ஹம்தி! ‍உயிர் காக்கும் மருத்துவமனையே உயிரெடுத்த ஒரு குழந்தையின் கதை

0 392

எம்.எப்.அய்னா

ஹம்தி பஸ்லிம். 3 வரு­டங்­களும் 3 மாதங்­க­ளு­மான குழந்தை. எதுவும் அறி­யாத இந்த குழந்­தையின் மரணம் இன்று பல­ரையும் பேச­வைத்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது எனலாம்.

ஆம், கடந்த வெள்ளிக்கிழமை ( ஜூலை 28) ஹம்தி இந்த உல­கத்­துக்கு விடை கொடுத்த பின்னர், முழு நாடும் அவ­ருக்­காக கண்ணீர் வடித்­தது. இன்று ஹம்­தியின் மர­ணத்­துக்கு நீதி கோரி பல சட்டப் போராட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இக்­கு­ழந்­தையின் மர­ணத்தின் பின்னால் உள்ள சம்­ப­வங்கள் மற்றும் சந்­தே­கங்­களை இக்­கட்­டுரை பேச எதிர்­பார்க்­கின்­றது.

கொழும்பு ‍ கொட்­டாஞ்­சேனை பகு­தியைச் சேர்ந்த 4 ஆண் பிள்­ளைகள் உள்ள குடும்­பத்தின் கடைக்குட்­டியே ஹம்தி. ஆரோக்­கி­ய­மான குழந்­தை­யாக உலகை கண்ட ஹம்­திக்கு, பிறந்து 9 மாதங்கள் வரையில் எந்த பிரச்­சி­னை­களும் இருக்­க­வில்லை என பெற்றோர் கூறு­கின்­றனர். 9 மாதங்­களின் பின்னர் ஹம்­தியின் அடி வயிற்றுப் பகு­தியில் அவ­தா­னிக்­கப்­பட்ட கட்­டி­யொன்று தொடர்பில் ஆரம்­பிக்­கப்­பட்ட சிகிச்­சையே சுமார் 30 மாதங்கள் வரை நீடித்து ஹம்­தியை காவு­கொண்­டது.

வயிற்றின் அடிப்­ப­கு­தியில் அவ­தா­னிக்­கப்­பட்ட அந்த கட்­டிக்கு சிகிச்­சை­ய­ளிக்க பெற்றோர் ஹம்­தியை மருத்­து­வர்­க­ளிடம் காண்­பித்த நிலையில் தான், தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றின் ஊடாக ஹம்­திக்கு சிகிச்­சை­ய­ளிக்க அறி­மு­க­மா­கி­யுள்ளார் விஷேட வைத்­திய நிபுணர் மலிக் சம­ர­சிங்க. அவ­ரது ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய ஹம்தி கொழும்பு ‍ லேடி ரிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளவில் அவர் இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

ஹம்­தியின் சிறு­நீ­ர­கங்கள் தொடர்பில் செய்­யப்­பட்ட மருத்­துவ பரி­சோ­த­னை­களில், அவ­ரது இடது பக்க சிறு­நீ­ரகம் 9 வீத செயற்­பாட்­டையும் வலது பக்க சிறு­நீ­ரகம் 91 வீத ( நல்ல நிலை) செயற்­பாட்­டையும் கொண்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்ட நிலையில், ஹம்­திக்கு அறுவை சிகிச்சை செய்து செய­லற்ற இடது பக்க சிறு­நீ­ர­கத்தை அகற்­று­வ­தற்­கான நியா­யங்கள், மற்றும் நன்­மை­களை வைத்­தி­யர்கள் பெற்­றோ­ரிடம் கூறி­யுள்­ளனர். அதன்­ப­டியே ஹம்­திக்­கான சத்­திர சிகிச்­சை­களை முன்­னெ­டுக்க பெற்­றோரின் சம்­ம­தத்­துடன் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹம்­தியின் வைத்­திய அறிக்­கை­களை ஆராய்­கின்றபோது, ஹம்­தியின் சிறு­நீ­ர­கங்கள் உண்­மை­யி­லேயே Horse shoe kidney ஆகவா இருந்­தன என்ற சந்தேகம் எழு­கின்­றது. அத்­துடன் இறு­தி­யாக சத்­திர சிகிச்­சைக்கு முன்னர் பெறப்­பட்ட மருத்­துவ பரி­சோ­தனை அறிக்­கையில் மிகத் தெளி­வாக இடது பக்க சிறு­நீ­ரகம் மட்­டுமே அகற்­றப்­பட வேண்டும் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

முதலில் சத்­திர சிகிச்­சைக்­காக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கு­மாறு ஹம்­திக்கு அறி­விக்­கப்பட்டபோதும், அது பிற்­போ­டப்­பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்ளார். இந்நிலையில் தான் விஷேட வைத்­திய நிபுணர் மலிக் சம­ர­சிங்­கவின் கட்­டுப்­பாட்டில், வைத்­தியர் நவீன் விஜேகோன் உள்­ளிட்ட சத்­திர சிகிச்சை நிபு­ணர்கள் குழு, கடந்த 2022 டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி ஹம்­தியின் செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்தை அகற்றும் சத்­தி­ர­சி­கிச்­சையை முன்­னெ­டுத்­துள்­ளது.

