மா­தத்தில் பிறந்த 42 குழந்­தைகள் செயற்கை சுவா­சத்­தி­லேயே தங்­கி­யுள்­ளன. மின்­பி­றப்­பாக்­கிகள் செய­லிழந்தால் ஒட்­சிசன் இயந்­திரம் செய­லி­ழக்கும். இதனால் இக் குழந்­தை­களை காப்­பாற்ற முடி­யாது போய்­விடும். சிறு­நீ­ரக நோயா­ளி­க­ளுக்குத் தேவை­யான 57 இரத்த சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரங்­களும் செய­லி­ழக்கும். உலக நாடு­க­ளிடம் உதவி கோரி நாம் அலுத்துப் போய்­விட்டோம். காஸா மக்­களே உங்­க­ளிடம் ஒரு லீற்றர் பெற்றோல் இருந்தால் அதையும் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு வந்து தாருங்கள் என கோரிக்கை விடுக்­கிறேன். இயந்­தி­ரங்கள் செய­லி­ழக்கும் நிலை ஏற்­பட்டால் எங்கள் கண் முன்­னா­லேயே அத்­தனை நோயா­ளி­களும் இறந்­து­போ­வார்கள்” என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜபா­லியா முகாம் மீதான தாக்­கு­த­லுக்குப் பின்னர், டசின் கணக்­கான உடல்கள் வெள்ளை துணியால் சுற்­றப்­பட்டு, காஸா­வி­லுள்ள இந்­தோ­னே­சிய வைத்­தி­ய­சா­லையின் பக்­க­மாக வரி­சை­யாக அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருப்­பதை காட்டும் புகைப்­ப­டங்­களை சர்­வ­தேச ஊட­க­மொன்று வெளி­யிட்­டுள்­ளது.
மின்­சாரத் துண்­டிப்பு மற்றும் வான் அல்­லது பீரங்கித் தாக்­கு­தல்கள் மற்றும் குறைந்­து­வரும் மருந்­துகள் போன்­ற­வற்றால் வைத்­தி­ய­சா­லைகள் திணறி வரு­கின்­றன. காஸாவில் சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்கள் இரவும் பகலும் பணி­யாற்­று­கின்­றனர்.

‘நாங்கள் ஒரு மணித்­தி­யாலம் ஓய்வு எடுத்­துக்­கொள்­கிறோம், ஏனென்றால் எப்­போது நோயா­ளிகள் வரு­வார்கள் என்று எங்­க­ளுக்குத் தெரி­யாது. பல முறை நாங்கள் தாழ்­வா­ரங்­க­ளிலும் சில சம­யங்­களில் வைத்­தி­ய­சா­லையின் காத்­தி­ருப்புப் பகு­தி­க­ளிலும் அறுவை சிகிச்­சைக்­கான இடங்­களை அமைக்க வேண்­டி­யி­ருந்­தது” என டாக்டர் முகம்­மது அல் ரன் தெரி­வித்தார்.

ஹமாஸ் அமைப்பு, எதிர்­வரும் நாட்­களில் சில வெளி­நாட்டு கைதி­களை விடு­விப்­ப­தாக மத்­தி­யஸ்­தர்­க­ளிடம் கூறி­யுள்­ள­தாக, அக் குழுவின் ஆயுதப் பிரி­வான அல்-­கஸ்ஸாம் படைப்­பி­ரிவின் பேச்­சாளர் அபூ உபைதா செவ்­வா­யன்று தெரி­வித்­தி­ருந்தார். பணயக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை அல்­லது அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்­த­வர்கள் என்­பன போன்ற மேல­திக தக­வல்­களை அவர் வெளி­யி­ட­வில்லை.

ஜபா­லியா அக­திகள் முகாம் மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தலை மனி­தா­பி­மான குழுக்கள் கண்­டித்­துள்­ளன.

ரபா கடவை திறப்பு
காய­ம­டைந்த பலஸ்­தீ­னி­யர்­களை சிகிச்­சைக்­காக எகிப்­துக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக ஒக்­டோபர் 7 ஆம் திக­திக்குப் பின்னர் முதன்­மு­றை­யாக நேற்று ரபா எல்லைக் கடவை தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ளது.

