பக்கச்சார்பற்ற விசாரணையே தேவை!

0 442

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்

முஸ்லிம் பெயர் தாங்­கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்­கொண்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் மற்றும் அதன் சூத்­தி­ர­தா­ரிகள் தொடர்­பாக செனல் 4 வெளி­யிட்­டுள்ள காணொளி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்த சூழலில் அது தொடர்­பான பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக மேற்­கொள்­ள­ப்பட வேண்டும் என பலரும் குர­லெ­ழுப்­பு­வதை அவ­தா­னிக்க முடிகிறது.நிச்­ச­ய­மாக அந்தக் கோரிக்கை நியா­ய­மா­னது. ஆனால் இதற்கு முன்பு இருந்த இரண்டு ஜனா­தி­ப­திகள் நிய­மித்த விசா­ரணைக் கமி­ஷன்­க­ளது விசா­ர­ணை­க­ளுக்கும் பரிந்­து­ரை­க­ளுக்கும் என்ன நடந்­தது என்ற கேள்வியும் எழுப்­பப்­ப­டு­கி­றது.

உரிய விசா­ரணை ஏன் தேவை?

தாக்­கு­தல்­களில் எமது சகோ­தர சமூ­க­மான கிறிஸ்­தவ சமூ­கத்தைச் சேர்ந்த 269 பேர் கொல்­லப்­பட்டு பலர் அங்­க­வீ­ன­முற்று மற்றும் பலர் மன­நிலை பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அந்த வகையில் அந்த சமூ­கத்­திற்கு கட்­டா­ய­மாக நீதி பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும்.

அடுத்­த­தாக இந்த தாக்­கு­தல்கள் இலங்கை முஸ்­லிம்­களின் வாழ்வில் மிகப்­பெ­ரிய அதிர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. தாக்­கு­தல்­களின் பின்னர் முஸ்­லிம்கள் மிக மோச­மான சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்­டார்கள். பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் அவற்றின் புனி­தத்­து­வத்­துக்கு பங்­க­மான முறையில் தேடுதல் நடாத்­தப்­பட்­ட­தாகக் கூட செய்­திகள் வெளி­வந்­தன. முஸ்­லிம்­க­ளது வீடுகள், ஸ்தாப­னங்கள் போன்­றன தேடுதல் வேட்­டைக்கு உள்­ளாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்கள் பயத்தின் கார­ண­மாக இஸ்­லா­மிய நூல்கள், சஞ்­சி­கைகள், பத்­தி­ரி­கைகள் போன்­ற­வற்றை எரித்­தார்கள். ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு சிறை­களில் தள்­ளப்­பட்­டார்கள்.

சிறையில் தள்­ளப்­பட்ட பலர் எவ்­வித குற்­றங்­களும் இல்லை என்று தற்­போது விடு­விக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். ஆனால், அவர்­க­ளதும் மற்றும் அவர்­க­ளது உற்றார் உற­வி­னர்கள், நேசத்­துக்­கு­ரி­ய­வர்கள் ஆகி­யோ­ரதும் உள்­ளங்­களில் ஏற்­பட்ட மனக் கவ­லை­க­ளையும் ஆழ­மான வடுக்­க­ளையும் வார்த்­தை­களில் வடிக்க முடி­யாது என்­பது ஒரு புறம் இருக்க, அவர்கள் தமது வழக்­கு­களில் இருந்து விடு­த­லை­யாகிக் கொள்­வ­தற்கும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கா­கவும் மற்றும் ஏற்­பா­டு­க­ளுக்­கா­கவும் கோடிக்­க­ணக்­கான ரூபாய்­களை செல­வு­செய்­தி­ருக்­கி­றார்கள். ஆனால், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்­லாத சட்­டத்­த­ர­ணி­களிற் சிலர் எவ்­வித கட்­ட­ணங்­க­ளையும் பெற்றுக் கொள்­ளாமல் இத்­த­கைய வழக்­கு­க­ளுக்­காக இல­வ­ச­மாக முன்­நின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. எது எப்­படிப் போனாலும் இதற்­காக ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளது கால நேரங்கள் செல­வ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதும் முக்­கி­ய­மான விடய­மாகும்.
அத்­துடன் இந்த நாட்டில் பல சமூகப் பணி­க­ளிலும் மற்றும் தேச நிர்­மாணப் பணி­க­ளிலும் ஈடு­பட்ட, தனி நபர்­களும் இயக்­கங்­களும் ஈஸ்டர் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முடக்­கப்­பட்­டன. சில தடை செய்­யப்­பட்­டன. சந்­தேகக் கண் கொண்டு மக்கள் அவற்றை பார்க்கும் அள­வுக்கு நிலை உரு­வா­கி­யது. இந்த அமைப்­புக்­க­ளது சில அணு­கு­மு­றைகள் நாட்­டிற்கும் காலத்­திற்கும் ஒவ்­வா­த­வை­யாக இருந்­தி­ருக்­கலாம். ஆனால் அவற்றை நிதா­ன­மாக அணுகி நெறிப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம்.

