இனப்பிரச்சினை தீர்வு விவகாரம்: முஸ்லிம் தரப்புகள் ஒரே நிலைப்பாட்டுடன் ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட வேண்டும்

0 466

13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்துவது தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை கோரியுள்ள நிலையில், இது விட­ய­மாக முஸ்லிம் தரப்­புகள் சமூக விவ­கா­ரங்­களில் ஒரே நிலைப்­பாட்டுடன் ஜனா­தி­ப­தியை சந்­திக்க வேண்டும் என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான், வலி­யு­றுத்­தினார்.

அத்­தோடு, முஸ்லிம் அர­சியல் தரப்­புகள் ஒன்­றி­ணைந்து திட்­ட­மிட்டு செயற்­ப­டு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சினை தீர்வுப் பொறி­முறை ஊடாக முஸ்லிம் தரப்­புக்கும் நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுக்க முடியும் எனவும் அப்துர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அர­சியல் தீர்வு பேச்­சு­வார்த்­தைகள் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் வகிக்கும் முஸ்லிம் கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கு அவர் கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

அந்த கடி­தத்தில், 13வது திருத்­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அதி­கார பர­வ­லாக்கல் விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ச்­சி­யான முனைப்­பினை காட்டி வரு­கிறார். தமிழ் தரப்­பி­ன­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள், இந்­திய பிர­த­ம­ரு­ட­னான உயர்­மட்ட கலந்­து­ரை­யாடல், சர்வ கட்சி மாநாடு என அவ­ரது முனைப்­புகள் தொடர்ச்­சி­யாக இடம் பெற்­றுள்­ளன.

அர­சியல் தீர்­வு­களை பேசு­கின்ற அதே­வேளை தமது மக்­களின் சம­கால பிரச்­சி­னை­ தொடர்­பிலும் தமிழ் தரப்பு ஜனா­தி­ப­தி­யுடன் மிகத் தெளி­வா­கவும் தொடர்ச்­சி­யா­கவும் பேசி வரு­கின்­றனர். அதன் விளை­வாக காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் சிலரின் விடு­தலை என சில இடைக்­கால தீர்­வு­க­ளையும் அவர்கள் பெற்றுக் கொண்­டுள்­ளனர். இது தொடரில் மற்­று­மொரு வேண்­டு­கோ­ளினை ஜனா­தி­பதி இப்­போது முன் வைத்­துள்ளார்.

13 வது திருத்த அமு­லாக்கம் தொடர்பில் தத்­தமது இறுதி அபிப்­பி­ரா­யங்­களை எழுத்து மூல­மாக வழங்­கு­மாறு அர­சியல் கட்­சி­க­ளிடம் தற்­போது அவர் கோரி­யுள்ளார்.

அர­சியல் தீர்­வினை பொறுத்­த­வ­ரையில் ஒவ்­வொரு தரப்பும் தமது நிலைப்­பா­டு­களை தீர்க்­க­மாக முன் வைத்து வரு­கின்­றனர். அந்த வகையில் நமது மக்கள் சார்­பாக தீர்க்­க­மாக பேசு­வ­தனை இனி மேலும் தாம­தப்­ப­டுத்த முடி­யாது.  அதே வேளை,  ‘இது ஒன்றும் நடக்கப் போவ­தில்லை’ என இந்த முனைப்­பு­களை புறக்­க­ணிக்­கவும் முடி­யாது. ஏனெனில்,  தீர்­வுகள் எட்­டப்­ப­டா­விட்­டாலும் கூட ஒவ்­வொரு அர­சியல் பேச்சு வார்த்­தை­களின் போதும் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற- பேசப்­ப­டு­கின்ற விட­யங்­களே எதிர்­கால தீர்­வு­க­ளுக்­கான அர­சியல் அத்­தி­வா­ரங்­க­ளாக மாறு­கின்­றன.

இந்த அதி முக்­கிய அரசியல் காலகட்டத்தில் நாம் நமது நிலைப்பாடுகளை தீர்க்கமாக மட்டுமன்றி ஒருமித்த குரலிலும் பேச வேண்டி உள்ளது.  இதனை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது தொடர்பான சில முக்கிய ஆலோசனைகளை உங்களோடு நேரடியாக கலந்துரையாட விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.