20 நாட்களாக தாக்குதல் 6500 பலஸ்தீனர்கள் பலி

உயிரிழந்தவர்களில் அரைவாசிப் பேர் சிறுவர்கள் உணவின்றித் தவிக்கும் காஸா மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அபாயம்

0 247

பலஸ்தீன் மீது இஸ்ரேல் கடந்த 20 தினங்களாக நடாத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 6500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேர் சிறுவர்களாவர். வான் தாக்குதல்களில் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்க்கும் பட்சத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டும் என மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத­னி­டையே, அடிப்­படை வச­திகள் அனைத்தும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளதால் காஸாவில் மக்கள் பட்­டினிச் சாவை எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. ‘‘காஸா­வுக்குள் உட­ன­டி­யாக உத­விகள் சென்­ற­டை­யா­விட்டால் உலகின் மிகப் பெரிய மனிதப் புதை­கு­ழி­யாக காஸா மாறும்’’ என எகிப்து அரச புல­னாய்வுப் பிரிவின் தலைவர் தியா ரஸ்வான் எச்­ச­ரித்­துள்ளார்.
இத­னி­டையே இஸ்ரேல் பட்­டி­னியை ஓர் ஆயு­த­மாக பலஸ்­தீ­னர்கள் மீது பிர­யோ­கிப்­ப­தாக தொண்டு நிறு­வ­ன­மான ஒக்ஸ்பாம் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. இது­வரை காஸா மக்­க­ளுக்குத் தேவை­யான உணவில் 2 வீதம் மாத்­தி­ரமே அங்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

‘‘முழு உல­குமே பார்த்­தி­ருக்க மில்­லியன் கணக்­கான மக்கள் கூட்­டாக தண்­டிக்­கப்­ப­டு­கி­றார்கள்’’ என ஒக்ஸ்பாம் மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்­திற்­கான பணிப்­பாளர் அபீ கலீல் தெரி­வித்­துள்ளார்.

இதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் பெண் ஒருவர் கருத்து வெளி­யி­டு­கையில் ‘‘ 10 பேர் குடும்­பத்­திற்கு ஒரு நாளைக்கு 2 இறாத்தல் பாண் மாத்­தி­ரமே கிடைக்­கி­றது. ஒரு தண்ணீர் போத்­தால்தான் தரு­கி­றார்கள். எம்­மிடம் இருப்­பது பசி மட்­டுமே. வேறு எது­வுமே இல்லை. மல­சல கூடத்­திற்குச் செல்­வ­தற்கு நான்­கைந்து மணித்­தி­யா­லங்கள் காத்­தி­ருக்க வேண்டும். மக்கள் ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளார்கள். ஏன் இங்­க­ளுக்கு இவ்­வ­ளவு அநீதி? யா அல்லாஹ் எமக்கு நடப்­பது அநீதி… அரபு நாடு­களே எமக்கு நடப்­பது அநீதி’’ என அவர் குறிப்­பி­டு­கிறார்.
காஸாவின் சுகா­தார சேவைகள் முற்­றாக செய­லி­ழந்­து­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மின்­சாரம் மற்றும் எரி­பொருள் இல்­லா­ததன் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லை­களை நடாத்த முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது.

கான் யூனு­ஸி­லுள்ள நாசர் வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் வைத்­தியர் முஹம்மத் கந்தீல் நிலை­மையை விப­ரிக்­கையில் ‘‘ என்னால் இங்­குள்ள நிலை­மை­களை வார்த்­தை­களில் வர்­ணிக்க முடி­யா­துள்­ளது. நேற்­றி­ரவு காய­ம­டைந்த 300 பேர் கொண்டு வரப்­பட்­டனர். கொல்­லப்­பட்ட 150 ஜனா­ஸாக்கள் வந்­தன. கடு­மை­யாக காய­ம­டைந்த இரு கர்ப்­பிணித் தாய்­மா­ருக்கு சிசே­ரியன் அறுவைச் சிகிச்சை செய்தோம். வைத்­தி­ய­சா­லை­களில் பணி­யாற்­று­ப­வர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தமது உற­வு­களை இழந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆனாலும் நாம் வேலை செய்­தாக வேண்­டி­யுள்­ளது’’ என்றார்.

காஸா­வி­லுள்ள மக்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அவர்­க­ளது கைகளில் அவர்­க­ளது பெயர் பொறிக்­கப்­பட்ட இறப்பர் பட்­டிகள் அணி­விக்­கப்­பட்­டுள்­ளன. தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழக்கும் பட்­சத்தில் இல­குவில் அடை­யாளம் காணும் வகையில் இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஹமாஸ் ஒரு தீவி­ர­வாத இயக்கம் அல்ல என்றும் அது தமது தாய் நாட்டைப் பாது­காப்­ப­தற்­காக போராடும் விடுதலை இயக்கம் என்றும் துருக்கியின் ஜனாதிபதி அர்துகான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹமாஸ் இயக்கத்தினால் பயணக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கட்டார் தெரிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.