ஆனால், இந்த அமைப்­பு­க­ளது சமூக நலப்­ப­ணி­களால் பய­ன­டைந்த அனா­தைகள், வித­வைகள், அங்­க­வீனர்கள், கல்விச் சகாய நிதி­களைப் பெற்­ற­வர்கள் கண்­ணீரும் கம்­ப­லை­யு­மாக உத­வி­யின்றி இப்­போது வாடிக்­கொண்­டி­ருக்­கி­ருப்­ப­தாக பலரும் அங்­க­லாய்க்­கி­றார்கள்.

இது­வ­ரைக்கும் நாளாந்தம் பல­ருக்கு உளவுப் பிரி­வி­ன­ரிடம் இருந்து தொலை­பேசி அழைப்­புக்கள் வந்து கொண்­டி­ருப்­ப­தா­கவும் கேள்­விக்கு மேல் கேள்வி கேட்­பது, மணித்­தி­யாலக் கணக்கில் விசா­ரணை நடத்­து­வது, தடுத்து வைப்­பது, ஒரே கேள்­வி­களை பல தடவை கேட்­பது, ஒரே ஆவ­ணத்தை பல தடவை சமர்ப்­பிக்கக் கேட்­பது, வித்­தி­யா­ச­மான நபர்கள் வித்­தி­யா­ச­மான இடங்­களில் இருந்து விசா­ர­ணைக்­காக வரு­வது என்­றெல்லாம் விசா­ர­ணைகள் இன்று வரை தொடர்­வ­தா­கவும் பர­வ­லான கருத்துக்கள் முன்வைக் கப்படுகின்றன.

முஸ்லிம் சமூ­கத்­திற்கு தலைமை தாங்­கக்­கூ­டிய முன்­னோ­டி­க­ளது மன­நி­லையை பல­வீ­னப்­ப­டுத்தி அனாதைச் சமூ­க­மாக மாற்றும் நோக்­கி­லேயே இந்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றதா என சந்­தே­கிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.
தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து பலர் அவர்கள் முஸ்­லிம்கள் என்­ப­தற்­காக தொழில்­களில் இருந்து நீக்­கப்­பட்­ட­தா­கவும் இன்னும் பல­ருக்கு பதவி இறக்கம் செய்­யப்­பட்­ட­தா­கவும் பல தொழில் மையங்கள் முஸ்­லிம்­க­ளுக்­காக கத­வு­களை மூடிக்­கொண்­ட­தா­கவும் அக்­கா­லத்தில் பேசப்­பட்­டது.

இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளது நிகழ்ச்சி நிரல்கள் மாற்­றப்­பட வேண்டும் என்றும் அரச பாட­சா­லை­களில் கற்­பிக்­கப்­படும் இஸ்லாம், இஸ்­லா­மிய நாக­ரீக பாடங்கள், மற்றும் மத­ர­ஸாக்கள், அஹ­திய்­யாக்கள் என்­ப­வற்றின் பாடத்­திட்­டங்கள் என்­பன தீவி­ர­வா­தத்­தையும் பயங்­க­ர­வா­தத்­தையும் தூண்­டு­கின்­றன என்றும் எனவே அவை மாற்­றப்­பட வேண்டும் என்று அழுத்­த­மாகக் கூறப்­பட்டு அதற்­கான பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அவ்­வப்­போது செய்­திகள் வெளி­வந்­தன.

