மைத்­திரி – கோத்தா கொலை சதி விவ­காரம்: நாமல் குமா­ரவின் தொலை­பே­சி­யி­லி­ருந்து அழிக்­கப்­பட்ட 39 ஜி.பி. தர­வுகள் கண்­டு­பி­டிப்பு

0 949

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ, சி.சி.டியின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தின் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய ஊழல் தடுப்பு படை­ய­ணியின் நட­வ­டிக்கை பணிப்­பாளர் நாமல் குமா­ரவின் கைய­டக்க தொலை­பே­சியில் இருந்து அழிக்­கப்­பட்­டுள்ள பெருந்­தொகை தர­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

சர்ச்­சைக்­கு­ரிய குறித்த தொலை­பேசி குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் கையேற்­கப்­பட்ட நிலையில் நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் ஹொங்கொங் நாட்டின் டேட்டா எக்ஸ்பேர்ட் எனும் நிறு­வன ஆய்­வு­கூ­டத்தில் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட போது இந்த தக­வல்கள் மீள பெறப்­பட்­ட­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக்க லொக்­கு­ஹெட்டி நேற்று நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். அதன்­படி அந்த தொலை­பே­சியில் இருந்து அழிக்­கப்­பட்­டி­ருந்த 39 ஜி.பி. கொள்­ள­ளவு கொண்ட தக­வல்கள், குரல் பதி­வுகள் மீளப்­பெ­றப்­பட்டு பென் ட்ரைவ் ஒன்றில் சேமிக்­கப்­பட்டு, குறித்த நிறு­வ­னத்தால் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த பென் ட்ரைவையும் அது தொடர்­பி­லான 60 பக்க அறிக்­கை­யி­னையும் நீதி­மன்­றுக்கு சமர்­ப்பிப்­ப­தா­கவும் அவர் அறி­வித்தார்.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று கோட்டை பிர­தான நீதிவான் ரங்க திசா­நா­யக்க முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே அவர் இதனை தெரி­வித்தார். இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் சி.ஐ.டி.யில் மனித படு­கொ­லைகள் விசா­ரணை அறையில் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக்க லொக்கு ஹெட்டி அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சித் முன­சிங்க உள்­ளிட்ட குழு­வினர் மன்றில் ஆஜ­ரா­கினர்.

இதன்­போது, ஏற்­க­னவே இந்த விவ­கா­ரத்தில் கைது­செய்­யப்­பட்­டுள்ள இந்­திய பிர­ஜை­யான மேசலி தோமஸ் மற்றும் பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வுக்கு பொறுப்­பா­க­வி­ருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோர் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா விசேட அம்­பி­யுலன்ஸ் வண்­டி­யி­னூ­டாக மன்­றுக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் அவர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பதி­ரன நீதி­மன்றில் பிர­சன்­ன­மானார். வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது ஏற்­க­னவே முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா சார்பில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த பிணை கோரிக்கை மீதான தீர்ப்பை நீதிவான் அறி­வித்தார். அதன்­படி, 1979 ஆம் ஆண்டின் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ் நாலக சில்­வா­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என அறி­வித்த நீதிவான், எனினும் அச்­சட்­டத்தின் 7 (2) ஆம் பிரிவின் கீழ் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை ஏற்­றுக்­கொள்­வ­தாக அறி­வித்தார்.

அதன்­படி, பிணைச் சட்­டத்தின் விதி விதா­னங்­களின் பிர­காரம் பயங்­க­ர­வாத தடைச் சட்ட குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள ஒருவர் தொடர்பில் பிணை வழங்கும் அதி­காரம் நீதிவான் நீதி­மன்­றுக்கு இல்லை, என்­பதை சுட்­டிக்­காட்­டிய நீதிவான் ரங்க திசா­நா­யக்க பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்­வாவின் பிணை கோரிக்­கையை நிரா­க­ரித்தார்.

அதன்­படி, இவ்­வி­சா­ர­ணைகள் நிறை­வுறும் அவரை அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டு, இது குறித்த அடுத்­த­கட்ட விசா­ர­ணை­களை எதிர்­வரும் 2019 ஜன­வரி 2 ஆம் திகதிக்கு ஒத்­தி­வைத்தார்.

