வில்பத்து விவகாரம்: ரி­ஷாத்துக்கு எதிரான மேன் முறையீட்டு மன்றின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு

0 283

(எம்.எப்.அய்னா)
பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்கா காட்டுப் பகு­தியில், கல்­லாறு சர­ணா­ல­யத்தில் காட்டை அழித்­தமை தொடர்பில் முன்னாள் அமைச்­சரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அழிக்­கப்­பட்ட வனப்­ப­கு­தியை மீள உரு­வாக்க, அவர் அப்­ப­கு­தியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் எனவும், மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அளித்த தீர்ப்பை இடை நிறுத்தி உயர் நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடை உத்­த­ரவை பிறப்­பித்­தது.

ஆப்தீன் சட்­டத்­த­ர­ணிகள் நிறு­வனம் ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் குறித்த தீர்ப்­புக்கு எதி­ராக முன் வைத்த விஷேட மேன்­மு­றை­யீட்­டினை விசா­ர­ணைக்கு ஏற்றே உயர் நீதி­மன்றம் இந்த இடைக்­கால தடை உத்­த­ரவை பிறப்­பித்­தது.

நீதி­ய­ரசர் விஜித் மலல்­கொட தலை­மையில், நீதி­ய­ர­சர்­க­ளான காமினி அம­ர­சே­கர மற்றும் பிரி­யந்த பெர்­ணான்டோ ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்­தது.
இந்த சிறப்பு மேன் முறை­யீட்டு மனுவில் 8 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

அதன்­படி சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம், வன பாது­காப்பு திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், மத்­திய சுற்­றாடல் பாது­காப்பு அதி­கார சபை, வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், மன்னார் மாவட்ட செய­லாளர், சுற்­றா­டல் துறை அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகிய 8 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

நேற்று, மேன்­மு­றை­யீட்டு மனு­தா­ர­ரான ரிஷாத் பதி­யு­தீ­னுக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான ருஷ்தி ஹபீப், ரிஸ்வான் உவைஸ் உள்­ளிட்­டோ­ருடன் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, வழக்­கோடு தொடர்­பு­பட்ட காட்டுப் பகுதி மக்­களை மீளக்குடி­யேற்றல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி செய­லணி ஊடாக வேறு­ப­டுத்­தப்­பட்ட பகுதி என சுட்­டிக்­காட்­டினார்.

தனது சேவை பெறுநர் எந்த சட்ட விரோத செய­லையும் செய்­ய­வில்லை எனவும், சட்ட சித்­தாந்­தங்­களை தவ­றாக புரிந்­து­ கொண்டு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக தீர்ப்பை அளித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரிட் மனு தாக்கல் செய்த சுற்றுச் சூழல் நீதிக்­கான மையம் சார்பில் சட்­டத்­த­ரணி ரவீந்த்­ரநாத் தாபரே விட­யங்­களை முன் வைத்தார்.

அனைத்து விட­யங்­க­ளையும் ஆர­ாய்ந்த உயர் நீதி­மன்றம், மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­புக்கு இடைக்­கால தடை விதித்­த­துடன், உயர் நீதி­மன்றின் விசா­ர­ணைகள் முடியும் வரை அத்­தடை அமுலில் இருக்கும் என அறி­வித்­தது.

முன்­ன­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளுக்கு உட்­பட்ட விடயம் நடந்­த­தாக கூறப்­படும் காலப்­ப­கு­தியில், தான் வீட­மைப்பு அமைச்­சரோ அல்­லது வனப் பாது­காப்பு அமைச்­ச­ரா­கவோ இருக்­க­வில்லை என விஷேட மேன் முறை­யீட்டு மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள ரிஷாத் பதி­யுதீன், தான் காட­ழிப்பு மற்றும் மீள் குடி­ய­மர்த்தல் நட­வ­டிக்­கை­களை குறித்த பகு­தியில் சட்ட விரோ­த­மாக முன்­னெ­டுக்­க­வில்லை எனவும், அவ்­வாறு தான் செயற்­பட்­ட­மைக்­கான எந்த சான்­று­களும் இல்­லாத நிலையில் குறித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்ற தீர்ப்பை செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கு­மாறும் அம்மனு ஊடாக கோரியுள்ளார்.

கடந்த 2019 நவம்பர் 19 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந் நிலையில் உயர் நீதிமன்றின் விசாரணைகள் எதிர்வரும் 2024 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.