முஸ்­லிம்­களின் தனித்­து­வத்தை பாது­காப்­ப­தற்கும் இஸ்­லா­மிய ஞானங்­களை அதி­க­ரிப்­ப­தற்­கு­மான ஊற்றுக் கண்­களை மூடு­வ­தற்கும் அவர்கள் இஸ்­லாத்தை கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்­பு­களை முற்­று­மு­ழு­தாக இல்­லாமல் செய்­வ­தற்­கு­மான முயற்­சி­க­ளாக இவை இருக்­கலாம் என சந்­தே­கிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இந்த நாட்டில் குற்ற மனப்­பாங்­கோடு வாழும் நிலைக்கு ஒவ்­வொரு முஸ்­லிமும் தள்­ளப்­பட்­டி­ருப்­பது போல் தெரி­கி­றது.

பக்­க­சார்­பற்ற நீதி அவ­சியம்

இன்னும் ஒரு கருத்­தையும் மிக அழுத்­த­மாகக் கூற வேண்டும். அதா­வது, முஸ்லிம் சமூ­கத்­துக்குள் தீவி­ர­வாத கருத்­துக்­களை கொண்­ட­வர்கள் உரு­வா­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் இருப்பின் அவற்றைக் கண்­டு­பி­டிப்­பதும் அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதும் இந்த நாட்டின் பொறுப்பு வாய்ந்த நிறு­வனம் என்ற வகையில் அரசின் கட­மை­யாகும். அதில் மாற்றுக் கருத்­துக்கு இடம் கிடை­யாது. ஆனால் அதற்கும் ஒரு முறைமை இருக்­கி­றது.
முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சில விஷ­மிகள் ஒரு படு­பா­த­கத்தை செய்­து­விட்­டார்கள் என்­ப­தற்­காக முழு சமூ­கத்­தையும் சந்­தேகக் கண்­கொண்டு நோக்­கு­வதும் எல்­லோ­ரையும் பழி­வாங்­கு­வதும் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­து­வதும் முறை­யல்ல. அப்­ப­டி­யாயின் இலங்­கையின் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் இந்­நாட்டில் செய்­துள்ள குற்றச் செயல்­க­ளுக்­காக அவர்கள் சார்ந்­துள்ள மதங்­க­ளையும் இனங்­க­ளையும் குற்றம் கூற முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும்.

இவ்­வ­ழ­கிய எமது இலங்கைத் தேசத்தை குட்டிச் சுவ­ராக்கி சின்­னா­பின்­ன­மாக்­கு­வ­தற்கும், யுத்­தங்­க­ளுக்கும், இன மோதல்­க­ளுக்கும், வன்­மு­றை­க­ளுக்கும் பின்னால் பிராந்­திய அர­சியல் நலன்­களும் அர­சி­யல்­வா­தி­க­ளது குறு­கிய இலா­பங்­களும் பொரு­ளா­தார நலன்­களை தக்­க­வைத்துக் கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக வேண்டி அல்லும் பகலும் உழைக்கும் பண முத­லை­களும் இருப்­பதும் தெளி­வான உண்­மைகள் என்­பதை அனைத்து இனத்­த­வர்­களும் குறிப்­பாக அரசும் உணர்ந்து செயல்­பட வேண்டும்.

மேலும் இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் குறிப்­பாக முஸ்­லிம்­க­ளதும் பொது­வாக இந்த நாட்­டி­னதும் வர­லாற்றில் ஆழ­மான வடுக்­க­ளையும் பாதிப்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்தி இருப்­ப­தனால் அத்­தாக்­கு­தல்­களை திட்­ட­மிட்­ட­வர்கள், அதற்கு பக்­க­ப­ல­மாக அமைத்­த­வர்கள் தொடர்பில் எவ்­வித பக்கச் சார்­பு­மற்ற, இதய சுத்­தி­யுடன் கூடிய விசா­ர­ணை­யொன்று மேற்­கொள்­ளப்­பட வேண்டும். உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட்டு குற்­ற­வா­ளிகள் கடு­மை­யாக தண்­டிக்­கப்­பட வேண்டும். அவர்கள் எந்த இனத்தை சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பினும், முஸ்­லிம்­க­ளாக இருப்­பினும் சரியே.
ஏனெனில், உலகப் பொது மறை அல்­குர்­ஆனில் அல்லாஹ் நீதி பற்றி 19 இடங்­களில் கூறி­யுள்ளான். நீதி­யா­ளர்­களை தான் நேசிப்­ப­தா­கவும் நீதி செலுத்­து­வ­தற்கு இன­பந்­துத்­துவ உற­வுகள் கூட தடை­யாக இருக்கக் கூடாது என்றும் அவன் வலி­யு­றுத்­து­கிறான்.

