புல்மோட்டை அரிசிமலையில் அதிகரிக்கும் பிக்குவின் அடாவடித்தனம்

0 533

எஸ்.என்.எம்.சுஹைல்

ஜும்ஆத் தொழு­கைக்கு மக்கள் பள்­ளி­வா­ச­லுக்கு சென்­றி­ருந்த தரு­ணம் ­பார்த்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை மதியம் புல்­மோட்டை சாத்­த­ன­மடு, வீரே­டிப்­பிட்டி பகு­தி­க­ளி­லுள்ள வயல் காணி­களை அப­க­ரிக்கும் முயற்சிகளை பௌத்த பிக்­குகள் தலைமையிலான குழு­வினர் முன்னெடுத்துள்ளனர்.

பெக்கோ இயந்­தி­ரங்­க­ளுடன் வயல்­நி­லத்­திற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபடும் வீடியோ காட்­சிகள் கடந்த வாரம் சமூக வலைத்­த­ளங்­களில் வைர­லா­கி­யி­ருந்­தன.

புல்­மோட்டை அரி­சி­மலை விகா­ரையின் விகா­ரா­தி­பதி பனா­முரே திலகவன்ச தேரர் மற்றும் அவ­ருடன் இன்னும் 8 பேர் கடந்த வாரம் தோண்­டா­மு­றிப்பு பகு­திக்குச் சென்று மக்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­துள்­ள­தா­கவும் இது தொடர்பில் பொலிஸ் முறைப்­பாட்­டை­ய­டுத்து அவர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­ய­தா­கவும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் ஜம்­இய்­யதுல் உலமா செய­லாளர் எஸ்.எச். சாலிஹீன் மௌலவி கூறினார்.

இத­னி­டையே, மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை ஆண்கள் ஜும்ஆத் தொழு­கைக்குச் சென்­றதன் பின்னர் சாத்­த­ன­மடு மற்றும் வீரே­டிப்­பிட்டி பகு­திக்குள் பனா­முர தேர­ருடன் ஒரு குழு இரண்டு பெக்கோ இயந்­தி­ரங்­க­ளுடன் நுழைந்து மக்­களை அங்­கி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

‘2 மணி இருக்கும் நாம் வீட்டில் உணவு உட்­கொள்ளத் தயா­ராகிக் கொண்­டி­ருந்தோம். எமது வய­லுக்குள் பிக்கு உள்­ளிட்டோர் அத்­து­மீ­றியுள்ளதாக கேள்­விப்­பட்டோம். பதற்­ற­ம­டைந்து சாப்­பி­டாது வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டோம்’ என கூறினார் சுலைஹா மவ்சூக்.
வீட்­டி­லி­ருந்து சுலைஹா பர­ப­ரப்­புடன் புறப்­பட்­ட­துபோல், அந்த பிர­தே­சத்தில் விவ­சாயக் காணிகள் வைத்­துள்­ள­வர்கள் வேக­மாக சம்­பவ இடத்­துக்கு புறப்­பட்­டனர். நூற்­றுக்­க­ணக்­கானோர் சாத்­த­ன­மடு, வீரே­டிப்­பிட்டி வயல்­கா­ணி­க­ளுக்குள் சென்று அத்­து­மீறி காணி­பி­டிக்கும் பிக்­கு­களை எதிர்த்து நின்­றனர். சிங்­களம் தெரி­யா­த­போ­திலும் தமது உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­திய அவர்கள் ‘இது எமது பூர்­வீகம், எங்­களை வெளி­யேற்ற வேண்டாம்’ என கூச்­ச­லிட்­டனர்.