சத்­திர சிகிச்­சை­களின் பின்னர் அவ­சர சிகிச்சைப் பிரிவில் ஹம்தி வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவ­ரது உடல் நிலையில் முன்­னேற்றம் எதுவும் இல்­லாமல் இருக்­கவே மீள எடுக்­கப்­பட்ட ஸ்கேன் மருத்­துவ பரி­சோ­த­னை­களில் தான் அதற்­கான கார­ணமும் வெளிப்­பட்­டது. ஆம், பின்னர் செய்த ஸ்கேன் பரி­சோ­த­னை­களில் ஹம்­தியின் உடலில் சிறு­நீ­ர­கங்­களே இல்­லாமல் இருப்­பது தெரி­ய­ வந்­துள்­ளது.

இந்நிலைமை அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து பல்­வேறு மருத்­துவ பரி­சோ­த­னைகள் செய்­யப்­பட்­டும், ஹம்­தியின் செயற்­பாட்டில் இருந்த வலது பக்க சிறு­நீ­ர­கமும், செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்­துடன் சேர்த்து அகற்­றப்­பட்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அதன் பின்னர் வைத்­தியர் மலிக் சம­ர­சிங்க, நவீன் விஜேகோன், சிகிச்சை அறை பிர­தான வைத்­தியர் ரந்த்­துல ரண­வக உள்­ளிட்ட வைத்­தி­யர்கள் பெற்­றோரை அழைத்து பேசி­யுள்­ள­துடன், சத்­திர சிகிச்­சையின் போது தவறு ஒன்று நடந்­து­விட்­ட­தாக தெரி­வித்­த­தாக பெற்றோர் கூறு­கின்­றனர். அந்த தவறை சரி செய்ய முடியும் எனவும், அதற்­காக 4 மாதங்கள் கால அவ­காசம் தரு­மாறும் கோரி­யுள்ள மருத்­து­வர்கள், சிறு­நீ­ரக மாற்று சத்­திர சிகிச்சை ஒன்­றினை முன்­னெ­டுத்து வேறு ஒரு­வரின் சிறு­நீ­ர­கத்தை பொருத்தி ஹம்­தியை குணப்­ப­டுத்­து­வ­தாக பெற்­றோ­ரிடம் உறு­தி­ய­ளித்­த­தாக பெற்றோர் கூறு­கின்­றனர். ஆனால், அது ஹம்­திக்கு நடந்த விட­யங்­களை கசிய விடாமல் தடுக்க வைத்­தி­யர்கள் கையாண்ட யுக்தி என்­பது கடந்த வெள்ளிக் கிழ­மையே தெரி­ய­வந்­தது.
அதற்குள் சத்­திர சிகிச்சை செய்த பிர­தான வைத்­தியர் நவீன் விஜேகோன் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சென்­று­விட்டார்.

ஹம்­தியின் செய­லி­ழந்த இடது சிறு­நீ­ர­கத்­துடன் சேர்த்து அகற்­றப்­பட்ட நல்ல நிலையில் இருந்த வலது பக்க சிறு­நீ­ர­கத்­துக்கு என்ன ஆனது என்­பது இது­வரை தெரி­யாது. இந்த சத்­திர சிகிச்சை நடந்து 6 மாதங்­க­ளுக்கு மேல் ஆகும் நிலையில், அது தொடர்பில் குறைந்தபட்ச விசா­ரணை ஒன்­றினைக் கூட ஆரம்­பிக்­காத வைத்­தி­ய­சாலை நிர்­வாகம், ஹம்­தியின் மர­ணத்தை தொடர்ந்து எழுந்­துள்ள நிலை­மை­களை அடுத்து விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிக்கை விடுத்­துள்­ளது.