காஸாவில் உள்ள எல்லைக் கட­வை­யி­லுள்ள ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கருத்­துப்­படி, காய­ம­டைந்த டசின் கணக்­கான பலஸ்­தீ­னி­யர்கள் எகிப்­திய மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வ­தற்­காக ரபா எல்­லைக்­க­டவை வழி­யாக குண்­டு­வீச்­சுக்­குள்­ளான பகு­தியை விட்டு வெளி­யேற அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

காய­ம­டைந்­த­வர்­க­ளுக்க மேல­தி­க­மாக, காஸா­வினுள் வாழ்ந்­து­வந்த இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை கொண்­ட­வர்­களும் வெளி­யேற அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் எகிப்­தி­லி­ருந்து பல அம்­பி­யூலன்ஸ் வண்­டிகள் முதன்­மு­றை­யாக காஸா­வுக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டன. அவை காய­ம­டைந்­த­வர்­களை எகிப்துக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உல­கெங்கும் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக வீதி­களில் இறங்­கி­யுள்ள மக்கள் இஸ்­ரே­லு­ட­னான தமது இரா­ஜ­தந்­திர உற­வு­களைத் துண்­டிக்­கு­மாறு தத்­த­மது நாடு­க­ளுக்கு அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்­றனர்.

பொலி­வியா இஸ்­ரே­லு­ட­னான உறவைத் துண்­டித்­துள்­ள­துடன் மேலும் பல இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களும் இஸ்­ரே­லுக்­கான தமது தூது­வர்­களை மீள­ழைத்­துள்­ளன. கொலம்­பியா மற்றும் சிலி ஆகிய நாடு­களே இவ்­வாறு தூது­வர்­களை மீள­ழைத்­துள்­ளன.

எனினும் ஐக்­கிய நாடுகள் சபை உட்­பட நூற்­றுக்கும் மேற்­பட்ட நாடுகள் இஸ்­ரேலின் தாக்­கு­தலைக் கண்­டித்­துள்ள போதிலும் அவற்­றினால் இஸ்­ரேலின் தாக்­கு­தலை நிறுத்தி காஸாவில் வாழும் மக்­களைப் பாது­காக்க எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க முடி­ய­வில்லை. அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா போன்ற உலகின் பலம்­வாய்ந்த நாடுகள் இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­துடன் தொடர்ச்­சி­யாக பொரு­ளா­தார மற்றும் இரா­ணுவ உத­வி­க­ளையும் வழங்கி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இத­னி­டையே, ஈரான், துருக்கி, ரஸ்யா போன்ற நாடுகள் இஸ்­ரே­லுக்கு எதி­ரான கடு­மை­யான நிலைப்­பா­டு­களை வெளி­யிட்டு, ஹமா­ஸுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்ள போதிலும் அவற்றின் எச்­ச­ரிக்­கைகள் எந்­த­வ­கை­யிலும் இஸ்­ரேலை அச்­சு­றுத்­து­வ­தாக அமை­ய­வில்லை.

மறு­புறும் சவூதி அரே­பியா, கட்டார், குவைத், ஜோர்தான், லெபனான் போன்ற நாடு­க­ளாலும் இஸ்­ரேலின் காட்­டு­மி­ராண்­டித்­த­னங்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. இந்த நாடுகள் இது­வரை இஸ்­ரே­லுடன் தமது இரா­ஜ­தந்­திர உற­வு­களைத் தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன. லெப­னா­னி­லுள்ள ஹிஸ்­புல்லா இயக்­கத்­தினர் மாத்­திரம் இஸ்­ரே­லுடன் தற்­போது நேர­டி­யாக மோதலில் ஈடு­பட்­டுள்­ளனர்.

நேற்று மாலை இச் செய்தி எழு­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கும்­போதும், காஸா­வி­லுள்ள ஜபா­லியா அகதி முகாம் மீது இரண்­டா­வது தட­வை­யாக இஸ்ரேல் விமானத் தாக்­குதல் நடத்­தி­யதில் 40க்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அல்­ஜெ­ஸீரா செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

ஒக்­டோபர் 7 முதல் நேற்று வரை பலஸ்­தீனில் சரா­ச­ரி­யாக தினமும் 420 பேர் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மணித்தியாலமும் காஸா மீது சராசரியாக 42 குண்டுகள் போடப்பட்டுள்ளன. 12 கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன என அல்ஜெஸீரா நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.