நான்கு புத்தர் சிலைகளின் கண்ணாடிகளுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

இன முறுகலை தவிர்க்க விரைந்து செயற்பட்ட முஸ்லிம் தரப்பு

0 160

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
கந்­தளாய் மத்­திய பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நான்கு இடங்­களில் அமைந்­துள்ள புத்தர் சிலை­களின் பாது­காப்­புக்­காக அமைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணாடிக் கூண்­டு­க­ளுக்கு சேதம் விளை­வித்த நபர் ஒருவர் கந்­தளாய் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கந்­தளாய் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து நீதிவான் தினிது சம­ர­சிங்க அவரை எதிர்­வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.
இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் உத்­த­ர­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­டவர் கந்­தளாய் பேராறு பகு­தியைச் சேர்ந்த 32 வயது நப­ராவார்.

பொலிஸ் விசா­ர­ணையில் இவர் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நான்கு புத்தர் சிலை­களின் கண்­ணாடிக் கூண்­டு­க­ளுக்கு சேதம் விளை­வித்த சந்­தேக நபர் அதனை வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கந்­தளாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வெலூன்னா ரஜ­மகா விகா­ரையின் பிர­தான வீதியில் அமைந்­துள்ள புத்தர் சிலை, போடன் காடுவ, ரஜ­எல சீவலி வித்­தி­யா­ல­யத்­துக்கு அருகில் மற்றும் ரஜ­எல யுனிட்டி புத்தர் சிலை என்­ப­வற்றின் கண்­ணாடிக் கூண்­டு­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலி­ஸாரின் ‘பி’ அறிக்கை தெரி­விக்­கி­றது.

இத்­தாக்­குதல் பற்­றிய செய்தி வெளி­வந்­ததும் கந்­தளாய் பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் மற்றும் கந்­தளாய் ஜம்­இய்­யத்துல் உலமா கிளை பிர­தி­நி­திகள் கந்­தளாய் பொலிஸ் நிலை­யத்­துக்கு விஜயம் செய்து சம்­பவம் தொடர்பில் தங்கள் கவ­லையை வெளி­யிட்­டனர். சிதை­வுக்­குள்­ளான புத்தர் சிலை­களின் கண்­ணாடிக் கூண்­டு­களை மீள­மைத்து தரு­வ­தாக அவர்கள் தெரி­வித்­தனர். இத­னை­ய­டுத்து கடந்த 21ஆம் திகதி அதற்­கான பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. பொலி­ஸா­ரு­ட­னான சந்­திப்பில் கந்­தளாய் பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் தலைவர் ஏ.ஏ. நஸார் மற்றும் ஜம்­இய்­யத்துல் உலமா கந்­தளாய் கிளையின் சார்பில் மௌலவி எம்.ஆர்.ஜே.எம். ஜெஸீல் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

சம்­பவம் இடம்­பெற்­றதன் பின்பு கந்­தளாய் பிர­தே­சத்தில் இன முறுகல் ஏற்­ப­டாத வண்ணம் பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­தி­களும் உலமா சபையின் கந்­தளாய் கிளை பிர­தி­நி­தி­களும் விரைந்து செயற்­பட்­டனர். அப்­ப­கு­தி­யி­லுள்ள நான்கு பௌத்த விகா­ரை­க­ளுக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு அப்­ப­கு­தியில் சமா­தா­னத்தை உறுதி செய்­தனர்.

கந்­த­ளாயில் அசம்­பா­வி­த­மேதும் நிக­ழா­வண்ணம் பொலி­ஸாரும், பௌத்த மத­கு­ரு­மாரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக உலமா சபை கந்தளாய் கிளையின் உறுப்பினர் ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். அத்தோடு சந்தேக நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுவதாகவும் அவரது மனைவி வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் கூறினார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.