இம்ரானுக்கு எதிரான சதிவலை!

0 337

எம்.என் முஹம்மத்

பா­கிஸ்தான் இஸ்லா­மியக் குடி­ய­ரசு ஆசியக் கண்­டத்தில் உள்ள அணு ஆயுத பலம் கொண்ட ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடு­களில் பா­கிஸ்தானும் ஒன்று. அதன் ஆரம்­பமும் வர­லாறும் நோவினைமிக்­கது. 200 மில்­லி­ய­னிற்கு மேல் மக்கள் தொகை உடைய பாகிஸ்தான் உலகின் ஆறா­வது மக்கள் தொகை கூடிய நாடாகும்.

முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடா­க­வுள்ள பாகிஸ்தான், தொழில்­ம­ய­மான பொரு­ளா­தா­ரத்­தையும், நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வேளாண்மைத் துறை­யையும் கொண்­டுள்­ளது. பா­கிஸ்தான் உலகில் 26 ஆவது பெரிய பொரு­ளா­தா­ர­மா­கவும் பெய­ர­ளவு மொத்த தேசிய உற்­பத்தி அடிப்­ப­டையில் 45வது பெரிய நாடா­கவும் விளங்­கு­கின்­றது. உலகில் விரை­வாக வளர்ந்து வரும் நாடு­களில் ஒன்­றா­கவும் பாகிஸ்தான் உள்­ளது.

பாகிஸ்­தானின் முதன்மை பிரச்­சினைகளாக தீவி­ர­வாதம், ஏழ்மை, கல்­வி­யின்மை, அர­சியல் ஸ்திரத்­தன்மையின்மை போன்ற கார­ணி­களைக் குறிப்­பி­டலாம்.

பாகிஸ்­தானின் அர­சி­யலில் அதன் சக்தி வாய்ந்த இரா­ணு­வத்தின் வகி­பாகம் சிக்­க­லா­னது. அந்­நாட்டின் வர­லாற்றில் எந்­த­வொரு பிர­த­மரும் அவர்­க­ளது பத­விக்­கா­லத்தை பூர­ண­மாக முடிப்­ப­தற்கு அந்த நாட்டு இரா­ணுவம் விட­வில்லை. சுல்­பிகார் அலி பூட்டோ கைது செய்­யப்­பட்டு தூக்­கி­லி­டப்­பட்டார். அவ­ரது மகள் பெனாஸிர் அலி பூட்டோ குண்டு வைத்து கொல்­லப்­பட்டார். தற்­போ­தைய பிர­த­மரின் சகோ­தரர் நவாஸ் ஷரீப் ஊழல் மோச­டியில் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்டார். இவை எல்­லா­வற்­றிற்கும் பின்னால் உள்ள மிகப் பிர­தா­ன­மான காரணி அந்த நாட்டின் இரா­ணுவம் மற்றும் இந்­திய அச்­சு­றுத்­தலும் ஆகும்.

ஆப்கான் யுத்­தத்தில் அமெ­ரிக்கா பாகிஸ்தான் ஊடாக சோவியத் ஒன்­றி­யத்தை எதிர் கொண்­டது. இந்த யதார்­த்தத்தை பேணு­வ­தற்கு புத்­தி­ஜீவித்­துவ கலந்­து­ரை­யாடல் அற்ற இரா­ணுவ பொறி­முறை அமெ­ரிக்­கா­விற்கு அவ­சி­ய­மாக இருந்­தது. இன்றும் அதே சமன்­பாடு தொடர்­கின்­றது என்­ப­துவே மிகக் கசப்­பான உண்­மை­யாகும்.

இம்­ரான்கான் பத­வி­யேற்று மிகக் குறு­கிய காலத்தில் சீன பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்­கது. அமெ­ரிக்­காவின் சக்தி வாய்ந்த ஒரு பங்­கா­ளியை இந்த உரை ஊடாக இழக்கும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யது, மட்­டு­மன்றி தெற்­கா­சிய அர­சியல் சம­னி­லையை மாற்­றி­யது. அப்­போதே இம்­ரான்கான் இலக்கு வைக்­கப்­பட்டார். அவ­ருக்கு எதி­ரான செயற்­திட்­டத்­திற்கு பின்னால் உள்ள அர­சியலை ‘லண்டன் திட்டம்’ எனக் கூறு­வதில் உண்மை இல்­லாமல் இல்லை.

