வைத்தியசாலைகளையும் விட்டுவைக்காத இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்

0 234

எம்.ஐ.அப்துல் நஸார்

நோயா­ளி­க­ளாலும் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளாலும் நிறைந்­தி­ருந்த காஸா நகர வைத்­தி­ய­சாலை மீது கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இஸ்ரேல் நடத்­திய வான் வழித் தாக்­கு­தலில் சுமார் 500 பாலஸ்­தீன மக்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் முழு உல­கை­யுமே உலுக்­கி­யுள்­ளது.

கடந்த ஒக்­டோபர் 07 ஆம் திகதி தெற்கு இஸ்­ரே­லிய பகு­திக்குள் ஊடு­ருவி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில், மக்கள் செறிந்து வாழும் பகு­திகள் மீது இஸ்ரேல் தொடர் குண்­டு­வீச்சு தாக்­கு­தலை ஆரம்­பித்­த­தி­லி­ருந்து காஸாவில் இடம்­பெற்ற மிகக் கொடூ­ர­மான தாக்­குதல் இது­வாகும்.

காஸா பள்­ளத்­தாக்குப் பகு­தியை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்கும் ஹமா­ஸு­ட­னான போரில் இஸ்­ரே­லுக்கு தனது ஆத­ரவைத் தெரி­விப்­ப­தற்­காக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் இஸ்­ரே­லுக்கு விஜயம் செய்­ய­வி­ருந்த நிலையில் இத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.

அரபு நாடு­க­ளான ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உட­ன­டி­யாக இத் தாக்­கு­தலைக் கண்­டித்­துள்­ளன. இந்தத் தாக்­கு­தலை கொடூ­ர­மான மனிதப் படு­கொலை என பலஸ்­தீனப் பிர­தமர் வரு­ணித்­துள்­ள­தோடு இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வ­ளிக்கும் நாடு­களும் இதற்கு பொறுப்­புக்­கூற வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ளார்.

அல்-­அஹ்லி அல்-­அ­ரபி வைத்­தி­ய­சா­லையின் மீதே வான்­வழித் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது எனவும், இத் தாக்­கு­தலில் சுமார் 500 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் காஸாவின் சுகா­தார அமைச்சு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இஸ்­ரேலின் தாக்­குதல் கார­ண­மாக தமது வீடு­களை விட்டு இடம்­பெ­யர்ந்து வந்­தி­ருந்த மக்­களே இத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களுள் பெரும்­பான்­மை­யி­ன­ராவர். இது தவிர நோயா­ளிகள், பெண்கள் மற்றும் சிறு­வர்­களும் உயி­ரி­ழந்­துள்­ளனர் என ஹமாஸ் தெரி­வித்­துள்­ளது.

‘ஆங்­காங்கே ஏரா­ள­மான சித­றிய மற்றும் துண்­டிக்­கப்­பட்ட உடல்கள், இரத்த வெள்­ளத்தில் காணப்­பட்­டன’ என்று ஹமாஸின் சிரேஷ்ட உறுப்­பினர் இஸ்ஸத் எல்-­ரேஷிக் தெரி­வித்தார்.

அல் அஹ்லி வைத்­தி­ய­சா­லை­யா­னது அங்­கி­லிக்கன் கிறிஸ்­தவ தேவா­ல­யத்­தினால் நிதி­ய­ளிக்­கப்­பட்டு நடாத்­தப்­ப­டு­வ­தாகும். இவ் வைத்­தி­ய­சா­லைக்குள் கிறிஸ்­தவ தேவா­லயம் ஒன்றும் உள்­ளன. இத் தாக்­கு­தலில் தேவா­ல­யத்தில் தங்­கி­யி­ருந்து கிறிஸ்­த­வர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

அல்-­அஹ்லி அல்-­அ­ரபி வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் காய­ம­டைந்­த­வர்­களை ஏற்­றிய நோயாளர் காவு வண்­டிகள் மற்­று­மொரு காஸா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் காணொ­ளிகள் தமக்குக் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச சட்டங்களுக்கு அமை­வாக வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடாத்தப்படாது என அனை­வரும் நம்பியிருந்தனர். எம்மிடம் இருந்த மருந்துகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. இத் தாக்­கு­தலால் இருந்த மருந்து­களும் அழிந்துவிட்டன. சர்வதேச சமூகம் எமக்கு உடனடியாக மருந்­துகளை அனுப்ப வேண்டும். மின்சாரம் இல்லா­ததால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை­களை வழங்க முடியா­துள்­ளது. தண்­ணீரும் இல்லை.

