ஆணைக்குழுவில் கையடக்கத் தொலைபேசி விவகாரம்: சட்டத்தரணியாக செயற்பட எட்டு மாதங்களுக்கு தடை

0 214

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் வழங்­கப்­பட்ட சாட்­சி­ய­மொன்­றினை மெள­லவி ஒருவர் கைய­டக்கத் தொலை­பே­சியில் சட்­ட­வி­ரோ­த­மாக பதிவு செய்­வ­தற்கு  உடந்­தை­யா­க­வி­ருந்த சட்­டத்­த­ரணி ஒரு­வரின் சட்­டத்­த­ரணி பதவி நீதி­மன்­றினால் எட்டு மாத காலத்­திற்கு இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உயர் நீதி­மன்றம் குறித்த உத்­த­ரவை வழங்­கி­யுள்­ளது.

அக்­கு­ரஸ்­ஸையைச் சேர்ந்த நிஸாம் மொகமட் சமீம் என்ற சட்­டத்­த­ர­ணிக்கே எதிர்­வரும் ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து எட்டு மாதங்­க­ளுக்கு இத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

புவ­னேக அலு­வி­கார, எஸ்.துரை­ராஜா, மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் இந்த உத்­த­ரவை வழங்­கி­யது.

2020.09.09 ஆம் திகதி ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு வருகை தந்­தி­ருந்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ரான மெள­லவி முர்ஷித் முளப்பர், ஆணைக்­குழு முன்­னி­லையில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் வழங்­கிய சாட்­சி­யத்தை இர­க­சி­ய­மாக தனது குறிப்புப் புத்­த­கத்தின் நடுவில் கைய­டக்கத் தொலை­பே­சியை மறைத்து வைத்து பதிவு செய்­தமை பொலி­சா­ரினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து குறித்த மெள­லவி அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டார்.
சட்­டத்­த­ர­ணி­களைத் தவிர ஏனையோர் ஆணைக்­கு­ழுவின் அமர்வு நடக்கும் அறைக்குள் கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்துச் செல்ல தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் குறிப்­பிட்ட மெள­லவி அதனை எவ்­வாறு எடுத்துச் சென்­றி­ருந்தார் என்­பது தொடர்பில் பொலிசார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். இதன்­போதே குறித்த சட்­டத்­த­ரணி கைய­டக்கத் தொலை­பே­சியை விசா­ரணை மண்­ட­பத்­திற்குள் எடுத்துச் சென்று மெள­ல­வி­யிடம் வழங்­கி­யமை தெரி­ய­வந்­தது. இந்­நி­லையில் சட்­டத்­த­ர­ணியின் இச் செயற்­பாடு தொடர்பில் ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ரினால் உயர்­நீ­தி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.
கடந்த இரு வருட கால­மாக இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், பிரதிவாதியான குறிப்பிட்ட சட்டத்தரணி சட்டத்துறையின் ஒழுக்கவிதிகளுக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக தீர்மானித்து இத்தடை உத்தரவை வழங்கியது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.