இத­னை­விட ஹம்­தியின் மர­ணத்­துக்கு காரணம், சத்­திர சிகிச்­சையின் பின்னர் ஏற்­பட்ட தொற்றுப் பரவல் என வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் வைத்­திய நிபுணர் ஜி. விஜே­சூ­ரிய குறிப்­பிட்­டுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் ஹம்­திக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­ட­றிய வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. ஹம்­தியின் நல்ல நிலையில் இருந்த சிறு­நீ­ரகம் மருத்­துவ மாபி­யாக்­களால் சட்ட விரோ­த­மாக விற்­கப்பட்­டி­ருக்­கலாம் என ஒரு சந்­தேகம் எழுப்­ப­ப்படு­கின்­றது. பெற்­றோரின் தக­வல்கள் பிர­காரம், தவ­று­த­லாக அந்த வலது பக்க சிறு­நீ­ரகம் அகற்­றப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும் அவ்­வாறு அகற்­றிய சிறு­நீ­ர‌­கத்­துக்கு என்ன நடந்­தது என்­ப­தற்கு தெளி­வான பதில் இல்லை.

ஹம்­தியின் பெற்றோர் முன் வைக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் ஒரு புறம் இருக்க மருத்­துவர் தரப்பு ஹம்­தியின் சிறு­நீ­ர­கங்கள் Horse shoe kidney ஆக இருந்­தா­கவும் அதுவே சத்­திர சிகிச்­சையின்போது இரு சிறு­நீ­ர­கங்­களும் அகற்­றப்­ப­டு­வ­த­ற்கான கார­ணி­யாக அமைந்­த­தாக நியாயம் கற்­பிக்க முற்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடிகின்­ற‌து. உண்­மை­யி­லேயே ஹம்­தியின் சிறு­நீ­ர­கங்கள் அந்­த­ வகையில் தான் இருந்­தி­ருந்தால் கூட நிச்­ச­ய­மாக சத்­திர சிகிச்­சைக்கு முன்னர் முன்­னெ­டுக்­க­ப்படும் மருத்­துவ பரி­சோ­த­னை­களில் அது தெரிந்­தி­ருக்கும். மிக அரி­தாக தெரி­யாது போவ­தற்கும் சாத்­தியம் உண்டு. ஒரு வேளை அப்­படி தெரி­ய­வில்லை என்­றாலும், சத்­திர சிகிச்சை செய்யும்போது கூட, அதை கண்­டு­பி­டித்­தி­ருக்க வேண்டும். மாற்­ற­மாக அதனை நினைத்­த­வாறு அகற்ற முடி­யாது என பெயர் குறிப்­பிட விரும்­பாத வைத்­தியர் ஒருவர் தெரி­வித்தார். அப்­படி ஏதா­வது நடந்­தி­ருந்தால் அது பாரிய மருத்­துவத் தவறு என அந்த வைத்­தியர் குறிப்­பிட்டார்.

ஹம்­தியின் வைத்­திய அறிக்­கை­களை ஆராய்­கின்றபோது, ஹம்­தியின் சிறு­நீ­ர­கங்கள் உண்­மை­யி­லேயே Horse shoe kidney ஆகவா இருந்­தன என்ற சந்தேகம் எழு­கின்­றது. அத்­துடன் இறு­தி­யாக சத்­திர சிகிச்­சைக்கு முன்னர் பெறப்­பட்ட மருத்­துவ பரி­சோ­தனை அறிக்­கையில் மிகத் தெளி­வாக இடது பக்க சிறு­நீ­ரகம் மட்­டுமே அகற்­றப்­பட வேண்டும் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

எனவே தான் ஹம்­தியின் பெற்றோர் கூறு­வதைப்போல ஒரு குற்றம் அல்­லது பாரிய மருத்­துவ தவறு இங்கு நிகழ்ந்துள்­ளதா அல்­லது மருத்­து­வ­மனை தரப்பு சொல்­வதைப்போல ஏதும் அரி­தான கார­ணிகள் உள்­ள­னவா என்­பதை உண்­மை­யான சுயா­தீ­ன­மான விசா­ரணை ஒன்­றூ­டா­கவே உறுதி செய்ய முடியும். அதன்­படி தற்­போது பொரளை பொலி­சாரால் ஆரம்­பிக்­கப்பட்­டுள்ள குற்றவியல் விசாரணை விரிவுபடுத்தப்பட்டு, நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய நுணுக்கமான விசாரணையாக அது மாற்றப்படல் வேண்டும்.
விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாகவும், இலங்கை மருத்துவ சபை ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்படல் வேண்டும்.

இதற்காக தான் ஹம்தியின் ஜனாசா கடந்த ஞாயிறன்று மாளிகாவத்தை மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட போது மையவாடிக்கு முன்பாக குடும்ப உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் சிலர் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.

நீதியான விசாரணைகள் நடைபெற்று உண்மை வெளிப்படுத்தப்படும் போது தான் அரச வைத்தியசாலைகளை நம்பியிருக்கும் அனைவரது சந்தேகங்களையும் நீக்கி சுகாதார சேவையின் தரத்தை உறுதி செய்ய முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.