இந்த தாக்­குதல் விவ­ரங்கள் எதுவும் தமக்குத் தெரி­யாது எனவும், ஆனால் அது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் இஸ்ரேல் இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் இஸ்­லாமிக் ஜிஹாத் அமைப்பு இஸ்­ரேலை நோக்கி வீசிய ஏவு­க­ணையே குறி­த­வறி காஸா வைத்­தி­ய­சா­லையில் வீழ்ந்­த­தாக தற்­போது இஸ்ரேல் கதை­களை பரப்பி வரு­கி­றது. எனினும் இதனை சர்­வ­தேச கண்­கா­ணிப்பு அமைப்­பு­களும் மறுத்­துள்­ள­துடன் இத்­தாக்­கு­த­லுக்கு இஸ்­ரேலே பொறுப்­பேற்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

இது­வரை இஸ்­ரே­லுக்கு இரா­ணுவ உத­வி­யுடன் ஐந்து C-17 ரக விமா­னங்­களை அனுப்­பி­யுள்ள பென்­டகன், ‘உதவி வழங்­கப்­ப­டு­வதில் எந்த முன்­நி­பந்­த­னை­களும் இல்லை’ என மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ‘இஸ்ரேல் போன்ற அனைத்து ஜன­நா­யக நாடு­களும் போர்ச் சட்­டத்தை மதித்து நடக்க வேண்டும் என நாம் எதிர்­பார்க்­கிறோம்.’ எனவும் தெரி­வித்­துள்­ளது.

இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கான தங்­கு­மி­ட­மாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் தமது பாட­சா­லை­யொன்றின் மீது இஸ்ரேல் மேற்­கொண்ட விமானத் தாக்­கு­தலில் குறைந்­தது ஆறு பேர் கொல்­லப்­பட்­ட­தாக ஐக்­கிய நாடு­களின் பலஸ்­தீ­னிய அக­திகள் நிறு­வனம் UNRWA கடந்த செவ்­வா­யன்று தெரி­வித்­தது. ‘இது மூர்க்­கத்­த­ன­மா­னது என்­ப­தோடு பொது­மக்­களின் உயிர்­களை துச்­ச­மாக மதிப்­ப­தையும் அப்­பட்­ட­மாகக் காட்­டு­கி­றது. காஸாவில் ஐக்­கிய நாடுகள் சபையின் இடங்கள் உட்­பட காஸாவில் எந்த இடமும் பாது­காப்­பா­ன­தல்ல’ எனவும் UNRWA சமூக ஊடகப் பதி­வொன்றில் தெரி­வித்­துள்­ளது.

ஒக்­டோபர் 7 ஆந் திக­தி­யன்று ஹமாஸ் போரா­ளிகள் இஸ்­ரே­லிய நக­ரங்கள் மற்றும் கிப்­புட்ஸெஸ் பகு­தி­களில் நுழைந்து 1,300 க்கும் அதி­க­மா­னோரைக் கொன்­ற­தி­லி­ருந்து, இஸ்­ரேலின் 11 நாள் குண்­டு­வீச்சுத் தாக்­கு­தலில் குறைந்­தது 3,000 பேர் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவில் உள்ள சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

பெரு­ம­ளவில் நக­ர­ம­ய­மாக்­கப்­பட்ட காஸாவின் சில பகு­தி­களை விமானத் தாக்­கு­தல்­களால் இஸ்ரேல் தரை­மட்­ட­மாக்­கி­யுள்­ளது, அதில் குடி­யி­ருந்த 2.3 மில்­லியன் மக்­களுள் அரை­வா­சிக்கும் மேற்­பட்­டோரை அவர்­க­ளது வீடு­களில் இருந்து விரட்­டி­ய­டித்­துள்­ள­தோடு உணவு, எரி­பொருள் மற்றும் மருத்­துவப் பொருட்கள் அங்கு செல்­வ­தையும் தடுத்­துள்­ளது.

உயி­ரி­ழப்­புக்கள் மற்றும் சொத்­த­ழி­வு­க­ளுக்கு மத்­தியில், தரை வழி படை­யெ­டுப்­பினை மேற்­கொள்ளும் எதிர்­பார்ப்பில் காஸாவின் எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய படைகள் மற்றும் டாங்கிகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.