“விசு­வாசம் கொண்­ட­வர்­களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்­தி­ருப்­ப­வர்­க­ளா­கவும் உங்­க­ளுக்கோ அல்­லது உங்கள் பெற்­றோ­ருக்கோ அல்­லது நெருங்­கிய உற­வி­ன­ருக்கோ விரோ­த­மாக இருப்­பினும் அல்­லாஹ்­வுக்­கா­கவே சாட்சி கூறு­ப­வர்­க­ளா­கவும் இருங்கள்; நீங்கள் யாருக்­காக சாட்­சியம் கூறு­கி­றீர்­களோ அவர்கள் செல்­வந்­தர்­க­ளாக இருந்­தாலும் ஏழை­க­ளாக இருந்­தாலும் உண்­மை­யான சாட்­சியம் கூறுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவ்­வி­ரு­வ­ரையும் காப்­ப­தற்கு அரு­க­தை­யு­டை­யவன்; எனவே நியாயம் வழங்­கு­வதில் மனோ இச்­சையைப் பின்­பற்றி விடா­தீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறி­னாலும் அல்­லது சாட்சி கூறு­வதைப் புறக்­க­ணித்­தாலும் நிச்­ச­ய­மாக அல்லாஹ் நீங்கள் செய்­வ­தை­யெல்லாம் நன்கு அறிந்­த­வ­னா­கவே இருக்­கின்றான்.”(4:135)

மாற்று இனத்தைச் சேர்ந்த ஒருவர் அநீ­திக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவ­ருக்கு நீதியை பெற்றுக் கொடுப்­ப­தற்கு முஸ்­லிம்கள் முயற்­சிக்க வேண்டும். அவர் முஸ்­லிம்­களின் விரோ­தி­யாக இருந்­தாலும் சரியே. பகைப்­பு­லத்தில் உள்­ள­வ­ரது பக்கம் நியாயம் இருப்­பினும் அத­னையே அல்­குர்­ஆனை ஏற்றுக் கொள்ளும்.

“விசு­வாசம் கொண்­ட­வர்­களே நியா­யத்தை நிலை நாட்­டு­வ­தற்­காக அல்­லாஹ்­வுக்கு நீங்கள் உறு­தி­யான சாட்­சி­யாக இருங்கள். எந்த ஒரு கூட்­டத்தார் மீதும் நீங்கள் கொண்­டுள்ள வெறுப்பு, நீதி செலுத்­தா­ம­லி­ருக்க உங்­களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்­துங்கள்; இதுவே இறை­ப­ய­பக்­திக்கு மிக நெருக்­க­மாகும்; அல்­லாஹ்­வுக்கு அஞ்­சுங்கள்; நிச்­ச­ய­மாக அல்லாஹ் நீங்கள் செய்­ப­வற்­றை­யெல்லாம் நன்கு அறிந்­த­வ­னாக இருக்­கின்றான்”(5:08)
தனது மகள் பாத்­திமா திரு­டி­னாலும் அவ­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நபி­ய­வர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

எனவே, நாட்டில் சட்­டத்தை, ஒழுங்கை, நீதியை நிலை­நாட்­டு­வது, அநீ­திக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்­பது, அநி­யா­யக்­கா­ரர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வது போன்ற ஏற்­பா­டு­க­ளுக்­காக முஸ்லிம் சமூகம் தனது பூரண ஆத­ர­வையும் அனு­ச­ர­ணை­யையும் அர­சுக்கு வழங்க தயா­ரா­கவே இருக்­கி­றது.