இந்­நி­லையில், இவற்­றுக்கு செவி­சாய்க்­காது பிக்கு தலை­மை­யி­லான குழு தொடந்தும் அடாத்­தாக பெக்கோ இயந்­திரம் மூலம் அங்கு தரை­மட்­ட­மாக்கிக் கொண்­டி­ருந்­தனர். இந்­நி­லையில், பெக்கோ இயந்­தி­ரத்­துக்கு முன்­பாக சென்ற சுலைஹா ‘என்னை கொன்­று­விட்டு, இந்த காணி­களை பிடித்­துக்­கொள்­ளுங்கள்’ என சத்­த­மிட்டார். எனினும், இதனை கருத்­திற்­கொள்­ளாத அவர்கள் அந்தப் பெண் மீது பெக்கோ இயந்­தி­ரத்தை நகர்த்த அவர் அடி­பட்டு கீழே விழுந்தார். இதன்­போது, அச்­சத்­துடன் அந்தப் பெண்ணை மக்கள் மீட்க முற்­பட்­டனர்.
காயப்­பட்ட பெண், புல்­மோட்டை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்ட பின்னர் அங்­கி­ருந்து மேல­திக சிகிச்­சைக்­காக திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­படார்.
அச்­சு­றுத்­த­லான அந்த நிலைமை குறித்து சிகிச்சை பெற்­று­வரும் சுலைஹா கூறு­கையில், ‘எனது தந்தை சம்­சுதீன் 1960 ஆம் ஆண்டு முதல் இந்த காணியில் விவ­சாயம் செய்­துள்ளார். யுத்தம் கார­ண­மாக சில­காலம் இந்த நிலம் தரி­சா­னது. என்­றாலும் 2010 ஆம் ஆண்டு நாம் மீண்டும் இங்கு விவ­சா­யத்தை ஆரம்­பித்தோம். எனக்கு இந்த காணியை எனது தந்தை தந்­தி­ருந்தார். அவ­ருக்கு அவரின் தந்தை அதா­வது எனது பாட்­டனார் இந்த காணியை வழங்­கி­யுள்ளார். நாங்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக இந்த இடத்தில் விவ­சாயம் செய்­கின்றோம். நாங்கள் ஏழை மக்கள். எமது பூர்­வீ­கத்தை விட்டு வெளி­யேறச் சொல்­வது அநி­யா­யமாகும். இவர்கள் எமது நிம்­ம­தியை கெடுக்­கின்­றனர் ’ என்றார்.

இந்­நி­லையில், 1811 ஆம் ஆண்டு முதல் இந்த நிலத்தில் விவ­சாயம் செய்­த­மைக்­கான வர­லாறு இருப்­ப­தாக கூறினார் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் ஜம்­இய்­யதுல் உலமா செய­லாளர் எஸ்.எச். சாலிஹீன் மௌலவி, அத்­துடன், ‘எமது பூர்­வீ­கத்தை பறிப்­ப­தற்கு இங்­கி­ருந்து 10 கிலே­ா மீற்றர் தொலை­வி­லுள்ள அரி­சி­மலை விகா­ரையின் பிக்குவும் குழு­வி­னரும் மேற்­கொள்ளும் திட்­டங்கள் மிகவும் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னவை. அத்­தோடு, இந்த விட­யத்தில் பொலிஸார் மேலும் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். மேலும் தாக்­கு­த­லுக்­குள்­ளான பெண்­ணுக்கு முறை­யான சிகிச்சை வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­ப­டா­மையால் அவர் தற்­போது ஆயுர்­வேத வைத்­திய சிகிச்சை பெறு­கின்றார். இங்கு எமக்கு பெரும் அநி­யாயம் செய்­யப்­ப­டு­கின்­றது. இது விட­யத்தில் அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

குச்­ச­வெளி பிர­தே­சத்­திற்கு உட்­பட்ட இலக்கம் 32, புல்­மோட்டை 01 வட்­டா­ரத்­துக்­கு­ரிய சாத்­த­ன­மடு, வீரே­டிப்­பிட்டி உட்­பட பல பகு­தி­க­ளிலும் குறிப்­பிட்ட பிக்­குவின் குழு­வி­னரால் தொடர்ந்து மக்­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்­கப்­ப­டு­கின்­றது. இவர்கள் பல்­வேறு நோக்­கங்­க­ளுடன் மக்­க­ளுக்கு நெருக்­க­டி­களை கொடுத்து அவர்­களின் அடிப்­படை உரி­மையை மீறும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர். இதற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கைக்குச் செல்ல ஆர்­வ­மாக கிராம மக்கள் இருக்­கின்­றனர். எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக அவர்­களின் பொரு­ளா­தார நிலைமை அதற்கு வாய்ப்­பாக அமை­ய­வில்லை.

சமூக மட்­டத்­தி­லி­ருந்து நியாயத்தை வென்­றெ­டுப்­ப­தற்­கான உரிமை போராட்ட த்திற்கான கோரிக் கையை முன்வை க்கின்றனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.