காஸா­விற்­கான அத்­தி­ய­வ­சிய பொருட்­களை ஏற்றிச் செல்லும் ஏரா­ள­மான லொறிகள் செவ்­வா­யன்று எகிப்தில் உள்ள ரபா எல்லைக் கட­வையை நோக்கிச் சென்­றன, இது இஸ்­ரே­லிய கட்­டுப்­பாட்­டிற்கு வெளியே காணப்­படும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு பகு­திக்­கான ஒரே­யொரு வழி­யாகும். எனினும், அத­னூ­டாக நுழைய முடியும் என்­ப­தற்­கான தெளி­வான அறி­குறி எதுவும் தற்போது தென்படவில்லை.

வைத்தியரின் வாக்குமூலம்
காஸாவில் பணி­யாற்றும் டாக்டர் ஸியாத் ஷெஹாதாஜ் அல் ஜெஸீ­ரா­வுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் இச் சம்­பத்தை பின்­வ­ரு­மாறு விப­ரித்தார்:

‘‘இஸ்­ரேலின் தொடர் தாக்­கு­தல்கள் மற்றும் எச்­ச­ரிக்­கைகள் கார­ண­மாக தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றிய மக்கள் பாது­காப்பு கரு­தியே வைத்­தி­ய­சாலை வளா­கத்தில் தங்­கி­யி­ருந்­தனர். சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு அமை­வாக வைத்­தி­ய­சா­லைகள் மீது தாக்­குதல் நடாத்­தப்­ப­டாது என அனை­வரும் நம்­பி­யி­ருந்­தனர். எம்­மிடம் இருந்த மருந்­துகள் அனைத்தும் தீர்ந்­து­விட்­டன. இத் தாக்­கு­தலால் இருந்த மருந்­து­களும் அழிந்­து­விட்­டன. சர்­வ­தேச சமூகம் எமக்கு உட­ன­டி­யாக மருந்­து­களை அனுப்ப வேண்டும். மின்­சாரம் இல்­லா­ததால் காய­முற்­ற­வர்­க­ளுக்கு சிகிச்­சை­களை வழங்க முடி­யா­துள்­ளது. தண்­ணீரும் இல்லை. நாம் இப்­போது ஒவ்­வொரு நிமி­டமும் மர­ணித்துக் கொண்­டி­ருக்­கிறோம். காஸா மீது தாக்­குதல் நடத்தப் போவ­தா­கவும் தெற்குப் பகு­திக்குச் செல்­லு­மாறும் இஸ்ரேல் அறி­வித்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இலட்­சக்­க­ணக்­கான மக்கள் காஸாவின் தெற்குப் பகுதி மற்றும் ரபா, கான் யூனிஸ் பகு­தி­களை நோக்கி இடம்­பெ­யர்ந்­தனர். எனினும் இப் பகு­திகள் மீதும் தாக்­குதல் நடத்­தினர். எனவே காஸாவின் எந்தப் பகு­தியும் இப்­போது பாது­காப்­பில்லை. தெற்குப் பகுதியில் அமையப் பெற்றிருந்த குவைத் வைத்தியசாலையையும் குண்டுவீசித் தகர்த்துவிட்டார்கள்’’ என்றார்.

மொத்த உயிரிழப்புகள்
காஸா மீது கடந்த 12 நாட்­க­ளாக இஸ்ரேல் நடாத்­திய வான் தாக்­கு­தல்­களில் நேற்று மாலை வரை 3478 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இவர்­களுள் 1000 இற்கு மேற்­பட்ட சிறு­வர்­களும் 1032 பெண்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அதே­போன்று சுமார் 12500 பலஸ்­தீ­னி­யர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.

காஸா­வுக்கு வெளியே மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூ­சலம் ஆகிய பகு­திகள் மீதும் இஸ்ரேல் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. இதில் 18 சிறு­வர்கள் மற்றும் ஒரு பெண் உள்­ள­டங்­க­லாக 62 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 1300 பேர் வரை காய­ம­டைந்­துள்­ளனர்.

இத­னி­டையே இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7 ஆம் திகதி நடாத்­திய தாக்­கு­தல்­களில் சுமார் 1400 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 947 பொது மக்­களும் 299 இரா­ணு­வத்­தி­னரும் 54 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் அடங்­குவர். மேலும் 4121 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

லெபனான் மீது இஸ்ரேல் நடாத்­திய வான் தாக்­கு­தலில் அங்கும் 17 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்களில் 3 பொது மக்களும் 9 லெபனான் போராளிகளும் 5 பலஸ்தீன் போராளிகளும் அடங்குவர்.