சூத்­தி­ரதா­ரி­களை தப்ப வைப்­ப­தற்கும் உண்­மை­களை மூடி­ம­றைப்­ப­தற்கும் கவ­னங்­களை திசை திருப்­பு­வ­தற்­கு­மான சூட்ச­க­மான திட்­ட­மி­டப்­பட்ட சில முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இஸ்லாம் நிரா­க­ரித்த பயங்­க­ர­வாதம்

படு­பா­த­கர்கள் மேற்­கொண்ட ஈஸ்டர் தாக்­கு­தல்கள் இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முற்­றிலும் முர­ணா­னவை. அது மட்­டு­மன்றி அவர்­களால் இலக்கு வைக்­கப்­பட்ட கிறிஸ்­தவ சமூ­கத்­த­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு இந்த நாட்டில் அட்­டூ­ழி­யங்­களைச் செய்­த­வர்கள் அல்லர். அமை­தி­யாக ஆல­யங்­களில் வழி­பா­டு­களில் ஈடு­பட்ட சிறு­வர்கள், பெண்கள், வயோ­தி­பர்கள் போன்ற அப்­பா­வி­களை கொலை செய்­வ­தற்கு எந்த நியா­யமும் இஸ்­லாத்தில் இல்லை. பிற மத ஆல­யங்­க­ளையும் மதத் தலை­வர்­க­ளையும் யுத்­தத்தில் சம்­பந்­தப்­ப­டாத சிவி­லி­யன்­க­ளையும் தாக்கக் கூடாது என்­பது இஸ்­லா­மிய யுத்த தர்­ம­மாகும் என்­றி­ருக்க இத்­தாக்­கு­தல்கள் எவ்­வ­கை­யிலும் நியா­யப்­ப­டுத்­தப்­பட முடி­யா­தவை. எனவே, அந்த பயங்­க­ர­வா­தி­க­ளது தாக்­குதல் மிலேச்­சத்­த­ன­மா­னவை என்­பதில் இஸ்­லா­மிய நோக்கில் கருத்து வேறு­பாடு கிடை­யாது.

இலங்கை முஸ்­லிம்கள் இந்த நாட்டில் ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்கள் வாழ்ந்து வரு­வது மாத்­தி­ர­மன்றி இந்த தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் அர­சியல், பொரு­ளா­தாரம், பாது­காப்பு போன்ற துறை­களில் ஏரா­ள­மான பங்­க­ளிப்­புக்­களை செய்­தி­ருக்­கி­றார்கள் என்­ப­தனை எவரும் மறுக்க முடி­யாது. இந்த நாட்டின் ஒரு­மைப்­பாடு, இனங்­க­ளுக்கு இடை­யி­லான ஐக்­கியம் என்­ப­வற்றை பாது­காப்­பதில் அவர்கள் காத்­தி­ர­மான பங்­க­ளிப்­பு­க­ளையும் செய்­தி­ருக்­கி­றார்கள்.இந்த தேசத்தின் ஒரு­மைப்­பாட்­டுக்கு அவர்கள் ஒரு பொழுதும் சவா­லாக அமை­ய­வில்லை. பிரி­வினை வாதங்­க­ளுக்கு ஒரு­போதும் துணை நிற்­க­வு­மில்லை.

ஆனால், அண்­மைக்­கா­லமாக அவர்­க­ளுக்­கெ­தி­ரான கெடு­பி­டிகள் அவர்­க­ளது வர­லாற்றுப் பங்­க­ளிப்பை முற்று முழு­தாக மறக்­க­டிக்கச் செய்­தி­ருப்­பது மட்­டு­மன்றி, அவர்­களை துரோ­கி­க­ளா­கவும் சித்­த­ரிக்­கின்­றன. ஒரு நாட்டின் மீது ஒர் இனத்தைச் சேர்ந்த குடி­ம­க­னுக்கு பாசமும் பற்றும் ஏற்­பட வேண்­டு­மாயின் அந்த நாட்டின் ஏனைய இனங்­களைச் சேர்ந்த பிர­ஜை­களும் அவனை நேசிக்க வேண்டும். அவ­னது கஷ்­டத்தில் துன்­பத்தில் பங்­கெ­டுக்க வேண்டும்.தேச கட்­ட­மைப்­பிலும் நிர்­மாணப் பணி­க­ளிலும் நீதி நியா­ய­மாக நடப்­பது, பரஸ்­பர ஒத்­து­ழைப்பு, மதிப்பு, நல்­லெண்ணம் என்­பன மிக முக்­கி­ய­மான பங்கை வகிக்­கின்­றன. சந்­தேகப் பார்வை, ஒதுக்கல், இன­வாதம் என்­பன சமூ­கங்­களின் உற­வு­க­ளுக்கு பெரும் நஞ்­சாகும்.

