காஸா மீதான தாக்குதல்கள்: அப்பாவி மக்களின் சகிப்புத் தன்மை எதுவரை?

0 312

சிராஜ் மஷ்ஹூர்

காஸாவின் நிலைமை கைமீறி விட்­டது.
நேற்­று முன்தினம் இரவு அல் அஹ்லி வைத்­தி­ய­சா­லையை இஸ்ரேல் தாக்­கி­யதில், இது­வரை 500 இற்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். சில தக­வல்கள் 1000 என்று சொல்­கின்­றன. இன்னும் பல நூற்றுக் கணக்­கானோர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர். இந்தத் தாக்­கு­தலால் முழு உலகும் அதிர்ந்து போயுள்­ளது.

தெற்கு காஸா­வுக்கு இடம்­பெ­ய­ரு­மாறு சொல்­லி­விட்டு, அங்கும் வான்­வ­ழி­த்தாக்­குதல் நடத்­து­கி­றார்கள். இதை யாரிடம் சொல்லி அழு­வது? அங்கு இடம்­பெற்ற 3 தாக்­கு­தல்­களில் மட்டும், இது­வரை நூற்­றுக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

மனி­தா­பி­மான வழிப்­பாடு என்­பது வெறும் மாயை­தானா?
தெற்­கி­லுள்ள கான் யூனிஸ் பகு­தியில் மக்கள் வீதியில் படுத்­து­றங்­கு­கின்­றனர். எந்த அடிப்­படை வச­தி­களும் இல்லை. தனது வீட்டில் மட்டும் 90 பேர் தஞ்சம் புகுந்­துள்­ளார்கள் என்று ஒருவர் சொல்­கிறார். மக்கள் தினமும் குழந்­தை­க­ளுக்கு உணவு தேடி அலைந்த வண்ணம் உள்­ளனர்.

கைமீ­றிய இந்த அவல நிலை கார­ண­மாக, நடப்­பது நடக்­கட்டும் என்று, மக்கள் பலர் மீண்டும் வடக்­கி­லுள்ள தங்­க­ளது வீடு­க­ளுக்குத் திரும்பிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அசுத்­த­மான குடி­நீரை அருந்­து­வதால் கொலரா நோய் ஏற்­படும் அபாயம் தொன்­றி­யுள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வனம் (WHO) சொல்­கி­றது. UNWRA எனப்­படும் பலஸ்­தீ­னுக்­கான ஐ.நா.நிறு­வனம் நிர்­வ­கிக்கும் பாட­சா­லையைத் தாக்கி மக்­களைக் கொல்­கி­றார்கள். இது அகதி முகாம் என்­பது வெட்ட வெளிச்­ச­மான விடயம்.

தான் வீதியில் நாயைப் போல் தாகித்து இறந்து போவதை விட, ‘கண்­ணி­ய­மாக- கௌர­வ­மாக’ இறந்து போவ­தையே விரும்­பு­வ­தாக ஒரு வயோ­திபர் சொல்றார்.
பல நேரலைக் காட்­சி­களைப் பார்க்க முடி­யாமல் நெஞ்சு விம்­மு­கி­றது; கண்கள் குள­மா­கின்­றன.

இந்தப் பாரிய மனி­தா­பி­மான நெருக்­க­டியைச் சமா­ளிப்­பது எப்­படி?
இது பாரிய இன அழிப்பு (Genocide) என்­பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இது அப்­பட்­ட­மான போர்க்­குற்றம் (War Crime).
அல்-­அஹ்லி வைத்­தி­ய­சாலைத் தாக்­கு­தலை ஐ.நா.செய­லாளர் நாயகம் கண்­டித்­துள்ளார். ‘கண்­டனம்’ (Condemn) என்ற சொல்லை, இபோ­துதான் அவர் முதல் தட­வை­யாக பயன்­ப­டுத்­தி­யுள்ளார். எவ்­வ­ளவு பெரிய முரண்­நகை- எவ்­வ­ளவு பக்கச் சார்பு இது.

இந்த ராஜ­தந்­திர நடி­கர்கள் கண்­டிப்­ப­தற்கு, 1000 உயிர்கள் பலி­யாக வேண்­டி­யி­ருக்­கி­றது பாருங்கள்.

அர­பு­லகம் கொதித்துக் கொண்­டி­ருக்­கி­றது.ஜோர்­தானில் மக்கள் பெருந்­தி­ர­ளாக வீதியில் இறங்கி விட்­டார்கள். இஸ்­ரே­லிய தூது­வ­ரா­ல­யத்தை நோக்கிச் சென்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கண்ணீர்ப் புகைக் குண்­டு­களால் கலைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அங்­குள்ள மக்­களுள் பெருந்­தொ­கை­யானோர் பலஸ்­தீ­னர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

எகிப்தின் தலை­ந­க­ரான கெய்­ரோ­விலும் பிரமிட் நக­ரான ஜீஸா­விலும் மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்­கி­றார்கள்.

இவ்­விரு நாடு­க­ளுமே பலஸ்­தீ­னுடன் (மேற்குக் கரை மற்றும் காஸா போன்ற) தரை­வழி எல்­லை­களைக் கொண்­டவை. அங்கு நிலமை கட்­டு­மீறிக் கொண்­டி­ருக்­கி­றது.

