உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையொன்று தேவை

ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் முயீஸ் வஹாப்தீன் வலியுறுத்து

0 381

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கு மூன்று வரு­டங்கள் கடந்து விட்­டன. இத்­தாக்­குதல் தொடர்­பாக சர்­வ­தேச பங்­கு­பற்­று­த­லுடன் பார­பட்­ச­மற்ற, சுயா­தீ­ன­மான விசா­ரணை நடாத்­தப்­பட வேண்­டு­மென நாங்கள் கோரிக்கை விடுக்­கிறோம்.

தாக்­கு­தலின் பின்பு அப்­பாவி முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­டனர். அப்­பாவி முஸ்­லிம்கள் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை எதிர்­கொள்­ளலாம். ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மை­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­கரின்  எதிர்­கால அறிக்­கையில் இவ்­வி­வ­காரம் தொடர்­பான முன்­னேற்­றங்கள் தொடர்பில் தெரி­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென நாம் எதிர்­பார்க்­கிறோம் என ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 54 ஆவது கூட்­டத்­தொ­டரில் உரை­யாற்­றிய கண்­டியைச் சேர்ந்த முயீஸ் வஹாப்தீன் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்; “ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் உயர் ஸ்தானி­கரின் இலங்­கையில் மனித உரி­மைகள் தொடர்­பான அறிக்­கையை நாம் வர­வேற்­கிறோம். சர்­வ­தேச சமூகம் இதில் கவனம் செலுத்த வேண்டும். இலங்­கையின் பொரு­ளா­தார பிரச்­சினை, ஊழல், அதி­கார பர­வ­லாக்கல் என்­பன பற்றி பேசப்­ப­ட­வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாகும். இலங்கை அர­சாங்­கத்தின் அறி­வித்­தலை நாம் கவ­னத்­திற்­கொண்­டுள்ளோம். அதா­வது சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்பில் எதிர்­கால திட்டம் பற்றி இலங்கை அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.
மக்­களின் அனைத்து பிரச்­சி­னைகள் தொடர்பிலும் அரசாங்கம்  கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நீதியையும் சமாதானத்தையுமே எதிர்பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.