ஜனாஸா எரிப்பு : அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும்

சபையில் ஹக்கீம் கோரிக்கை

0 652

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)

கொவிட் தொற்றில் மர­ணித்த முஸ்­லிம்­களின் சட­லங்­களை எரிப்­ப­தற்கு எடுத்த பிழை­யான நட­வ­டிக்கை தொடர்பில் அர­சாங்கம் பகி­ரங்க மன்­னிப்புக் கோர வேண்டும் என முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் வேண்­டு­கோள்­வி­டுத்தார்.

மஹிந்த ராஜபக்ஷ பிர­த­ம­ராக இருந்த போது இந்த விட­யங்கள் பரி­சீ­லிக்­கப்­பட வேண்டும் என தெரி­வித்­தி­ருந்தார். சட­லங்­களை எரிப்­ப­தற்கு விஞ்­ஞான ரீதியில் எந்த ஆதா­ரமும் இருக்­க­வில்லை. எந்த நாடும் இந்த நட­வ­டிக்­கையை பின்­தொ­ட­ர­வில்லை. மக்­களின் மத உணர்­வு­க­ளுக்கு எதி­ரா­கவே இந்த விடயம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.
எனவே கொவிட் சடலம் எரிப்பானது வெறுப்பு நட­வ­டிக்­கை­யா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் சிலர் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றனர். எனவே சுகா­தார அமைச்சர் என்­ற­வ­கையில் இந்த நட­வ­டிக்­கைக்கு நீங்கள் ஏன் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோர முடி­யாது? என்றும் ரவூப் ஹக்கீம் இதன்­போது கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, கொவிட் சட­லங்கள் எரிக்­கப்­பட்­ட­மைக்­காக எங்­க­ளுக்கு மன்­னிப்பு கேட்க முடியும். அதில் பிரச்­சினை இல்லை. ஆனால் இந்த தீர்­மா­னத்­துக்­கான காரணம் என்ன? யார் பிழை செய்­தது என தேடிப்­பார்க்க வேண்டி இருக்­கி­றது. சர்­வ­தே­ச­மா­கவும் இருக்­கலாம் வேறு யாரா­கவும் இருக்­கலாம். என்­றாலும் சட­லங்கள் எரிக்­கப்­பட்ட விட­யத்தை நானும் மிகவும் உணர்வு பூர்­வ­மான விட­ய­மென ஏற்றுக் கொள்­கிறேன். அதனால் இது தொடர்­பாக ஆராய்ந்து, இது தொடர்­பாக மேலு­மொரு குழு அமைப்­ப­தற்கு முடி­யு­மான சாத்­தி­யக்­கூறு தொடர்­பா­கவும் கவனம் செலுத்தி, இதன் சட்­டத்­தன்மை தொடர்­பா­கவும் தேடிப்­பார்ப்பேன்.

அதே­நேரம் ஜனா­தி­ப­தி­யு­டனும் கலந்­து­ரை­யாடி கொவிட் குழு மற்றும் அதன் செயற்­பா­டு­களின் தீர்­மா­னங்கள் தொடர்­பாக ஆராய்ந்து அதன் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுப்பேன்.

கொவிட் தொழி­நுட்ப குழுவின் நட­வ­டிக்­கைகள் மற்றும் அதன் தீர்­மா­னங்கள் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறேன். அதன் பிர­காரம் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாகவும் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.