புதிய அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­பட்­டது

0 989

ஒக்­டோபர் 26 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் ஸ்தாபிக்­கப்பட்ட அர­சாங்கம் நீதி­மன்ற தீர்ப்­பை­ய­டுத்து வலு­வி­ழந்த நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று நியமனம் பெற்றனர்.

நேற்­றுக்­காலை  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால  சிறி­சேன  முன்­னி­லையில் இவர்கள் சத்­தியப் பிர­மாணம்  செய்து கொண்­டனர். இதன்­போது  பாது­காப்பு, சட்­டம்–­ஒழுங்கு, மாகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு எவ­ருக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை. குறித்த அமைச்­சுகள் தொடர்ந்தும் ஜனா­தி­பதி வசம் வைத்­துள்ளார்.

பெரும்­பாலும் நேற்­றைய தினம் பத­வி­யேற்ற அமைச்­சர்கள் ஏற்­க­னவே வகித்த அமைச்சுப் பத­வி­க­ளுக்கு மேல­தி­க­மாக அமைச்­சுக்கள் இணைக்­கப்­பட்­டுள்ள.

முஸ்லிம் அமைச்­சர்­க­ளான கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கும் மேல­தி­க­மாக அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­பட்­டன. இதே­வேளை, முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹலீ­முக்கு வழங்­கப்­பட்­டது.

புதிய அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு 36  பேரின் பெயர்­பட்­டியல் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஜனா­தி­ப­திக்கு  நேற்று முன்­தினம் மாலை அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த 36  பேரின்  பெயர்ப்­பட்­டி­யலில்  8 பேரின் பெயரை  நீக்­கி­விட்டு  ஏனைய 28  பேரை அமைச்­சர்­க­ளாக நிய­மிப்­ப­தற்கு ஜனா­தி­பதி  உடன்­பட்டே இந்த நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

அமைச்­சர்­க­ளாக  நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு  ஐக்­கிய  தேசியக் கட்­சி­யினால் பிரே­ரிக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள்  சரத் பொன்­சேகா,  பாலித ரங்கே பண்­டார ஆகிய  இரு­வரின்  பெயர்கள்  மற்றும் ஸ்ரீலங்கா  சுதந்­தி­ரக் ­கட்­சி­யி­லி­ருந்து அரச தரப்­புக்கு மாறிய  லக் ஷ்மன்   சென­வி­ரத்ன, விஜித்  விஜய முனி­சொய்சா  ஏ.எச்.எம். பௌசி  மற்றும் பிய­சேன  கமகே  ஆகி­யோரின்  பெயர்கள்  ஜனா­தி­ப­தி­யினால்  அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

புதிய அமைச்­ச­ரவை நிய­மனம் தொடர்­பாக  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  மற்றும் பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கி­டையில் நேற்று  முன்­தினம் இரவு அவ­சர கலந்­து­ரை­யாடல் ஒன்று ஜனா­ப­தியின்  உத்­தி­யோக வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. இந்தக் கலந்­து­ரை­யா­டலில் ராஜித சேனா­ரத்ன, ரஞ்ஜித் மத்­தும பண்­டார மற்றும் நவீன் திசா நாயக்க ஆகி­யோரும்  கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நேற்று காலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­சர்­களின் பதவிப் பிர­மாணம் இடம்­பெற்­றது.

அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­களின் விப­ரங்கள்

  1. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க – தேசிய கொள்­கைகள், பொரு­ளா­தார அலு­வல்கள், மீள் குடி­யேற்றம், புனர்­வாழ்வு, வட­மா­காண அபி­வி­ருத்தி, தொழிற்­ப­யிற்சி, திறன் அபி­வி­ருத்தி மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சர்
  2. ஜோன் அம­ர­துங்க – சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி, வன­சீ­வ­ரா­சிகள் மற்றும் கிறிஸ்­தவ சமய அலு­வல்கள் அமைச்சர்
  3. காமினி ஜய­விக்­ரம பெரேரா – புத்­த­சா­சனம் மற்றும் வடமேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர்
  4. மங்­கள சம­ர­வீர – நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர்
  5. லக் ஷ்மன் கிரி­யெல்ல – அரச தொழில் முயற்சி, கண்டி மர­பு­ரி­மைகள் மற்றும் கண்டி அபி­வி­ருத்தி அமைச்சர்
  6. ரவூப் ஹக்கீம் – நகர திட்­ட­மிடல், நீர்­வ­ழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்
  7. திலக் மாரப்­பன – வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர்
  8. ராஜித சேனா­ரத்ன – சுகா­தாரம், போச­ணை மற்றும் சுதேச மருத்­து­வத்­துறை அமைச்சர்
  9. ரவி கரு­ணா­நா­யக்க – மின்­சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்­தக அபி­வி­ருத்தி அமைச்சர்
  10. வஜிர அபே­வர்த்­தன – உள்­ளக, உள்­நாட்­ட­லு­வல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர்
  11. ரிஷாத் பதி­யுதீன் – கைத்­தொழில், வாணி­பத்­துறை, நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றல் மற்றும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்சர்
  12. பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க – பெரு­ந­க­ரங்கள், மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர்
  13. நவீன் திசா­நா­யக்க – பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர்
  14. பீ. ஹரிசன் – விவ­சாயம், கிரா­மிய பொரு­ளா­தாரம், பண்ணை வள அபி­வி­ருத்தி, நீர்ப்­பா­சனம், மீன்­பிடி மற்றும் நீரியல் வள அபி­வி­ருத்தி அமைச்சர்
  15. கபீர் ஹாசிம் – நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி, பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்சர்
  16. ரஞ்சித் மத்­தும பண்­டார – பொது­நிர்­வாக, அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர்
  17. கயந்த கரு­ணா­தி­லக – காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு
  18. சஜித் பிரே­ம­தாச – வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர்
  19. அர்­ஜுன ரண­துங்க – போக்­கு­வ­ரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர்
  20. பழனி திகாம்­பரம் – மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வசதி மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சர்.
  21. சந்தி­ராணி பண்­டார – மகளிர், சிறுவர் அலு­வல்கள் மற்றும் உலர் வலய அபி­வி­ருத்தி அமைச்சர்
  22. தலதா அது­கோ­ரள – நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர்
  23. அகில விராஜ் காரி­ய­வசம் – கல்வி அமைச்சர்
  24. எம்.எச்.அப்துல் ஹலீம் – தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சர்
  25. சாகல ரத்­நா­யக்க – துறை­மு­கங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
  26. ஹரீன் பெர்னாண்டோ – தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
  27. மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
  28. தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
  29. மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான, தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர்
    -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.