முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை 2019 இல் இரத்து செய்தது ஏன்?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வினவப்பட்டதையடுத்து தகவல் வெளியானது ; இரத்தான பதிவின் இலக்கங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டு
எஸ்.என்.எம்.சுஹைல்
முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நலன்புரிச் சங்கமொன்றின் சொத்துக்கள் சம்பந்தமாக திருகோணமலை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்தே முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை இரத்துச் செய்வதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதன்படி, திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 435 இயக்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதிமுதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் முன்னதாக திணைக்களத்தால் வழங்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்த முடியாது என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியதற்கமைய திணைக்களத்தினால் அளிக்கப்பட்ட பதிலிலேயே இந்த தகவல்கள் வெளியாகின.
மேற் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் வழங்கிய பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதா
முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் என்பவற்றின் முதல் பதிவு 1987.02.16 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அத்தினத்திலிருந்தே பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலா
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது முஸ்லிம்களுக்குரிய தனியான திணைக்களம் என்பதனாலேயே முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் பதிவுகள் இடம்பெற்றன.
முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் என்பவற்றின் பதிவு செய்யும் நடவடிக்கைகள் 2019.09.23 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் 2019.09.23 திகதியன்று திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் எம்.ஆர்.எம். மாலிக்கினால் அமைப்புகளின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனுப்பப்பட்ட கடிதங்களில், “…… (அமைப்பின் பெயர்) பதிவு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் நலன்புரிச் சங்கமாக பதிவு செய்யப்பட்டு MRCA/.. /../ பதிவு இலக்
கத்துடன் ஒதுக்கப்பட்டிருந்தது. திணைக்களத்தின் முடிவின்படி 24.09.2019 முதல் இரத்து செய்யப்படுகிறது.
எனவே, 1962 ஆம் ஆண்டு சட்டம் எண் 21 மற்றும் 1982 ஆம் ஆண்டின் 33 ஆம் சட்டத்தால் திருத்தப்பட்ட 1956 ஆம் ஆண்டின் வக்ஃப்கள் சட்டம் எண். 51 இன் கீழ் அதே சங்கத்தை அறக்கட்டளையாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இதன் மூலம் நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்
எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நலன்புரி சங்கமொன்றின் சொத்துக்கள் சம்பந்தமாக திருகோணமலை மேன்முறையீட்டு நீதிமன்றம் EP/HCCA/TRN/FA/215/17 ஆம் இலக்க வழக்குடன் தொடர்புடைய 2018.09.27 ஆம் திகதியுடைய தீர்ப்பில் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்கள் மற்றும் தன்னார்வு நிறுவனங்கள் என்பவற்றின் பதிவுகள் சமூக சேவை நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்கள் பதிவு செய்யும் அமைப்புகள் சட்ட யாப்பில் அல்லது சமூக சேவைகள் திணைக்களத்தில் அல்லது கம்பனிச் சட்டத்தில் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டதால், இத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் என்பவற்றின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டன.
இதன்படி, திணைக்களத்தில் 435 முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இவ்வாறு மாவட்ட அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அட்டவணையில்..
பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்களது பதிவுகளும் இரத்துச் செய்யப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்படி நிறுவனங்களின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்ட பின்னரும் சில அமைப்புக்கள் தொடர்ச்சியாக தங்கள் திணைக்களத்தின் பதிவிலக்கத்தினை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுவதாக தெரியவருகிறது. அவ்வாறு பயன்படுத்த முடியுமா என கேட்கப்பட்ட வினவுக்கு, முடியாது என திணைக்களத்தினால் பதிலளிக்கப்பட்டது.
அத்துடன், மேற்படி நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்களின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எமது திணைக்களத்தின் பதிவு இலக்கத்தினை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நலன்புரி அமைப்புக்கள்/சங்கங்களும் அப்பதிவிலக்கத்தினை பயன்படுத்தியதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli