முஸ்லிம்களும் 13ஆம் திருத்தமும்

0 757

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இது “அர­சியல் மூலோ­பாய அல்­லது கொள்கை ரீதி­யான முடி­வாக” இருந்­தாலும், 13 வது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முன்­மு­யற்­சிகள் வெவ்­வேறு கார­ணங்­க­ளுக்­காக வெவ்­வேறு சமூ­கங்­க­ளி­டையே அச்­சங்­களை எழுப்­பி­யுள்­ளன. அவர்­களில் கிட்­டத்­தட்ட மூன்றில் ஒரு பகு­தி­யினர் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்­கின்­றனர். தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் ஒற்றை மெகா மாகாணம் அல்­லது 13 ஏ இன் ஏற்­பா­டு­க­ளின்­படி அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இரண்டு தனி மாகா­ணங்­களில் தங்கள் எதிர்­காலம் குறித்து கவ­லை­களை எழுப்­பு­கின்­றனர். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இந்த விடயம் குறித்து கலந்­து­ரை­யாட  ஜனா­தி­ப­தி­யுடன் பிரத்­தி­யேக பேச்­சு­வார்த்தை நடத்­து­மாறு கோரி­யி­ருந்­தனர். ஆனால் அவர்­களின் கோரிக்கை இது­வரை புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. ரணிலின் அலட்­சி­யத்­திற்கு இரண்டு கார­ணங்கள் இருக்­கலாம். முத­லா­வ­தாக, 13ஏ என்­பது இந்­தி­யாவால் ஈர்க்­கப்­பட்ட ஒரு சட்­ட­மாகும், அந்த நேரத்தில் ராஜீவ் காந்­தியின் முக்­கிய அக்­கறை தமிழ் சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்­து­வதும், அதன் இளை­ஞர்கள் தமிழர் பிரச்­சி­னையை ஆயு­த­மாக்­கு­வதைத் தடுப்­பதும் ஆகும், இது நிச்­ச­ய­மாக தோல்­வி­ய­டைந்­தது.

முஸ்­லிம்கள் மீது எந்த அனு­தா­பமும் இல்­லாத மோடியின் ஆட்­சியில் தமி­ழர்கள் மீதான அந்த தனி அக்­கறை இன்னும் வலு­வாக உள்­ளது. எனவே முஸ்லிம் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதன் மூலம் ரணில் தனது இந்­திய மூலோ­பாய நண்­பரை அதி­ருப்­தி­ய­டையச் செய்ய விரும்­ப­வில்லை. இரண்­டா­வ­தாக, இறு­தியில் தான் எடுக்கும் எந்த முடி­வுக்கும் முஸ்லிம் தலை­வர்­களின் ஆத­ரவைப் பெற முடியும் என்ற ரணிலின் நம்­பிக்கை மிகவும் நம்­பத்­த­குந்த கார­ண­மாக இருக்­கலாம். அரி­தான விதி­வி­லக்­கு­களைக் கொண்ட முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கொள்­கைகள் இல்லை, நலன்கள் மட்­டுமே உள்­ளன என்­பதை வர­லாறு மீண்டும் மீண்டும் நிரூ­பித்­துள்­ளது. விலை சரி­யாக இருக்­கு­மானால், 20 ஆவது திருத்தச் சட்­டத்தின் போது நிரூ­பிக்­கப்­பட்­டதைப் போல, எந்­த­வொரு பிரே­ர­ணையும் தமது சொந்த சமூ­கத்­திற்கு தீங்கு விளை­விப்­ப­தாக இருந்­தாலும் அதை ஆத­ரிப்­ப­தற்­காக அவர்கள் கைகளை உயர்த்­து­வார்கள். முஸ்லிம் வாக்­கா­ளர்­களே தெரிவு செய்த இத்­த­கைய தலை­மைத்­து­வத்­துடன், 13ஏ சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்ற தமி­ழர்­களின் கோரிக்­கையை எதிர்­கொள்­வது சமூ­கத்­திற்கு கடி­ன­மாக இருக்கும்.

ஆனால் முஸ்­லிம்கள் 13 ஆம் திருத்­தத்தை ஆத­ரித்­தாலும் அல்­லது எதிர்த்­தாலும் சமூகம் இரண்டு தீமை­க­ளுக்கு இடையில் சிக்­கி­யுள்­ளது. முஸ்லிம் விவ­கா­ரங்­களில் ஓர­ளவு மட்­டுமே அக்­கறை கொண்ட சர்­வ­தேச ஆத­ரவு, ஆக்­ரோ­ஷ­மான தமிழ் தேசி­ய­வாதம் மற்றும் இன்னும் கடு­ம்போக்கு பிக்குகள் தலை­மை­யி­லான சிங்­கள எதிர்ப்புக் குழு. முஸ்­லிம்கள் உட்­பட அனைத்து தமிழ் பேசும் மக்­களின் பிர­தி­நி­தித்­துவக் குர­லாகத் தொடங்­கிய தமிழ்த் தேசியம், படிப்­ப­டி­யாக அவர்­களை விலக்கி முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் எழுச்­சிக்கு வழி­வ­குத்­தது. வலு­வான மொழிப் பிணைப்பு இருந்­த­போ­திலும் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உற­வுகள் மோச­ம­டைந்து வரு­வது தமிழ்ப்­பு­லி­களால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றையின் உச்­சத்தை அடைந்­தது.

1990 ஒக்­டோ­பரில் பிர­பா­கரன் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை மொத்­த­மாக வெளி­யேற்­றி­யதைத் தொடர்ந்தும் கிழக்கு மாகா­ணத்தின் சில பகு­தி­களில் முஸ்­லிம்கள் மீது விடு­தலைப் புலி­களின் படு­கொ­லைகள் இடம்­பெற்­றதைத் தொடர்ந்தும், பிட்டு, தேங்காய் போன்ற பழ­மொ­ழி­க­ளுடன் வாழ்ந்து வரும் இரு சமூ­கங்­களும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் தொடர்­பு­களை குறைத்துக் கொண்­டன.

இரு தரப்­பிலும் தலைமை படு­தோல்வி அடைந்­ததால் இந்த நிலை ஏற்­பட்­டது. சுருக்கம் அந்த தோல்­வியின் வர­லாற்றைக் கண்­டு­பி­டிப்­பதைத் தடுக்­கி­றது. ஆனால் இப்­போதும் கூட இரு தரப்பு தலை­வர்­களும் சேதத்தை சரி­செய்­வதில் மிகவும் சாதா­ர­ண­மா­கவும் அலட்­சி­ய­மா­கவும் இருக்­கி­றார்கள். குறிப்­பாக முஸ்­லிம்கள் 13 ஏ இனை ஒரு துடிப்­பான சமூ­க­மாக தாங்கள் உயிர்­வாழ்­வ­தற்­கான மரண அச்­சு­றுத்­த­லாகப் பார்க்­கி­றார்கள். இந்த அச்­சத்தின் மையத்தில் நிலப்­பி­ரச்­சினை உள்­ளது. எடுத்­துக்­காட்­டாக, மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் 30 வீத­மா­ன­வர்­க­ளாக உள்ள நிலையில், சுமார் 20 சதுர கிலோ மீற்றர் நிலப்­ப­ரப்­பிற்குள் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இது அந்த மாவட்­டத்தின் மொத்த பரப்­ப­ளவில் ஒரு சத­வீ­தத்­திற்கும் குறை­வாகும். காணி மற்றும் பொலிஸ் நிர்­வாகம் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் மாகாண சபை­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­வதால், முஸ்­லிம்கள் நெரிசல் மிகுந்த பிர­தே­சங்­களில் வாழ நிர்­பந்­திக்­கப்­ப­டு­வார்கள் என்று அஞ்­சு­கின்­றனர். 4.3 சதுர கிலோ மீற்றர் பரப்பு 50,000 மக்­களும் கொண்ட காத்­தான்­குடி ஏற்­க­னவே நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட நகரப் பரப்­பாக உரு­மாறி வரு­கின்­றது.

ஆனால், 13ஏ சட்­டத்தை எதிர்ப்­பதன் மூலம் முஸ்­லிம்கள் மீது தனி அன்பு இல்­லாத சிங்­கள எதிர்ப்­பா­ளர்­களின் கரங்­களை சமூகம் கவ­னக்­கு­றை­வாக பலப்­ப­டுத்­து­கி­றது. அர­சியல் சந்­தர்ப்­ப­வாதம் சிங்­க­ள-­பௌத்த மேலா­திக்­க­வா­தி­களை தற்­கா­லி­க­மாக முஸ்­லிம்­க­ளுடன் கூட்டுச் சேர ஊக்­கு­வித்து வடக்கு மற்றும் கிழக்கின் மக்­கள்­தொகை நிலப்­ப­ரப்பை மாற்றும் மேலா­திக்க நிகழ்ச்சி நிரலை ஊக்­கு­விக்கும்.

ஆயு­த­ம­ய­மாக்­கப்­பட்ட தொல்­லியல், வன்­மு­றை­யான காணி சுவீ­க­ரிப்­புகள் மற்றும் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வங்­களைக் குறைப்­ப­தற்­காக எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுக்கள் மூலம் வாக்­காளர் மாவட்­டங்­களின் பகு­தி­களை வெட்டி மாற்­று­வ­தற்­கான சிடு­மூஞ்­சித்­த­ன­மான திட்­டங்­க­ளுடன், சிங்­கள பௌத்த மேலா­திக்க நிகழ்ச்சி நிரல் இரண்டு மாகா­ணங்­க­ளிலும் எந்­த­வி­த­மான தடை­யு­மின்றி நடந்து வரு­கி­றது.

வடக்கில் இந்த கொடூ­ர­மான செயற்­பா­டுகள் அப்­பட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் ஒரு மாவட்­ட­மாக முல்­லைத்­தீவு உள்­ளது. ஆனால் இந்த மேலா­திக்­க­வா­திகள் இப்­ப­கு­தி­களை தங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­த­வுடன் அவர்­களின் முஸ்லிம் கூட்­டா­ளிகள் கறி­வேப்­பி­லை­யாக மாறி­வி­டு­வார்கள்.  மேலா­திக்­க­வா­தி­க­ளுக்கு, தமி­ழர்கள் குறைந்­த­பட்சம் பூர்­வீ­க­வா­சிகள், ஆனால் அடி­மை­க­ளாக வைக்­கப்­பட வேண்டும், அதே நேரத்தில் முஸ்­லிம்கள் மத்­திய கிழக்­கிற்கு அனுப்­பப்­பட வேண்­டிய அந்­நி­யர்கள். கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக நிலவும் சமூ­க-­அ­ர­சியல் அமைப்பு அல்­லது முன்­னு­தா­ரணம் எவ்­வாறு செயல்­பட்­டுள்­ளது என்­பதை விமர்­சன ரீதி­யாக ஆராய்ந்தால் இந்த அச்­ச­மூட்டும் காட்­சியை நிரா­க­ரிக்க முடி­யாது.

எனவே, முஸ்­லிம்­க­ளுக்கும் பிற சிறு­பான்­மை­யி­ன­ருக்கும் என்ன வழி?

முறைமை மாற்றம் (System Change) என்­பது காலத்தின் கட்­டாயம் மற்றும் கதறும் தேவை (crying need). சிங்­கப்­பூரைப் போல அமை­தி­யான, துடிப்­பான, பொரு­ளா­தார ரீதி­யாக செழிப்­பான பல்­லின, பல கலாச்­சார அர­சி­ய­லாக இருக்க வேண்­டு­மானால், மதச்­சார்­பற்ற ஜன­நா­ய­கத்தின் விழு­மி­யங்­க­ளையும் கோட்­பா­டு­க­ளையும், நீதித்­து­றையின் சம­ர­ச­மற்ற சுயா­தீ­னத்­தையும் உள்­ள­டக்­கிய ஒரு புதிய அர­சி­ய­ல­மைப்பை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஒரு அமைப்பு நாட்­டிற்குத் தேவை. அப்­பு­ஹாமி க்குக் கிடைக்கும் உரி­மை­களும், சுதந்­தி­ரமும் அந்­தோணி, ஆறு­முகம், அப்­துல்லா ஆகி­யோ­ருக்குக் கிடைக்கக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். இத்­த­கைய மேடையில் இருந்­துதான் ஆர­க­லய   (Aragalaya) இளை­ஞர்கள் அமைப்பு மாற்­றத்­துக்­கான முழக்­கத்தை எழுப்பி, நிர்­வா­கத்தில் ஒரு புதிய முன்­னு­தா­ர­ணத்­திற்கு அழைப்பு விடுத்­தனர்.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அவர்­களின் அமைப்பில் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட மற்றும் முதிர்ச்­சி­யான தலை­மையின் பற்­றாக்­கு­றையும் அத­னுடன் தொடர்­பு­டைய கட்­ட­மைப்பு பல­வீ­னங்­களும் ஆர­க­லயா தனது கோரிக்­கையை கோஷ மேடைக்கு அப்பால் முன்­னெ­டுத்துச் செல்ல அனு­ம­திக்­க­வில்லை.  ஆனால், தற்­போது ஆட்­சியைக் கைப்­பற்றும் முனைப்பில் உள்ள அனைத்து அர­சியல் கட்­சி­க­ளிலும், குழுக்­க­ளிலும் தேசிய மக்கள் சக்தி மட்­டுமே இந்த முறையை மாற்றும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. எனவே, தற்­போ­துள்ள இன மைய அர­சியல் கலாச்­சா­ரத்தின் கீழ் தமக்கு எதிர்­காலம் இல்லை என்­ப­தையும், சிங்­கள, தமிழ் தேசி­ய­வா­தங்­களை முஸ்லிம் இன­வா­தத்­துடன் எதிர்­கொள்­வது தற்­கொ­லைக்கு சம­மா­னது என்­ப­தையும் முஸ்­லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.  முஸ்லிம் கட்­சிகள் என்று சொல்­லப்­ப­டு­ப­வர்கள் இது­வரை சாதித்­தது என்ன?

