இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம்: 13 வேறு வகையில் திருத்தப்பட வேண்டும்

0 480
  • மாகாணங்களை இணைக்கும் அதிகாரத்தை நீக்கி ரத்துசெய்க
  • நிலம், குடியேற்ற அதிகாரங்களை மத்திய அரசிடம் வழங்குக
  • மு.கா. சார்பில் அமைச்சர் நஸீர் ஜனாதிபதிக்கு கடிதம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அதி­காரப் பகிர்வை முஸ்­லிம்கள் ஆத­ரிக்­கின்­றனர், ஆனால் குறிப்­பாக 13வது திருத்தம் வேறு வகை­யிலும் திருத்­தப்­பட வேண்டும் என சுற்­றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
அத்­துடன், மாகா­ணங்­களை இணைக்கும் அதி­கா­ரத்தை நீக்கி அர­சி­ய­ல­மைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்­ய­வேண்டும் எனவும் ‘நிலம் மற்றும் குடி­யேற்றம்’ தொடர்­பான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக மத்­திய அர­சுக்கு வழங்­கப்­படல் வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மேலும், இலங்கை முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள சமூ­கங்­களின் பங்­கேற்பு இல்­லாமல் இனப் பிரச்­சி­னைக்­கான எந்­த­வொரு தீர்வும், அது 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வதன் மூலமோ அல்­லது வேறு வழி­யிலோ அமைந்­தாலும் ஒரு­போதும் நிலை­யான தீர்­வாக இருக்க முடி­யாது

அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
1988 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 3 ஆம் திகதி இயற்­றப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் கருத்­துக்­களைக் கோரும் உங்­க­ளுக்கு, நாங்கள் எங்கள் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வான ஒரே­யொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, அதன் பிரதித் தலை­வ­ராக (1) மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நான். கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக கீழே குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களை முன்­வைக்க விரும்­பு­கின்றேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் (மற்றும் சிங்­கள) மக்­க­ளுடன் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட கலந்­து­ரை­யா­டலை நடத்­தாது 13ஆவது திருத்தம் தொடர்­பாக 2023 ஆகஸ்ட் 9 புதன்­கி­ழமை அன்று ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் விசேட அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டது ஏன் என்­பது தொடர்பில் மக்கள் பிர­தி­நி­தி­களால் எங்­க­ளிடம் வின­வப்­பட்­டது.

கிழக்கு மாகா­ணத்தில், மிகப்­பெ­ரிய இன-­மத சமூ­கத்தை முஸ்­லிம்கள் உள்­ள­டக்­கி­யுள்­ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் முஸ்லிம் மக்கள் மிகப்­பெ­ரிய ஒற்றை சமூ­க­மாக விளங்­கு­கின்­றனர், அவர்­களில் பெரும்­பாலாேனார் 1987 முதல் புலி­களால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டனர். சில ஆயிரக் கணக்­கானோர் கொல்­லப்­பட்­டனர். பல்­லின, பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் இலங்­கையில் இருந்து தனித் தமிழ்த் தேசத்தை உரு­வாக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் போராட்­டத்­துக்கு வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் ஆத­ர­வ­ளிக்­காத கார­ணத்­தினால் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் இன ரீதி­யாக சுத்­தி­க­ரிக்­கப்­பட்­டனர். அதன் தொடர்ச்­சி­யாக அவர்­க­ளது நிலங்கள் அப­க­ரிக்­கப்­பட்­டன, அவர்­க­ளது சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்­டன என்­பது அனை­வரும் அறிந்­தது. இலங்கை முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள சமூ­கங்­களின் சம­மான மற்றும் சமத்­து­வ­மான செயல்­மு­றைகள் மற்றும் பங்­கேற்பு இல்­லாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்­களின் ஆண்­டாண்டு கால­மாகத் தொடர்ந்து வரும் இனப் பிரச்­சி­னைக்­கான எந்­த­வொரு தீர்வும், அது 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வதன் மூலமோ அல்­லது வேறு வழி­யிலோ அமைந்­தாலும் ஒரு­போதும் நிலை­யான தீர்­வாக இருக்க முடி­யாது.

ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய விசேட உரையில் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்­பான தனது குறிப்­பு­களில் வட­ப­குதி தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்தைப் பாது­காப்­பதே தமது நோக்­க­மாகும் என தெரி­வித்­தமை பலரால் எமது கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. நாடு பிள­வு­படக் கூடா­தென்­ப­தற்­காக நிலத்­தையும் உயிர்­க­ளையும் இழந்து பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்­லிம்­களைப் புறக்­க­ணித்து, ஒரு சமூ­கத்­துக்கு ஆத­ர­வாக அவ்­வாறு தெரி­வித்­த­மை­யா­னது அதிர்ச்­சி­ய­ளிக்கும், ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பார­பட்­ச­மான செயற்­பா­டாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது. நாட்டில் உள்ள அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் இன-­மத அடிப்­ப­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வை காண்­ப­தற்கு இரண்டு மாகா­ணங்­க­ளி­லு­முள்ள மூன்று பிர­தான சமூ­கங்­க­ளுக்கும் சம அந்­தஸ்து வழங்கும் வகையில் பார­பட்­ச­மற்ற, உரிய நடை­மு­றையை கைக்­கொள்­வது ஜனா­தி­ப­தியின் கட­மை­யாகும் என மக்கள் பிர­தி­நி­திகள் கருத்­து­களை முன்­வைத்­துள்­ளனர்.

* வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அதி­காரப் பகிர்வை முஸ்­லிம்கள் ஆத­ரிக்­கின்­றனர், ஆனால் குறிப்­பாக 13ஆவது திருத்தம் வேறு வகை­யிலும் திருத்­தப்­பட வேண்டும்.
* மாகா­ணங்­களை இணைக்கும் அதி­கா­ரத்தை நீக்கி அர­சி­ய­ல­மைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்­ய­வேண்டும்.
* மாகாண சபையின் 2/3 பெரும்­பான்மை அங்­கீ­கா­ரத்­துடன் மட்­டுமே நிலம் மற்றும் காணி சம்­பந்­த­மான அனைத்து அதி­கா­ரங்­களும் எந்த மாகா­ணத்­திலும் பயன்­ப­டுத்­தப்­படும் என்ற விதி­க­ளுக்கு உட்­பட்டு ‘நிலம் மற்றும் குடி­யேற்றம்’ தொடர்­பான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக மத்­திய அர­சுக்கு வழங்­கப்­படல் 1981 மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பின்­படி மாகா­ணத்தின் இன-­ மத மக்கள் தொகை விகி­தா­சாரம் மீறாத வகை­யிலும் அது அமைதல் அவ­சியம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அனைத்து பொலிஸ் அதி­கா­ரங்­களும் பிரத்­தி­யே­க­மாக மத்­திய அர­சாங்­கத்­துக்கு மட்­டுமே வழங்­கப்­பட வேண்டும், ஆனால் எந்­த­வொரு மாகா­ணத்­திலும் சட்டம் மற்றும் ஒழுங்­குக்கு பொறுப்­பா­ன­வர்­களின் எண்­ணிக்கை, 1981 மக்கள் தொகை கணக்­கெ­டுப்­பின்­படி மாகா­ணத்தின் இன-­ மத மக்கள் தொகை விகி­தத்தை பிர­தி­ப­லிக்க வேண்டும்.
* யுத்­தத்தின் போது வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் காணி­க­ளையும் சொத்­துக்­க­ளையும் பரி­சீ­லித்து மீட்­டெ­டுத்து வட­மா­காண சபை நடை­பெற்­ற­போது மேற்­கொள்ளத் தவ­றிய அனைத்து முஸ்­லிம்­க­ளி­னதும் மீள்­கு­டி­யேற்­றத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்டும். மேலும், எந்த கையிலும் எந்த வடி­வத்­திலும் முஸ்­லிம்­களுக்கெதி­ராக மேற்­கொள்­ளப்­படும் அனைத்து செயற்­பா­டு­ளையும் நிறுத்­தவும் அசா­தா­ர­ண­மான அவ­ச­ர­ நி­லையைத் தவிர்த்து, இரு மாகா­ணங்­க­ளிலும் உள்ள ஆயு­தப்­ப­டை­களின் எண்­ணிக்கை மற்றும் பங்­க­ளிப்பைக் குறைத்து, உண்­மை­யான ஆலோ­சனை செயல்­முறை மூலம் நாட்டில் உள்ள அனைத்து இன-­மத சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் ஒற்­றுமை, அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்­டுதல்.
* கிழக்கில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் கிரா­ம­வா­சிகள், குறிப்­பாக சுற்­று­வட்­டாரப் பகு­தியில் உள்ள கிரா­ம­வா­சிகள் பல­வந்­த­மாக முற்­றாக வெளி­யேற்­றப்­பட்டு, மீளக் குடி­ய­மர்­வ­தி­லி­ருந்து தடுக்­கப்­ப­டு­கின்­றனர். இந்த முஸ்­லிம்கள் முழு­மை­யாக அவர்­க­ளது சொந்த கிரா­மங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட வேண்டும்.
* பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக விதிகள்) சட்டம் நமது நாட்டில் வெற்­றி­பெ­ற­வில்லை என்­பதை நாம் ஏலவே அறிவோம். பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் இதேபோன்ற சட்டங்கள் வெற்றி பெறுவதில்லை என்பதால், முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவது முற்றிலும் தேவையற்றது. நீதிமன்றங்கள் உட்பட அதிகாரம் பெற்ற அனைத்து நிறுவனங்களாலும் நியாயமான, மற்றும் பாரபட்சமற்ற நிர்வாகத்தின் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். உலகளாவிய பார்வை என்னவென்றால், இத்தகைய சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பதிலாக சிறுபான்மையினரை மேலும் ஒடுக்குவதோடு அதிக தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும் மற்றும் நல்லிணக்கத்தையும் குலைத்து விடும். பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து நாடு வெளிவர வேண்டுமானால் இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.