முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: நியாயமான திருத்தமே மேற்கொள்ள வேண்டும்

ஒன்றுபடுவோம் என்கிறது உலமா சபை

0 284

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கருத்து முரண்­பாடு இல்­லாத எல்­லோரும் உடன்­பட்ட காதி முகாமை முறையில் நியா­ய­மான திருத்­தங்கள் வர­வேண்டும்.

இத்­தி­ருத்­தங்­களை நாம் அனை­வரும் சேர்ந்து மேற்­கொள்ள வேண்டும்.
முரண்­பா­டான விட­யங்­களில் உல­மாக்­களின் கருத்­தையும் சமூ­கத்­தி­னது கருத்­தையும் பெற்று ஒட்­டு­மொத்த கருத்­தோடு உலமா சபை பயணிக்க இருக்­கி­றது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் தமது நிலைப்­பாட்­டினை விளக்­கு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்­கி­டையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்பில் உலமா சபை அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டுள்­ளது.

அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தொடர்பில் தமது நிலைப்­பாடு எது­வாக இருப்­பினும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா மற்றும் ஏனைய முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களால் ஏகோ­பித்து தீர்­மா­னிக்­கப்­பட்ட முன்­மொ­ழி­வு­க­ளுக்கு தாங்கள் உறு­து­ணை­யாக நிற்­ப­தோடு சமூ­கத்தின் நலன் மற்றும் கருத்­தொ­ரு­மைப்­பாட்டை கருத்தில் கொண்டு இத்­தி­ருத்தம் தொடர்­பாக எட்­டப்­படும் ஏகோ­பித்த முடி­வு­க­ளுக்கு கூட்­டி­ணை­வோடும் புரிந்­து­ணர்­வோடும் செயற்­ப­டு­வ­தாக முஸ்லிம் கவுன்ஸில் உறு­தி­ய­ளித்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட கலந்­து­ரை­யா­டலில் உலமா சபையின் பதில் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாசிம் ஸுரி, பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், பொரு­ளாளர் கலா­நிதி ஏ.ஏ.அஸ்வர், உப­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­னர்கள் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புர்ஹான், அஷ்ஷெய்க் எஸ்.எல். நவ்பர், அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நாளிம், அஷ்ஷெய்க் ரிபாஹ் ஹஸன், அஷ்ஷெய்க் எம்.என்.எம்.ஸைபுல்லாஹ் என்­போரும் முஸ்லிம் கவுன்ஸில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் எம்.டீ.எம்.ரிஸ்வி, முப்தி ஹாஷிம், டாக்டர் மரீனா தாஹா ரிபாய் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.