ஒரு தேசம் என்ற வகையில் தமிழ் சமூ­கங்­க­ளது உற­வுகள் விட­யத்­திலும் முஸ்­லிம்­க­ளு­ட­னான உற­வுகள் விட­யத்­திலும் பெரும்­பான்மைச் சமூகம் மிகப்­பெ­ரிய தவ­று­களைச் செய்­தி­ருக்­கி­றது என்­ப­தனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் விளை­வு­களை தற்­போது அணு­வ­ணு­வாக நமது தேசத்தின் ஒவ்­வொரு குடி­ம­கனும் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறான்.

பொரு­ளா­தார வீழ்ச்சி,மூளை சாலி­க­ளது வெளி­யேற்றம், தற்­கொ­லைகள், குற்றச் செயல்கள் அதி­க­ரிப்­பது என்­பன அவற்றின் வெளிப்­பா­டு­க­ளாகும்.

வேறு பல விசா­ர­ணை­களும் தேவை

ஈஸ்டர் தாக்­கு­தல்­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­த­வர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான விசா­ர­ணைகள் உரிய முறையில், பக்­க­சார்­பற்ற முறையில் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அது மட்­டு­மன்றி தர்கா நகர், திகனை, மினு­வாங்­கொடை, கிந்­தோட்டை ஆகிய இடங்­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்­களை பலரும் மறந்து விட்­டார்கள். அவற்றில் கோடிக்­க­ணக்­கான ரூபாய்கள் மதிப்­புள்ள முஸ்­லிம்­க­ளது சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. அவை முஸ்லிம்களது சொத்துக்கள் என்பதை விட நாட்டின் சொத்துக்களாகும். திகனை கலவரங்களில் மட்டும் 1500 கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக சிலர் கூறியதில் உண்மையிருக்கலாம்.

இவை அனைத்தும் இந்த நாட்டின் பிரிக்க முடி­யாத ஓர் அங்­க­மான முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட நஷ்­டங்கள் என்று பார்ப்­பதை விடவும் இந்த நாட்­டுக்கு ஏற்­பட்ட நஷ்­டங்கள் என்று பார்ப்­பதே பொருத்­த­மாகும்.
ஆனால், அவற்றைச் செய்­த­வர்­க­ளு­டைய பின்­ன­ணிகள் தொடர்­பா­கவோ அந்தக் குற்­ற­வா­ளிகள் உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்த பாடத்­திட்­டங்கள், இயக்­கங்கள், பின்­பு­லங்கள், கலா­நி­லை­யங்கள் தொடர்­பா­கவோ எவ்­வித ஆய்­வு­களோ விசா­ர­ணை­களோ மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. இவற்­றுக்­காக வேண்­டியும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

இந்த விசா­ரணைக் குழுக்­களில் அங்கம் வகிக்க வேண்­டி­ய­வர்கள் தொடர்­பான ஆலோ­ச­னை­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் முக்­கி­யஸ்­தர்­களும் அழைக்­கப்­பட வேண்டும். எதிர்­கா­லத்­திலும் இது போன்ற வன்­மு­றைகள் நடை­பெ­று­வதை தடுப்­ப­தற்கும் இன நல்­லு­றவை வளர்ப்­ப­தற்கும் நீண்­ட­கால திட்­டங்கள் வகுக்­கப்­பட வேண்டும். இதற்­காக முஸ்லிம் சமூகம் தனது ஒத்­து­ழைப்பை என்றும் நல்க காத்­தி­ருக்­கி­றது.

அனைத்து சமூ­கங்­களும் ஒற்­று­மைப்­பட்டு, பரஸ்­பர புரிந்­து­ணர்­வுடன் சமய நல்­லி­ணக்­கத்­துடன் வாழும் ஒரு சமா­தான பூமி எமக்கு அவ­சியம். அதற்கு தடை­யாக அமையும் அர­சியல் சுய­ந­ல­வா­தி­களை மக்கள் அனை­வரும் தெளி­வாகப் புரிந்து கொண்டு அவற்றை நிரா­க­ரித்து சமய, மொழி, இன வேறு­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் கைகோர்த்து வீறுநடை போட வேண்டும். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்ற மனநிலையுடன் பாசத்தால் கட்டுண்டு வாழ்வோமாக! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.