எதிர்க்­கட்சித் தலைவர் குறித்த அறி­விப்பு இன்று

0 747

சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் எதிர்க்­கட்சித் தலைவர் குறித்த இறுதி தீர்மானத்தை சபா­நா­யகர் இன்று அறி­விப்­பா­ரெனத் தெரிவிக்கப்படுகின்­றது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  புதிய எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷ நிய­மிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஆளும் எதிர்க்­கட்­சி­க­ளி­டையில் பாரிய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­கி­ய­வர்கள் பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் இல்­லாத அர­சியல் கட்­சியில் அங்­கத்­து­வத்தை பெற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு வரு­கை­தர முடி­யாது, ஆகவே, அவர்­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை பறிக்­கப்­பட  வேண்­டு­மென ஐக்­கிய தேசியக் கட்சி சபையில் தெரி­வித்­த­துடன், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினர் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி குறித்து ஆராய பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்றை நிய­மிக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையை சபா­நா­ய­க­ருக்கு முன்­வைத்­துள்­ளனர்.

இந்த விவ­காரம்  குறித்தும் இன்­றைய தினம் வெள்­ளிக்­கி­ழமை தீர்­வொன்றை வழங்­கு­வ­தாக சபா­நா­யகர் சபையில் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார். அதற்கமைய இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த சர்ச்சைக்கும் தீர்வொன்று வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.