மேலைத்­தேய உலகுக்கு அணு சக்தி கொண்ட இஸ்­லா­மிய உலகு ஒரு பெரும் சவா­லாக மாறு­கின்­றது. இந்­திய ஆதிக்­கத்தை குறைக்க மேலைத்­தேய சக்­தி­க­ளிற்கு பாகிஸ்தான் அவ­சி­யப்­ப­டு­கின்­றது. அதே போல் இஸ்­லா­மிய உலகை எதிர்­கொள்­வ­தற்கும் மேலைத்­தேய சக்­தி­க­ளிற்கு பாகிஸ்தான் தேவைப்­ப­டு­கி­றது. எப்­போதும் இந்­திய,பாகிஸ்தான் இரா­ஜ­தந்­திர சம­னிலை உறவை பேணி வந்­தது. இம்ரான் இவை எல்­லா­வற்­றையும் துடைத்­தெ­றிந்தார் .

நேற்று மாலை இம்­ரான்­கா­னிற்கு அவ­ரது சட்­டத்த­ர­ணிகள் மூன்று பேரை சந்­திப்­ப­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்டு ஒரு மணி நேரத்தில் இதில் ஒருவர் கைது செய்­யப்­பட்டார். இது பிரச்­சி­னையின் தீவி­ரத்தை காட்­டு­கின்­றது.
பாகிஸ்­தானின் பிரச்­சி­னையின் ஆழத்தை இம்ரான் கானின் சட்­டத்­த­ரணி ஒருவர் ‘இரா­ணுவம் இல்­லாத நாடு, இரா­ணுவம் உள்ள நாடு’ எனச் சுருக்­க­மாக சொல்­கின்றார்.

இம்­ரான்கான் கடந்த சனிக்­கி­ழமை, அரச பரி­சில்­களை விற்­பனை செய்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு, மூன்று வரு­டங்கள் சிறையில் அடைக்­கப்­பட்டு ஐந்து வரு­டங்­க­ளுக்கு அர­சியல் தடைக்கு உட்­பட்­டுள்ளார். இது 70 வய­து­டைய கானின் அர­சி­யலை முடி­விற்கு கொண்டும் வரும் தெளி­வான இலக்கைக் கொண்­டது. அவர் ராகுல் காந்­தியை விட பல­மாக வெளி­வ­ரு­வ­தற்கும் வாய்ப்பு உள்­ளது அல்­லது மங்கி வர­லா­றாக மாறும் வாய்ப்பும் உள்­ளது.

ஆனால் தேர்தல் ஒன்று சுயா­தீ­ன­மாக நடந்தால் கானின் தஹ்ரீக் இன்ஸாப் கட்சி பெரு வெற்­றி­யீட்டும் என்­ப­துவே அநேக அர­சியல் அவ­தா­னி­களின் கருத்­தாகும். மக்கள் சக்­தியும், பூலோக அர­சியல் சது­ரங்­க­ வி­ளை­யாட்டு வெற்றி பெறும் என்­பது தெரி­வ­தற்கு நீண்ட நாள் எடுக்­காது.

கானிற்கு எதி­ராக 50க்கு மேற்­பட்ட வழக்­குகள் தொட­ரப்­பட்­டி­ருப்­பதன் முக்­கிய பின்­னணி கான் பாகிஸ்­தானின் அர்துகான் ஆக மாறக் கூடாது என்­ப­தாகும்.
கான் பன்­னாட்டு நாணய நிதி­யத்தின் பிணை­யெ­டுப்பின் மூலம் செலுத்தும் வர­வு­செ­லவு சம­நிலை நெருக்­க­டியை நிவர்த்தி செய்தார். நிதிப் பற்­றாக்­கு­றையைக் குறைக்க பாது­காப்புச் செல­வு­களை மட்­டுப்­ப­டுத்­தினார். இதன்­மூலம் சில பொது­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு வழி­வ­குத்தார்.

கான் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கினார். இவைகளை ஒரு நாட்டில் செய்வது எவ்வளவு சவால் மிக்கது என்பது கானின் அரசியல் உலகிற்கு சொல்லும் மிகப் பெரிய செய்தியாகும்.

அரசியல்,பொருளாதார இரு துறைகளில் பட்டம் பெற்றவர். சிறந்த விளையாட்டு வீரர், ஒரு விளையாட்டு வீரரிற்கு உள்ள தன்னம்பிக்கையுட் , வெற்றி பெற முடியும் என்ற அவரது நம்பிக்கை யதார்த்தமே உலக அரசியல் போக்கை மாற்றக் கூடியது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.