21/4 தாக்குதலின் பின்னணியிலும் இஸ்ரேல்

இஸ்ரேலின் உளவாளியாக சஹ்ரான் செயற்பட்டார் ; பாராளுமன்றில் ஹக்கீம்

0 218

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு சில தினங்களின் பின்னர் பேராயர் கர்தினாலை நாங்கள் சந்தித்தோம். அப்போது இஸ்ரேலின் கூலிப் படையினரே இதன் பின்னணியில் இருந்திருக்கலாமென பேராயர் சந்­தேகம் வெளி­யிட்டார். கத்­தோ­லிக்­க­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இக் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்றும் பேராயர் தெரி­வித்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

பலஸ்­தீன யுத்த நிலைமை தொடர்­பான ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவாதம் பாரா­ளு­மன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற போது உரை­யாற்­று­கை­யிலே ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், மத்­திய கிழக்கில் இருக்கும் இஸ்­ரேலே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­தாக விசா­ரணை அறிக்­கை­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் பேரா­சி­ரியர் ரொஹான் குணரத்ன தான் பத்திரிகையொன்றில் எழுதியுள்ள கட்டுரையில் இஸ்ரேலுக்கு சார்பாகவே எழுதியுள்ளார்.

மேலும் சஹ்ரான் இஸ்ரேலின் புலனாய்வுத் துறையுடன் இணைந்து செயற்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்று சில தினங்களுக்கு பின்னர் கத்தோலிக்க சமயத் தலைவரான பேராயர் கர்தினாலை நாங்கள் சந்தித்தோம். அப்போது பேராயர் இஸ்ரேலின் கூலிப் படையினரே இதன் பின்னணியில் இருந்திருக்கலாமெனத் தெரிவித்தார். நானும் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌஸி, கபீர் ஹாஷீம், ரிசாத் பதியுதீனும் பேராயரைச் சந்தித்தோம்.
நாங்கள் பேராயரைச் சந்தித்த போது எங்கள் கவலையை வெளியிட்டோம்.

கிறிஸ்தவர்களை கொலை செய்வதற்கு முஸ்லிம்களுக்கு என்ன தேவை இருக்கிறது. இஸ்ரேல் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர்களது இருப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்காகவே இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. ஏன் நீங்கள் இதற்காக கவலைபடுகிறீர்கள். தாக்குதலுக்கு இந்நாட்டு முஸ்லிம்கள் பொறுப்பானவர்களல்லர் என்று பேராயர் எம்மிடம் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் 106ஆம் பக்கத்தில் சஹ்ரான் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பற்றி விழிப்பாக இருந்ததாக தோன்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் திகதி சஹ்ரான் தனது முகநூல் பக்கத்தில் கடிதமொன்றினைப் பதிவிட்டிருந்தார். அதில் பக்கம் பின் அபூ என்பவர் பற்றி இருந்தது. அவர் ஒரு நாட்டின் உளவுத்துறையின் முகவர் என்று பதிவிட்டுள்ளார். அவர் இவர்களைப் பற்றி அந்த வெளிநாட்டு உளவுத்துறைக்கு தகவல்களை வழங்கி வந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு 2018.10.11ஆம் திகதி பக்கம் பின் கபூர் பதிலளித்துள்ளார். சஹ்ரான் இஸ்ரேல் உளவுத்துறையின் முகவர் எனக் குறிப்பிட்டுள்ளார். சஹ்ரான் இஸ்ரேலினால் வாங்கப்பட்ட முகவராக செயற்பட்டிருக்றிகார். பேராயர் எங்களிடம் தெரிவித்த சந்தேகம் இதனை உறுதிப்படுத்துகிறது.

ஏன் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் புனிதமான தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். உல்லாச பயணிகள் மீதும் குறிப்பிட்ட சில ஹோட்டல்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டும்? புனிதமாக கருதும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஏன் இத் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும். இஸ்ரவேலர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் உயிர் வாழ்வதற்காக எதனையும் செய்வதற்கு துணிந்தவர்கள். அவர்களிடம் நீண்டகாலத் திட்டங்கள் உள்ளன என்றார்- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.