ஜனாதிபதியின் தீர்மானத்தில் எமக்கு நம்பிக்கையில்லை

காலத்தையும் மக்கள் பணத்தையும் விரயம் செய்யாத வகையில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம் என முஸ்லிம், கிறிஸ்தவ தரப்புகள் வலியுறுத்து

0 609

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் பிரித்­தா­னிய சனல் 4 தொலைக்­காட்சி வெளி­யிட்ட ஆவ­ணப்­படம் குறித்­த­தான உண்­மை­நி­லைமை தொடர்பில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்ற ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தை நம்ப முடி­யாது என முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ தரப்­புகள் தெரி­வித்­துள்­ளன.

கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம், தாக்­கு­தலின் பின்­ன­ணியில் அர­சியல் இருப்­ப­தா­கவும் இதனால் ஜனா­தி­ப­தியின் கூற்றில் முஸ்­லிம்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லை என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
அத்­துடன், கத்­தோ­லிக்க சபை  யின் ஊடகப் பேச்­சாளர் அருட்­தந்தை சிறில் காமினி பர்­ணாந்து, ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்­திற்­க­மைய அமைக்­கப்­படும் குழுவால் பக்­கச்­சார்பற்ற விசா­ரணைகளை முன்­னெ­டுக்க முடி­யாது எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

எம்.எச்.ஏ ஹலீம்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்­காட்சி வெளி­யிட்ட ஆவ­ணப்­ப­டத்தின் உண்மை நிலையை அறிய பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு மற்றும் விஷேட ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­படும் என்ற ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு நம்­பிக்­கை­யில்லை. சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றே தேவை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட அறிக்கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள்  தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் தெரி­விக்­கப்­ப­டாத பல திடுக்­கிடும் உண்­மைகள் அஸாத் மெள­லா­னா­வினால் சனல் 4க்குத் தெரி­விக்­கப்­பட்டுள்ளது. சனல் 4 ஆவ­ணப்­படம் வெளி­யா­னதும் அர­சாங்­கத்தைப் பிர­தி­நி­திப்­ப­டுத்தும் பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழம்பிப் போயுள்­ளார்கள்.

அஸாத் மெள­லானா வெளி­நாட்டில் அடைக்­கலம் பெற்றுக் கொள்­வதற்காக இவ்­வாறு பொய்­களைக் கூறி­யுள்ளார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர கூறு­கிறார்.

சனல் 4 ராஜ­பக்ஷ குடும்­பத்தின் எதிரி இத­னாலே இவ்­வா­றான ஆவ­ணப்படமொன்றை வெளி­யிட்­டுள்­ளது என நாமல் ராஜ­பக்ஷ கூறு­கிறார். ஜனா­தி­பதி எல்லா விப­ரங்­க­ளையும் வெளி­யிட முடி­யாது என்று கூறு­கிறார். இவ்­வாறு எல்­லோரும் குழம்பிப் போயி­ருக்­கி­றார்கள்.

அத்­தோடு அஸாத் மெள­லானா ஏன் பல வரு­டங்கள் கழித்து இவ்­வாறு சனல் 4 க்குத் தெரி­வித்­துள்ளார் என்­ப­தையும் ஆராய வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் கிறிஸ்­தவ மக்­களும் முஸ்லிம் மக்­க­ளுமே அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இத்­தாக்­கு­தலின் பின்­னணி அர­சி­யலைக் கொண்­டது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனவே உள்ளுர் தெரி­வுக்­குழு மூலமோ ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­குழு மூலமோ உண்­மையைக் கண்­ட­றிய முடி­யாது. சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றே இது தொடர்பில் நடத்­தப்­பட வேண்டும். என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அருட்­தந்தை சிறில் காமினி

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­பதி நிய­மிக்கத் தீர்­மா­னித்­துள்ள குழுவும் நியா­ய­மான பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கமாட்­டாது.முன்­னெ­டுக்­கவும் முடி­யாது என கத்­தோ­லிக்க சபையின் ஊடகப் பேச்­சாளர் அருட்­தந்தை சிறில் காமினி பர்­ணாந்து தெரி­வித்துள்ளார்.

நேற்று முன்­தினம் கொழும்பில் இடம்­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­பதி குழு­வொன்று நிய­மிப்பேன் உரிய விசா­ரணை நடத்துவேன் என தெரி­வித்­தி­ருப்­பது நகைப்­புக்­கு­ரி­ய­தாகும்.குழு நிய­மனம் மக்­களை ஏமாற்­று­வ­தற்­கான செயற்­பா­டாகும்.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்பில் ஏற்­க­னவே விசா­ர­ணைகள் இடம் பெற்­றுள்­ளன.இந்­நி­லையில் இதற்­கென பாரா­ளு­மன்றக் குழு அல்­லது ஓய்­வு­பெற்ற நீதி­ப­தியின் தலை­மை­யி­லான ஒரு குழு நிய­மிப்­ப­தா­னது மக்­களின் பணத்தை வீண­டிப்­ப­தாகும். அத்­தோடு மக்­களை ஏமாற்­று­வ­தாகும். எனவே இதனை விடுத்து சுயா­தீ­ன­மான சர்­வ­தேச விசா­ரணைக் குழு­வொன்றின் மூலம் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.