ஷுஹதாக்கள் தினம்; முஸ்லிம்களின் இழப்புகளின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நாளாக பிரகடனம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கமும் சர்வதேசமும் தீர்வு தர வேண்டும் என காத்தான்குடி சம்மேளனம் வேண்டுகோள்

0 249

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
இன்­றைய தினம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள காத்­தான்­குடி பள்ளி வாயல் படு­கொ­லையின் 33 ஆவது வருட ஷுஹ­தாக்கள் தினத்தை முஸ்­லிம்­களின் இழப்­புக்­களின் அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்தும் நாளாக காத்­தான்­குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.
30 வருட யுத்­தத்தில் முஸ்லிம் சமூ­கமும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை சரி­யாக புரிந்­து­கொண்டு சர்­வ­தே­சமும் இலங்கை அர­சாங்­கமும் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவ்­வ­மைப்பு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை உட்­பட முஸ்­லிம்­களின் பல்­வேறு பிரச்­சினை­க­ளையும் அர­சாங்­கத்­துக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் சொல்லும் தின­மா­கவும் ஆகஸ்ட் 3ஆம் திக­தியை பயன் படுத்­து­மாறும் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களை காத்­தான்­குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் கேட்­டுள்­ளது.

இது தொடர்­பாக காத்­தான்­குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன மாநாட்டு மண்­ட­பத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை இரவு இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே சம்­மே­ளனம் இந்த வேண்­டு­கோளை விடுத்­துள்­ளது.

காத்­தான்­குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­னத்தின் தலைவர் ரவூப் ஏ மஜீத் தலை­மையில் நடை­பெற்ற இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் சம்­மே­ளன உறுப்­பி­னர்கள், காத்­தான்­குடி வர்த்­தக சங்க பிர­தி­நி­திகள், முச்­சக்­கர வண்டி சார­திகள் சங்க பிர­தி­நி­திகள், ஷுஹ­தாக்கள் நிறு­வன பிர­தி­நி­திகள், பள்­ளி­வாயல் படு­கொலை இடம் பெற்ற காத்­தான்­குடி முதலாம் மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் நிரு­வா­கிகள் என பலரும் கலந்து கொண்­டனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரி­வித்த சம்­மே­ளன செய­லாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி காத்­தான்­குடியின் இரண்டு பள்­ளி­வ­ாயல்­களில் தொழுது கொண்­டி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் படு­கொலை செய்­யப்­பட்ட தின­மாகும். இந்தப் படு­கொலை இடம்­பெற்று 33 ஆண்­டுகளாகின்றன. இது ஆகஸ்ட் 3ம் திகதியன்று நினைவு கூறப்­ப­டு­கி­றது.

கடந்த யுத்­தத்­தினால் முஸ்லிம் சமூ­கமும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட சமூ­க­மாகும். அதி­க­மாக இழந்­தி­ருக்­கின்றோம். ஆனால் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எந்த ஒரு ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கையும் தீர்வும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இது விட­யத்தில் முஸ்லிம் சமூகம் கவ­லை­யோடு இருக்­கி­றது.

1990 ஆம் ஆண்டு குருக்கள் மடத்தில் வைத்து நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட அந்த இடம் இது வரை தோண்­டப்­ப­டா­ம­லி­ருக்­கின்­றது. அதேபோன்று கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் யுத்­தத்தின் பின்னர் காணிப்­பி­ரச்­சி­னைக்கு கடு­மை­யாக முகம் கொடுத்து வரு­கின்­றார்கள்.

யுத்த காலத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் 33 முஸ்லிம் கிரா­மங்­களை இழந்­துள்­ளது. அதற்­கான இழப்­பீ­டுகள், மீள்­கு­டி­யேற்ற வச­திகள் இன்னும் சரி­யான முறையில் கிடைக்கப் பெற­வில்லை என்­பது ஒரு கவ­லை­யான விட­ய­மாகும்.

அந்த அடிப்­ப­டையில் ஆகஸ்ட் 3 ஆம் திகதி பள்­ளி­வாயல் படு­கொலை நாளான ஷுஹ­தாக்கள் தினத்­தன்று அர­சாங்கம் உட்­பட சர்­வ­தே­சத்­துக்கு எமது பிரச்­சி­னை­களை முன்வைக்­கின்ற தின­மாக நாங்கள் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்கள் எதிர் நோக்­கு­கின்ற அனைத்து வகை­யான பிரச்­சி­னை­க­ளையும் சர்­வ­தே­சத்­துக்கு கொண்டு செல்­கின்ற நாளாக இந்த ஆகஸ் 3ம் திக­தியை (இன்­றைய தினத்தை) பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே படு­கொலை செய்­யப்­பட்டு ஷஹீதா­ன­வர்­களின் இழப்­பினால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் சமூகம் பல்­வேறு துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் அனு­ப­வித்து வந்­துள்­ளது. அந்த அடிப்­ப­டையில் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களும் சரி­யாக நோக்­கப்­படல் வேண்டும். அர­சாங்­கமும் சர்­வ­தே­சமும் எமது பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்து வைக்க வேண்டும்.

அதேபோன்று ஜனாதிபதி தீர்வை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு பலதரப்பட்ட தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் இழப்புக்களை சந்தித்துள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்தோடும் பேசவேண்டும். 13 வது திருத்த சட்ட மூலமாக இருந்தாலும் எந்த தீர்வாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கும் ஏற்றதான தீர்வாக முன்வைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.