வீட்டில் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் மஸ்ஜித் சம்மேளனம் பிரதமருடன் பேச்சு

0 286

முஸ்­லிம்கள் தமது வீடு­க­ளி­லேயே மர­ணிக்கும் ஜனாஸாக்களை உரிய நேரத்தினுள் அடக்கம் செய்­வதில் ஏற்­படும் சிக்­கல்கள் மற்றும் தேவையான ஆவ­ணங்களை தயார் செய்வது தொடர்­பாக நாடு முழு­வதும் உள்ள முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் சவால்­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக அகில இலங்கை மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் அண்­மையில் பிர­த­மரும் பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சருமான தினேஷ் குண­வர்­த­னவை சந்­தித்து பேச்சு நடத்­தி­யது.

அத்துடன் மேற்­படி விவ­காரம் தொடர்­பாக பிர­த­மரின் கீழ் வரும் பொது நிர்­வாகம் மற்றும் உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­ச­கத்தில் முறைப்­பாடு ஒன்றையும் சமர்­ப்பித்­தது.

சம்­மே­ளன பிரதிநிதிகள் பிர­த­ம­ரிடம் இது குறித்து விளக்­க­ம­ளிக்­கையில், கடந்த பல மாதங்­க­ளாக முஸ்லிம் சமூகம் இந்த இக்­கட்­டான சூழ்­நி­லை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கின்­றனர். குறிப்­பாக கொவிட் தொற்று நோய்­களின் போது உருவாக்­கப்­பட்ட பல நெறி­மு­றைகள் கார­ண­மாக தொற்று நோய்க்குப் பிந்­தைய காலத்­திலும் தத்­த­மது வசிப்­பி­டங்­க­ளுக்குள் நிகழும் இறப்­பு­களை அந்­தந்த கிராம சேவகரின் கவ­னத்­திற்குக் கொண்டு வர வேண்டும். அரு­கி­லுள்ள பொலிஸ் கிளை­க்கு அறி­விக்க வேண்டும் போன்ற விட­யங்­க­ளினால் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வதில் தாமதம் ஏற்­பட்டு இறந்­த­வர்­களின் குடும்­பங்கள் மிகவும் கஷ்டங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய அவல நிலை ஏற்­ப­டு­கி­றது. அதே நேரம் இஸ்­லா­மியக் கோட்­பாட்டின்படி முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் இறந்த 24 மணி நேரத்­திற்குள் அடக்கம் செய்­யப்­பட்ட வேண்­டிய கட்­டா­யமும் இருக்­கி­றது என வலி­யு­றுத்­தப்­பட்­டது.

தேசிய முஸ்லிம் பேர­வையின் (NMA) ஆலோ­ச­னையின் கீழ், அகில இலங்கை மஸ்­ஜித்கள் சம்­மே­ளனத்தின் தலைவர் அஸ்லம் உத்மான் மற்­றும் செயலாளர் கே.ஆர்.ஏ.சித்தீக், உள்­ளிட்டோர் பிர­த­மரை சந்­தித்து ஆலோ­ச­னை­களை முன்­வைத்­தனர்.

இந்த பின்­ன­னி­யி­லேயே, இறப்­பிற்­கான காரணம் மற்றும் மருத்­து­வரால் வழங்­கப்­பட்ட மருத்­துவ சான்­றி­தழின் சரி­யான மற்றும் பொருத்­த­மான ஆவ­ணங்கள் போது­மா­ன­தாக இருக்கும் பட்­சத்தில் மேற்­படி ஜனாஸா அடக்கம் செய்­வ­தற்கும் மேலும் இறந்து 7 நாட்­க­ளுக்குள் இறப்பு சான்­றிதழ் பெற­மு­டியும் என்ற வர்த்­த­மானி அறி­வித்­தலை பிர­தமர் செய­லகம் வெளி­யிட்­டுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மின்றி இலங்­கையின் அனைத்து மக்­க­ளுக்கும் நன்மை பயக்கும் இந்த முடிவு மிகவும் வர­வேற்­கத்­தக்கது என அகில இலங்கை மஸ்­ஜித்கள் சம்­மே­ளன தலைவர் அஸ்லம் உத்மான் தெரி­வித்­தார். இலங்­கை­யர்­க­ளா­கிய நாங்கள் எங்கள் உற­வி­னர்­களை, குறிப்­பாக அவர்கள் வய­தா­ன­வர்­க­ளா­கவும், உடல் நலக்­கு­றை­வா­கவும் இருக்கும் போது அவர்­களைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக வளர்க்­கப்­பட்­ட­வர்கள். மரணம் ஏற்பட்டால், குடும்பங்கள் அந்தந்த மத மற்றும் மார்க்க நம்பிக்கைகளின் படி இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு எந்த இடையூறும் அல்லது தாமதமும் இல்லாமல் தமது காரியங்களை விரைவாகச் செய்ய இந்த அறிவிப்பு உதவுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.