இதன்­போது, விசா­ரணை நிலைமை குறித்து மன்­றுக்கு உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக்க லொக்கு ஹெட்டி தெளிவு படுத்­தினார்.

‘இந்த விவ­கா­ரத்தில் சர்ச்­சைக்­கு­ரிய நாமல் குமா­ரவின் தொலை­பே­சியை நாம் ஹொங்கொங் எடுத்துச் சென்று சோதனை செய்தோம். அதன்­போது, 39 ஜி.பி கொள்­ள­ளவு கொண்ட தக­வல்கள் அழிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீள­மைக்­கப்­பட்டு பெறப்­பட்­டுள்­ளது. அவற்றை ஒரு பென் ட்ரைவில் இட்டு ஆய்­வா­ளர்கள் கொடுத்­துள்­ளனர். அது தொடர்பில் 60 பக்க அறிக்­கையும் உள்­ளது. அவற்றை நாம் இன்று நீதி­மன்­றிடம் சமர்­ப்பிக்­கின்றோம். அதன் பின்னர் அந்த பென் ட்ரைவில் உள்ள குரல் பதி­வு­களை நீதி­மன்றம் ஊடாக பிரதி செய்து அவற்றை தனித் தனி­யாக கேட்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யுள்­ளது. இதற்­கான அனு­ம­தியை தரு­மாறு கோரு­கின்றோம்.

அதே­நேரம் இந்த விவ­கா­ரத்தின் முதல் சந்­தே­க­ந­ப­ராக கைது­செய்­யப்­பட்ட இந்­திய பிரஜை தோமஸ் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மிக விரைவில் நிறைவு செய்து மன்­றுக்கு அறி­விப்போம்” என்றார்.

இதன்­போது, பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அஜித் பதி­ரன, சி.ஐ.டியினர் சந்­தே­க­ந­பரை கைது­செய்து விட்டு அவரை விளக்­க­ம­றி­யலில் வைத்து அவ­ருக்கு எதி­ரான சாட்­சி­களை தேடி கொண்­டி­ருப்­ப­தா­கவும் இது தேர்­தலை இலக்­காக கொண்­டது எனவும் அடுத்த தேர்தல் வரை இவ்­வி­சா­ரணை நிறைவு பெறாது எனவும் தெரி­வித்தார்.

இதற்கு சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்கு ஹெட்டி கடும் எதிர்ப்பு வெளி­யிட்டார். குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு என்­பது தேர்­தல்­க­ளையோ அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளையோ இலக்­காக கொண்டு செயற்­படும் நிறு­வனம் அல்ல எனவும், முறைப்­பா­டொன்று கிடைக்கும் பட்­சத்தில் சுயா­தீ­ன­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிறு­வ­னமே சி.ஐ.டி. எனவும் அவர் இதன்­போது தெரி­வித்தார்.

இந்­நி­லையில் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்­வாவின் பிணைக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் சார்பில் மற்­றொரு கோரிக்கை மன்றில் முன்­வைக்­கப்­பட்­டது.

நாலக சில்­வாவின் முதல் பிள்ளை டெங்கு காய்ச்­ச­லினால் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­த­தா­கவும், தற்­போது அவ­ரது ஒரு பிள்­ளை­யான இரண்­டா­வது மகன் டெங்கு காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்டு நீர்­கொ­ழும்பு நவ­லோக்க வைத்­தி­ய­சா­லையில் கடந்த ஐந்து நாட்­க­ளாக சிகிச்சை பெறு­வ­தா­கவும், சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ர­னவால் வைத்­திய அறிக்­கை­யுடன் மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது. மக­னுடன் தொடர்ச்­சி­யாக காலத்தை செலவிடும் நாலக சில்வா தற்போது விளக்கமறியலில் உள்ளதால் டெங்கு காய்ச்சலில் மகனை மீட்க அவரது மானசீக ரீதியிலான தாக்கங்களை குறைக்க வேண்டுமென வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் அதனை கருத்தில் கொண்டு நாலக சில்வாவுக்கு அவரது மகனை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

இதனை ஆராய்ந்த நீதிவான் ரங்க திசாநாயக்க டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மகனை பார்வையிட உரிய வசதிகளை சந்தேகநபரான நாலக சில்வாவுக்கு செய்து கொடுக்கும் படி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவித்தல் விடுத்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.