மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் பயணம் தொடர் தோல்வியே

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சாடல்

0 792

மஹிந்­தவின் அர­சியல் பயணம் தொடர் தோல்­வி­யையே சந்­தித்து வரு­கின்­றது. பிர­தமர் பத­விக்குப் போராடி படு­தோல்வி கண்டு இன்று மஹிந்த ராஜபக் ஷ எதிர்­கட்சித் தலைவர் பத­வி­யினை பொறுப்­பேற்­ப­திலும் போட்­டி­யிட வேண்­டிய அவ­சியம் எழுந்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அலரி மாளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மஹிந்த ராஜபக் ஷ முன்­னெ­டுக்கும் அனைத்து செயற்­பா­டு­களும் தோல்­வி­யி­னையே சந்­தித்து வரு­கின்­றன. பிர­தமர் பத­வியை பறித்துக் கொள்­வ­தற்­காக எடுத்த முயற்­சியும் மஹிந்­த­வுக்கு பாரிய சவா­லாக அமைந்­தி­ருந்­தது. தற்­போது எதிர்த்­த­ரப்பு ஆச­னத்தில் அமர்ந்தும் எதிர்­கட்சித் தலைவர் பத­விக்கு இரண்டு தெரி­வுகள் எழுந்­துள்­ளன.

செய்யும் திருட்டு செயற்­பா­டு­க­ளையும் முறை­யாக செய்­ய­மு­டி­யாத பொய்­கா­ரர்­க­ளாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தரப்­பினர் மாறி­யுள்­ளனர். மஹிந்த உள்­ளிட்ட  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சில உறுப்­பி­னர்கள் பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பு­ரி­மையை ஏற்­றி­ருந்­தனர். தற்­போது எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கு சவால் உரு­வா­கி­விட்­ட­தெனத் தெரிந்­ததும் தெளி­வாகப்  பொய்­கூறி உண்­மை­களை மறைக்க முயற்­சிக்­கின்­றனர்.

தவ­று­களை முறை­யாக செய்­யாமல் தவிக்­கின்­றனர் எதிர்த்­த­ரப்­பினர். கடந்த காலங்­களில் நாங்கள் பொது­ஜன பெர­மு­னவின் அங்­கத்­த­வர்கள் என குறிப்­பிட்டு வந்­த­வர்கள் இன்று மன தைரி­யமில்­லாமல், நம்­பிக்­கை­யில்­லாமல் பொது­ஜன பெர­மு­னவின் அங்­கத்­து­வத்தை பெற்­றுக்­கொண்­ட­தற்­கான ஆதா­ரங்கள் காணப்­ப­டு­கின்ற போதிலும் அப்­பட்­ட­மாகப் பொய் கூறி­வ­ரு­கின்­றனர்.

51 நாள் பாரிய போராட்­டத்தின் பின்னர் மீண்டும் ஜன­நா­யகம் மற்றும் பாரா­ளு­மன்­றத்­தினை பலப்­ப­டுத்தி அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­வாக வெற்­றி­பெற்று பெரும்­பான்­மைக்கு அமை­வாக ஆட்சி அமைத்­துள்ளோம். கடந்­த­கால அர­சியல் நிலை­மை­களை எதிர்த்­ததன் கார­ண­மா­கவே ஜன­நா­ய­கத்தை வெற்றி கொண்­டுள்­ளது மாத்­தி­ர­மல்­லாமல் நாட்டின்  ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணான பய­ணத்­தையும் தடுத்து நிறுத்­தி­யுள்ளோம். இந்தப் போராட்­டத்தின் வெற்­றிக்கு சாத­க­மான பிர­தி­ப­லன்­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

ஏனை­ய­வர்­களின் பிழை­யான ஆலோ­ச­னை­களின் கார­ண­மா­கவே  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிழை­யான தீர்மானங்களை முன்னெடுத்து நாட்டு மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத் தினையும் ஏற்படுத்தியிருந்தார். தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏனையவர்களின் ஆலோசனைகளை கேட்டு தீர்மானங்களை முன்வைக்காமல் ஜனநாயக ரீதியாக, சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.