ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்கள் வேண்டாம்

0 897

அர­சாங்கம் தற்­போது வர்த்­த­மா­னியில் வெளி­யிட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூ­லத்­திற்கு கடும் எதிர்ப்­புகள் கிளம்­பி­யுள்­ளன. சட்­டத்­த­ர­ணி­களும் மனித உரிமை அமைப்­பு­களும் அர­சியல் கட்­சி­களும் இச் சட்­ட­மூலம் தற்­போது அமு­லி­லி­ருக்கும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை விடவும் கொடி­யது என இதனை வர்­ணித்­துள்­ளனர்.
உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தை வாபஸ் பெறு­மாறும், பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான எந்­த­வொரு சட்­டத்­தையும் வெளிப்­ப­டைத்­தன்மை, பொறுப்­புக்­கூறும் தன்மை மற்றும் சகல தரப்­பி­ன­ரு­ட­னான விரி­வான கலந்­து­ரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கு­மாறும் மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அர­சாங்­கத்­தினால் கடந்த மார்ச் 22 ஆம் திகதி வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யி­டப்­பட்ட உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தின் உள்­ள­டக்கம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில், அதில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்கள் பற்­றிய பரிந்­து­ரை­களைத் தமக்கு அனுப்­பி­வைக்­கு­மாறு கடந்த மே மாதம் 2 ஆம் திகதி நீதி­ய­மைச்சு அறி­வித்­தது. இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்ட வரைபில் அவ­சி­ய­மான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்­ன­ரான சட்­ட­மூலம் கடந்த 15 ஆம் திகதி வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டது. அது­கு­றித்த தமது நிலைப்­பாட்டைத் தெளி­வு­ப­டுத்தி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது.

ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்ட உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்­துடன் ஒப்­பி­டு­கையில் தற்­போது வெளி­யி­டப்­பட்­டள்ள சட்­ட­மூ­லத்தில் சில முக்­கிய திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தான சுட்­டிக்­காட்­டி­யுள்ள அந் நிலையம், மர­ண­தண்­டனை வழங்­கலை நீக்கல், முத­லிரு மாதங்­க­ளுக்குத் தடுப்­புக்­காவல் உத்­த­ரவைப் பிறப்­பிக்கும் அதி­காரம் பாது­காப்பு செய­லா­ள­ருக்கு வழங்­கப்­படல் போன்ற திருத்­தங்கள் அதில் உள்­ள­டங்­கு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இருப்­பினும் ‘பயங்­க­ர­வாதம்’ எனும் பதத்தின் கீழான குற்­றங்­க­ளுக்கு விரி­வான வரை­யறை வழங்­கப்­படல், நீதித்­துறை மற்றும் அடிப்­படை உரி­மை­கள்­மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வ­கையில் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­துக்கு (ஜனா­தி­ப­திக்கு) மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்கள் வழங்­கப்­படல் மற்றும் இரா­ணு­வ­ம­ய­மாக்கல் என்­பன உள்­ள­டங்­க­லாக கரி­ச­னைக்­கு­ரிய உள்­ள­டக்­கங்கள் இன்­னமும் நீக்­கப்­ப­ட­வில்லை என்றும் குறிப்­பாக ஊர­டங்கு உத்­த­ர­வுடன் தொடர்­பட்ட உள்­ள­டக்­கங்கள் தீவிர கரி­ச­னையை ஏற்­ப­டுத்­து­ப­வை­யா­கவும், அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­ன­வை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இந்த உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூலம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மேலும் விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான புதிய முயற்­சி­யாக அமைந்­தி­ருக்­கின்­றது. இது கடந்த ஆண்டு ‘அர­க­லய’ என அறி­யப்­படும் போராட்­டத்தின் ஊடாக முன்­வைக்­கப்­பட்ட ‘நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க­வேண்டும்’ என்ற கோரிக்­கைக்கு முற்­றிலும் முர­ணா­ன­தாகக் காணப்­ப­டு­வ­தா­கவும் அந்­நி­லையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான அர­சாங்­கத்தின் அவ­சர முயற்­சிகள் மற்றும் இவ்­வி­டயம் தொடர்பில் அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய விரி­வான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வ­தற்­கான போதிய கால அவ­காசம் இன்மை என்­பன குறித்த கரி­ச­னை­களை மீண்டும் பதிவு செய்­வ­தா­கவும் எனவே இந்த உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தை வாபஸ் பெறு­மாறும், பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான எந்­த­வொரு சட்­டத்­தையும் வெளிப்­ப­டைத்­தன்மை, பொறுப்­புக்­கூறும் தன்மை மற்றும் சகல தரப்­பி­ன­ரு­ட­னான விரி­வான கலந்­து­ரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கு­மாறும் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­து­கின்றோம் என்றும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலும் இதே கரி­ச­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இச் சட்டம் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விடவும் கொடூ­ர­மா­ன­தாக உள்­ள­தாக வர்­ணித்­துள்ள அவர், அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டங்­களை ஒடுக்­கவும் ஊட­கங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தை­யுமே இச் சட்டம் இலக்­காகக் கொண்­டுள்­ளது என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்­துடன் இவ்­வா­றான சட்­டங்கள் சர்­வ­தேச நாடு­க­ளு­ட­னான உற­விலும் விரி­சலை ஏற்­ப­டுத்தும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். அதே­போன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இந்த சட்­ட­மூ­லத்தை தாம் எதிர்ப்­ப­தாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு தரப்பினரும் இச் சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் இதே சட்டமூலம் முன்வைக்கப்பட்டபோது எழுந்த அதே எதிர்ப்பே தற்போதும் எழுவதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் அரசாங்கம் இந்த எதிர்ப்புகளின் பின்னால் உள்ள நியாயங்களை கவனத்திற் கொண்டு, அரசாங்கத்தை எதிர்ப்பவர்களையன்றி உண்மையாகவே தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில் இச் சட்டத்தை மீள வரைய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். எதிர்வரும் நாட்களில் இக் கொடிய சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.