இஸ்­ரேலின் அடா­வ­டித்­த­னங்கள் இந்­த­ளவு தீவி­ர­ம­டைந்­தி­ருப்­பது ஏன்?
அவர்­க­ளது அரா­ஜ­கத்தை எப்­போதும் உலக அரங்கில் நியா­யப்­ப­டுத்தும் உலகப் பொலிஸ்­கா­ரர்­களின் தலைவர் இஸ்ரேலுக்கு வந்துள்ளமையும் கவ­னிக்கத் தக்­கது. இதற்குள் பல அர­சியல் சுழிப்­புகள் உள்­ளன. அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடனின் வரு­கையை, உலகம் உன்­னிப்­பாகக் கவ­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

ஈரான் கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. லெப­னா­னி­லுள்ள ஈரான் சார்பு போரா­ளிகள் ஏற்­க­னவே வட இஸ்­ரேலை சிறிய அளவில் தாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர். இஸ்­ரேலும் பதில் தாக்­கு­தலை நடத்தி வரு­கி­றது. லெபனான், சிரியா ஊடாக புதிய போர்க்­க­ளங்கள் வியா­பிப்­பதும் ஈரானின் தலை­யீடும், இந்த யுத்­தத்தை பல­முனைப் போராக மாற்­றி­விடும் அபா­யத்­ததைச் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

ஜோர்­தானின் தலை­ந­ந­ரான அம்­மானில் ஜோ பைடன் இன்று எகிப்தின் சீஸி­யையும் பலஸ்­தீன மஹ்மூத் அப்­பா­ஸையும் சந்­திக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. அந்த சந்­திப்பை ஜோர்தான் ரத்து செய்­துள்­ளது. வைத்­தி­ய­சாலைத் தாக்­கு­தலின் எதி­ரொ­லியே இது.

கள­நி­ல­வரம் புதுப்­புது வடி­வங்­களை எடுத்து வரு­கி­றது. மத்­திய கிழக்கின் தலை­விதி எப்­படி அமையப் போகி­றது என்­பதை முழு உலகும் உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

கட்­டாரும் துருக்­கியும் முன்­னெ­டுத்து வரும் ராஜ­தந்­திர நட­வ­டிக்­கைகள் என்ன விளைவைத் தரப் போகின்­றன? ஐ.நா.பாது­காப்புச் சபை போர் நிறுத்­தத்­திற்கு வழி வகுக்­குமா? ரஷ்­யாவும் சீனாவும் கொண்­டி­ருக்கும் பலஸ்­தீன ஆத­ரவு நிலைப்­பாடு உலக அரங்கில் ஏற்­ப­டுத்தப் போகும் தாக்­கங்கள் எப்­படி அமையும்?

மேற்கு நாடு­களில் மக்கள் வீதிக்கு இறங்கி நியாயம் கேட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அங்­குள்ள அர­சாங்­கங்கள் இரண்­டக நிலையில் தடு­மாறிக் கொண்­டி­ருக்­கின்­றன. மனி­தா­பி­மானம், மனித உரிமை, யுக்ரைன் யுத்தம் ஆகி­ய­வற்றில் அவர்கள் கொண்­டி­ருக்கும் இரட்டை முகம் வெளிப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு செவி­சாய்க்க வேண்­டிய கட்­டாய நிலமை உரு­வா­கி­யுள்­ளது.

பலஸ்­தீன விவ­காரம் இப்­போது ஒரு தீர்­மா­ன­க­ர­மான கட்­டத்தை அடைந்­தி­ருக்­கி­றது. அடுத்து என்ன நடக்கும் என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

போரின் கோர வெறிக்குள் அகப்­பட்­டி­ருக்கும் அப்­பாவி மக்­களின் வாழ்வில் விடிவு வேண்டும்; ஒரு தற்­கா­லிக ஆறு­த­லா­வது வேண்டும். ஒரு துண்டு ரொட்­டியை, ஒரு சொட்டுத் தண்­ணீரை நிம்­ம­தி­யாக உண்­ணவும் பரு­கவும் ஒரு இடை­வெளி தேவை.

கொல்­லப்­பட்ட, காய­முற்ற, வீடு­களை இழந்த, உள்ளம் உடைந்து நொறுங்கிப் போயி­ருக்­கிற- அத்­தனை உறவுகளிடமும் சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும் சென்று கண்ணீர் விட்டு அழ வேண்டும்.

யார் யாரை ஆறுதல்படுத்துவது?
மரணம் மலிந்த வீடுகளில்,போக்கிடமின்றி மக்கள் அலைந்து திரியும் வீதிகளில்தான் நம் மனமும் அலைகிறது.
போர் வேண்டாம். பேரழிவு வேண்டாம்.
அந்த மக்களுக்கு நீதிதான் வேண்டும்; இழந்த தாயகத்தில் சுயகௌரவத்துடன் கூடிய நிம்மதியான வாழ்க்கைதான் அவர்களுக்கு வேண்டும். அவர்களது சொந்த மண் அவர்களுக்கு திரும்பக் கிடைக்க வேண்டும்.
எது அந்த சிவப்புக் கோடு?
சகிப்புத் தன்மையின் அந்த எல்லைக் கோடுதான் என்ன?

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.