நபிகளாரை அவமதித்த இந்திக்க தொட்டவத்தவை மன்னித்த முஸ்லிம்கள்

0 288

(ஏ.ஆர்.ஏ பரீல்)
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தொடர்­பிலும், இஸ்லாம் மதம் தொடர்­பிலும் பொய்­யான கருத்­து­களைத் தெரி­வித்து மிகவும் கீழ்­த­ர­மான இழி­வான கருத்­து­களை யூடியுப் தளத்தில் பதி­விட்­ட­மைக்­காக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த சோதிடர் இந்­திக்க தொட்­ட­வத்­த­வுக்கு நீதிவான் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் பிணை வழங்­கினார்.

இந்­திக்க தொட்­ட­வத்த இனிமேல் இவ்­வா­றான கீழ்த்­த­ர­மான இழி­வான பேச்­சுக்­களை பொது வெளியில் வெளி­யிடக் கூடாது என்றும் எச்­சந்­தர்ப்­பத்­தி­லேனும் அவ்­வாறு பேசினால் பிணை நிபந்­த­னையை மீறி­யதன் அடிப்­ப­டையில் மீண்டும் கைது செய்­யப்­ப­டுவார் எனவும் நீதிவான் எச்­ச­ரித்தார்.
பிணையில் வைக்­கப்­பட்­டி­ருந்த இந்­திக்க தொட்­ட­வத்த கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாளி­கா­கந்த நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார். அப்­போதே அவ­ருக்கு நிபந்­த­னை­க­ளுடன் கூடிய பிணை வழங்­கப்­பட்­டது.

இவர் கடந்த 6ஆம் திகதி கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது 14 நாட்கள் விளக்­க­ம­றியல் வைக்க நீதி­வா­னினால் உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த வழக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாளி­கா­கந்த நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. அப்­போது சி.ஐ.டி. கணினி குற்றத் தடுப்புப் பிரி­வினர் இந்தத் தவறை ICCPR சட்­டத்தீன் கீழ் பதிவு செய்­வதா? இல்­லையா? என சட்­ட­மா­அ­திபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து இன்னும் ஆலோ­சனை கிடைக்­க­வில்­லை­யென்றும் அது­வ­ரையில் சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் நீதி­வானை வேண்டிக் கொண்­டனர்.

இந்­நி­லையில் இவ்­வ­ழக்கில் முஸ்லிம் சமூ­கத்தின் முறைப்­பாட்­டா­ளர்கள் சார்­பாக ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் மற்றும் சட்­டத்­த­ர­ணி­க­ளான மாஸ் யூசுப், முஹம்மத் அன்வர், பசான் வீர­சிங்க, எம்.கே.எம்.பர்ஸான் என்போர் தமது சமர்ப்­ப­ணத்தை நீதிவான் லோச்­சனா வீர­சிங்­ஹ­விடம் முன்­வைத்­தனர்.

இந்­திக்க தொட்­ட­வத்­த­வுக்கு பிணை வழங்­கு­வதை தாம் எதிர்க்­க­வில்லை. ஆனால் இந்­திக்க தொட்­ட­வத்த எல்லா மதங்­க­ளையும் மிகவும் கேவ­ல­மாக இழி­வு­ப­டுத்தக் கூடி­யவர் என முறைப்­பாட்­டாளர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தனர். அது சம்­பந்­த­மான ஆதா­ரங்­க­ளையும் முன்­வைத்­தனர். இவ­ருக்கு சாதா­ர­ண­மாக பிணை வழங்­காமல் நிபந்­த­னை­யுடன் கூடிய பிணை வழங்க வேண்­டு­மெ­னவும், இனி இவர் இது போன்று மதத்­தையும், மதத் தலை­வர்­க­ளையும் நிந்­திக்கும் வகையில் பேசினால் பிணை ரத்துச் செய்­யப்­பட்டு அவர் கைது செய்­யப்­பட வேண்டும் எனவும் நீதி­வா­னிடம் தெரி­வித்­தனர். அவர் தான் கூறிய இழி­வான வார்த்­தை­க­ளுக்­காக தனது வருத்­தத்தை தெரி­விக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்­டனர்.

அத்­தோடு இஸ்­லாத்தில் நபி­ய­வர்கள் எதி­ரி­க­ளுடன் எவ்­வாறு நடந்து கொண்­டார்கள். எவ்­வாறு எதி­ரி­களை மன்­னித்­தார்கள் என்­பது தொடர்பில் 172 சம்­ப­வங்­களை சட்­டத்­த­ர­ணிகள் நீதி­ப­தி­யிடம் சமர்ப்­பணம் செய்­தனர். மேலும் இவ்­வா­றான வெறுப்புப் பேச்­சுகள் மூலம் மக்­களின் உணர்­வுகள் தூண்­டப்­பட்டு தவ­றான முடி­வு­களை எடுப்­பார்கள் என்றும் இது போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விட்டால் மக்­க­ளுக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு மீதுள்ள நம்­பிக்கை இல்­லாது போய்­வி­டு­மெ­னவும் சுட்­டிக்­காட்­டினர்.

இத­னை­ய­டுத்து இந்­திக்க தொட்­ட­வத்த சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி உபுல் குமா­ரப்­பெ­ரும உட்­பட 4 சட்­டத்­த­ர­ணிகள், முறைப்­பாட்­டா­ளர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­களின் குழாம் முன்­வைத்த வாதத்தை தாம் ஏற்­ப­தா­கவும் தமது சேவை நாடு­னரால் ஏற்­பட்ட தவ­றுக்­காக அனை­வ­ரி­டமும் தங்கள் வருத்­தத்தை தெரி­வித்துக் கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்­டனர். மேலும் இந்­திக்க தொட்­ட­வத்­த­வுக்கு ஐந்து புலன்­க­ளு­மில்லை. அவர் மாற்றுத் திற­னாளி. அதனால் அவரை அறி­யாமல் சில விட­யங்­களைப் பேசி­வி­டு­வா­ரெ­னவும் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

இரு பக்க விவா­தங்­க­ளையும் செவி­ம­டுத்த நீதிவான் லோச்­சனா வீர­சிங்க முஸ்லிம் சமூக முறைப்­பாட்­டா­ளர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் பாராட்­டத்­தக்க முறையில் நடந்து கொண்­ட­தாக சுட்­டிக்­காட்­டினார்.
பிர­தி­வாதி இந்­திக்க தொட்­ட­வத்த புலன் குறைந்­தவர் என்ற விடயம் ஒரு­போதும் அவ­ருக்கு மன்­னிப்­பாக அமைய மாட்­டாது என்றும் அவ­ருக்கு அவ்­வா­றான பிரச்­சினை இருந்தால் அதா­வது தன்னைக் கட்­டுப்­ப­டுத்தி பேச முடி­யா­விட்டால் இவ்­வா­றான மதம் சார்ந்த விட­யங்­களை பொது வெளியில் பேசாமல் தவிர்க்க வேண்டும். ஒரு தனிநபரின் செயற்பாட்டுக்காக முழு நாடும் பிரச்சினையை எதிர்நோக்க விட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்திக்க தொட்டவத்த இனிமேல் இவ்வாறான கீழ்த்தரமான இழிவான பேச்சுக்களை பொது வெளியில் பேசக் கூடாது என்றும் எச்சந்தர்ப்பத்திலேனும் அவ்வாறு பேசினால் பிணை நிபந்தனை யினை மீறியதன் அடிப்படை யில் மீண்டும் கைது செய்யப்படுவாரெனவும் நீதிவான் குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணை 2024 ஜனவரி மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.