சுதந்­திர ஊட­க­வி­ய­லாளர் லக்மால் டி சில்வா கொலை: நாட்­டை­விட்டு தப்பிச் சென்­ற மேஜர் நிரோஷன் கட்டாரில்

கைது செய்ய சர்­வ­தேச பொலிஸார் ஊடாக நட­வ­டிக்கை

0 779

சுதந்­திர ஊட­க­வி­ய­லாளர்  லக்மால் டி சில்­வாவின் கொலை தொடர்பில் சந்­தேக நபராக அடை­யாளம் காணப்­பட்ட நிலையில், நாட்டை விட்டுத் தப்பிச் சென்­றுள்ள மேஜர் நிரோஷன் தற்­போது கட்­டாரில் தொழில் புரி­வ­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்கை பிர­காரம் அவரின் மனை­வி­யிடம் முன்­னெ­டுக்­கப்ப்ட்ட விசா­ர­ணை­களில் அது தெரி­ய­வந்­த­தாக சி.ஐ.டி.  நேற்று கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­ர­ம­வுக்கு அறி­வித்­தது. இந்­நி­லையில் அவரைக் கைது செய்ய சர்­வ­தேச பொலிஸார் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம  உத்­த­ர­விட்டார்.

இந்த் நிலையில் ஏற்­க­னவே இந்த விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்ட  இரா­ணு­வத்தின் கெமுனு படைப் பிரிவைச் சேர்ந்த, அப்­போது சாதா­ரண இரா­ணுவ வீரரும் யுத்­தத்தில் அங்­க­வீ­ன­ம­டையும் போது சார்ஜண்ட் தர நிலை­யி­லு­மி­ருந்த சிந்­தக வர்­ண­கு­மார என்­ப­வரை தொடர்ந்து எதிர்­வரும் ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கவும் நீதிவான் இதன்­போது உத்­த­ர­விட்டார்.

கடந்த்த டிசம்பர் 10 ஆம் திகதி மாலை சி.ஐ.டி.யின் மனிதப் படு­கொ­லைகள் குறித்த விசா­ரணை அறைக்கு விசா­ர­ணை­க­ளுக்கு அழைக்­கப்பட்ட அவரை சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைக்­க­மை­வாக சி.ஐ.டி. கைது செய்­தி­ருந்த நிலையில் அவர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். சந்­தேக நப­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் தண்­டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளதால் பிணை தொடர்பில் ஆராயும் அதி­காரம் நீதிவான் நீதி­மன்­றுக்கு இல்லை என தெரி­வித்த மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம, சந்­தேக நப­ரான இரா­ணுவ வீரரின் விளக்­க­ம­றியல் காலத்தை எதிர்­வரும் ஜன­வரி 2 ஆம் திக­தி­வரை நீடித்தார்.

இந்த நிலை­யி­லேயே இந்த விவ­கா­ரத்தில் மற்­றொரு சந்­தேக நப­ரான அப்போதைய லெப்­டினன் கொமாண்­டரும் தற்­போது மேஜர் தர அதி­கா­ரி­யு­மான நிரோஷன் அல்விஸ் என்­ப­வ­ரையும் கைது செய்ய உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்­பெற்ற இக்­கொலை தொடர்பில் சி.ஐ.டி.யின் மனிதப் படு­கொ­லைகள் குறித்த விசா­ரணை அறையில் முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணை­க­ளி­லேயே சந்­தேக நபர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். இது தொடர்பில் சி.ஐ.டி. கடந்­த­வாரம்  கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­ர­ம­வுக்கு அறிக்கை சமர்ப்­பித்­துள்ள நிலையில் குறித்த இரு சந்­தேக நபர்­க­ளையும் உடன் கைது செய்து இன்­றைய  தினத்­துக்குள் மன்றில் ஆஜர்­செய்ய உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது.

இரு­தின, லக்­பிம ஆகிய பத்­தி­ரி­கை­களின் ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும்  ஸத்­தின பத்­தி­ரி­கையின் பாது­காப்பு விவ­கார ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றிய லக்மால் டி சில்வா, கடந்த 2006 இல் சுட்­டுக்­கொல்­லப்பட்­டுள்ளார். இரா­ணுவ புல­னாய்வுப்  பிரிவின் உய­ர­தி­காரி ஒரு­வ­ருடன் இரவு உண­வுக்கு செல்­வ­தாக முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வீட்டைவிட்டு வெளியேறியிருந்த அவர் மறு நாள் தெஹிவளையின் குறுக்கு வீதியொன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் மிக நீண்ட விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. சந்தேக நபர்களை கைது செய்ய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.