உலக நாடுகள் கண்டனம்
இத் தாக்­கு­தலை உலகின் பல நாடுகள் கண்­டித்­துள்­ளன. இத் தாக்­கு­தலை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக சவூதி அரே­பியா தெரி­வித்­துள்­ளது. இதனை ஒரு போர் குற்றம் என ஆபி­ரிக்க ஒன்­றியம் வர்­ணித்­துள்­ளது. நியா­யப்­ப­டுத்த முடி­யாத அகோரம் என பிரேசில் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோவும் காஸா வைத்­தி­ய­சாலை மீதான தாக்­குதல் சர்­வ­தேச சட்­டங்­களை மீறு­வ­தாக உள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். இத் தாக்­குதல் பலத்த அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக குறிப்­பிட்ட சீனாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் உட­ன­டி­யாக அங்கு போர் நிறுத்தம் வர வேண்டும் என்றும் கோரி­யுள்ளார். எல்­லை­க­ளற்ற வைத்­தி­யர்கள் அமைப்பு இச் சம்­ப­வத்தை கண்­டித்­துள்­ள­துடன் இது ஒரு இனப்­ப­டு­கொலை என்றும் வர்­ணித்­துள்­ளது. இது வேண்­டு­மென்றே நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் என எகிப்து ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ளார்.

உணவின்றித் தவிக்கும் மக்கள்
காஸாவில் உணவுப் பொருட்கள் வேக­மாக தீர்ந்து வரு­வ­தாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் எச்­ச­ரித்­துள்­ளது. காசா நகரை விட்டு பொது­மக்கள் வெளி­யேற வேண்டும் என இஸ்ரேல் விடுத்த கெடுவால் 10 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் அந்த நகரை காலி செய்­துள்­ளனர். அவர்­களில் 60 சத­வீதம் பேர், காஸாவில் இருந்து தெற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகு­தியில் இருப்­ப­தாக ஐ.நா தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்­பாளர் அபீர் எடேஃபா, “இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­பாக போது­மான அளவு உணவு கையி­ருப்பு இருந்­தது. ஆனால், தற்­போது உணவுப் பொருட்­க­ளுக்­கான பற்­றாக்­குறை அதி­க­ரித்­துள்­ளது. காஸா நகரை விட்டு மக்கள் வெளி­யேற வேண்டும் என்ற இஸ்­ரேலின் கெடு கார­ண­மா­கவே தற்­போது மிக வேக­மாக உணவுப் பொருட்­க­ளுக்­கான தட்­டுப்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. உணவுப் பொருட்­களை தயா­ரிக்கும் 5 தொழிற்­சா­லை­களில் ஒன்று மட்­டுமே தற்­போது இயங்­கு­கி­றது. பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­கா­கவும், எரி­பொருள் மற்றும் மின்­சார பற்­றாக்­குறை கார­ண­மா­கவும் மற்ற இயந்­தி­ரங்கள் இயக்­கப்­ப­ட­வில்லை. நெருக்­க­டி­யான இந்த தரு­ணத்தில் விற்­ப­னை­ய­கங்­க­ளுக்கு போது­மான உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்­வதே ஐ.நா உலக உணவுத் திட்­டத்தின் முன் உள்ள சவா­லாகும். இயங்­கக்­கூ­டிய சில பேக்கரிகளின் முன் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் அமெரிக்க ஜனாதிபதி
இஸ்ரேல் – ஹமாஸ் போரை அடுத்து, இஸ்­ரே­லுக்கு ஆத­ரவு தெரி­விக்க அமெ­ரிக்க அதிபர் ஜோ பைடன் அந்­நாட்டின் தலை­நகர் டெல் அவி­வுக்கு நேற்று வந்­துள்ளார். அவ­ருக்கு விமான நிலையம் சென்று இஸ்ரேல் அதிபர் பெஞ்­சமின் நெதன்­யாகு வர­வேற்­ப­ளித்தார். இதன்பின் இரு­வரும் பேச்­சு­வார்த்தை நடத்­திய பின்னர் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­தனர். அப்­போது பேசிய ஜோ பைடன், “காசா மருத்­து­வ­மனை மீதான தாக்­கு­தலால் நான் மிகுந்த வேத­னையும், அதே­நேரம் கோபமும் அடைந்­துள்ளேன். நான் பார்த்­த­வ­ரையில் மருத்­து­வ­மனை தாக்­கு­தலை இஸ்ரேல் செய்­ய­வில்லை. மாறாக, வேறொரு குழு இதை செய்­தி­ருக்­கலாம் எனத் தோன்­று­கி­றது’’ எனத் தெரி­வித்­துள்ளார். எனினும் பைடனின் கருத்தை பலஸ்­தீனின் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய அமைப்புகள் மறுத்துள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.