இந்த நாட்டில் பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட காலத்­தி­லி­ருந்தே, முஸ்லிம் அர­சியல் வெற்றி பெறும் அணியைத் தெரிவு செய்­வ­திலும் இணை­வ­திலும் ஒரு பயிற்­சி­யாக இருந்­தது. இரண்டு முஸ்லிம் கட்­சி­களும் ஒரே விளை­யாட்டை விளை­யா­டு­கின்­றன. இன மைய அர­சி­யலின் எல்­லைக்குள் முஸ்லிம் தலை­வர்கள் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டு­வதை விட கௌர­வத்­தையும் சலு­கை­க­ளையும் பெறு­வ­தற்­கான வெற்றி உத்­தி­யாக அர­சியல் சந்­தர்ப்­ப­வா­தத்தைத் தேர்ந்­தெ­டுத்­தனர். அந்த மூலோ­பா­யத்தை சிங்­களத் தலை­வர்கள் சகித்துக் கொண்­டனர், வர­வேற்­றனர், ஏனென்றால் அது தமிழ் தேசி­யத்தின் எந்­த­வொரு அச்­சு­றுத்­த­லையும் புறக்­க­ணிக்­கவும் தோற்­க­டிக்­கவும் அவர்­க­ளுக்கு உத­வி­யது. ஆனால், 2009 ஆம் ஆண்­டுக்குப் பிறகு அந்த நிலை மாறி­யது. உள்­நாட்டுப் போரில் வெற்­றி­பெற்று, வெற்­றி­க­ர­மான மன­நி­லையில், அர­சியல் பௌத்­தமும் அதன் ஆத­ர­வா­ளர்­களும் இப்­போது முழு நாட்­டிற்கும் மேலா­திக்­கத்­தையும் உரி­மை­யையும் கோரு­கின்­றனர். எனவே அதன் தலை­வர்கள் ரணிலின் 13A முன்­மு­யற்­சி­களை நிரா­க­ரிக்­கின்­றனர்.

அமைப்பை மாற்றி நாட்டை வேறு திசையில் வழிநடத்த விரும்பும் தே.ம.ச. போன்ற ஒரு மாற்றீட்டை பரிசீலிக்காமல் முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இந்த மேலாதிக்கவாதிகளுடன் சேர விரும்புகிறார்களா? 13ஏ மோசமானது, ஆனால் அரசியல் முன்னுதாரணத்தை மாற்றாமல் அதை நீக்குவது மோசமானது. நல்லிணக்கம் என்ற பெயரில் 13A ஐ அமுல்படுத்துவதற்கான ரணிலின் முன்முயற்சி தற்போதுள்ள அமைப்பை செம்மைப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

கடந்த காலங்களில் சோசலிசத் தலைவர்கள் இனவாத அரசியலுக்கு மாற்று வழிகளை முன்வைத்தபோது கூட முஸ்லிம்கள் அவற்றை மொத்தமாக நிராகரித்தனர். தே.ம.ச. இப்போது மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது. தெரியாததைப் பற்றிய பயம் எப்போதும் உண்டு என்பது உண்மைதான். ஆனால் எல்லாவற்றிலும் இடர்வரவு (Risk) இருக்கிறது. தே.ம.ச. சரியானதாக இருக்காமல் விடலாம் ஆனால் இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரே விவேகமான மாற்றாகத் தெரிகிறது. தே.ம.ச.வுக்கு எதிராக மற்ற அனைத்து பிற்போக்கு கட்சிகளும் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலே அதன் முற்போக்கான நற்சான்றிதழ்களுக்கு ஒரு மௌன சான்றாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.